வேப்பூர் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் என்பது இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் இதுவும் ஒன்றாகும்.[1] வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. குன்னம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வேப்பூரில் இயங்குகிறது.[2]
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,36,247 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 50,877 ஆக உள்ளது. மேலும் பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 212 ஆக உள்ளது. [3]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]
- அகரம் சீகூர்
- அசூர் (பெரம்பலூர்)
- அத்தியூர் (பெரம்பலூர்)
- அந்தூர்
- சு.ஆடுதுறை
- ஆண்டிகுறும்பலூர்
- எழுமூர்
- ஒதியம்
- ஒகளூர்
- ஓலைப்பாடி (பெரம்பலூர்)
- காடூர்
- கிழுமத்தூர்
- கீழப்பெரம்பலூர்
- கீழப்புலியூர்
- குன்னம் பெரம்பலூர் மாவட்டம்
- கொளப்பாடி
- சித்தளி
- சிறுமத்தூர்
- துங்கபுரம்
- திருமாந்துறை (பெரம்பலூர்)
- நன்னை
- பரவாய்
- புதுவேட்டக்குடி
- பெரியம்மாபாளையம்
- பெரியவெண்மணி (பெரம்பலூர்)
- பெருமத்தூர்
- பென்னகோணம்
- பேரளி
- மூங்கில்பாடி (பெரம்பலூர்)
- வசிஷ்டபுரம்
- வடக்கலூர் (பெரம்பலூர்)
- வயலப்பாடி
- வரகூர் ஊராட்சி, பெரம்பலூர்
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்