பெரியவெண்மணி (பெரம்பலூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரியவெண்மணி (Periyaveṇmaṇi Gram Panchayat), என்பது தமிழ்நாட்டின், பெரம்பலூர் மாவட்டத்தில், குன்னம் வட்டாரத்தில், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு ஊராட்சி ஆகும்.[1]. இது சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும், குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

2011 ஆம் ஆண்டு வரை இது வரகூர் சட்டமன்றத் தொகுதியின் கீழ் இருந்தது, தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் குன்னம் சட்டமன்ற தொகுதியின் கீழ் மாற்றப்பட்டது.[2].பெரியவெண்மணியானது வருவாய் கிராமங்களின் அடிப்படையில் கிழக்கு மற்றும் மேற்கு என பிரிக்கப்பட்டுள்ளது.[3].

இவ்வூரில் புகழ்பெற்ற பெரியவெண்மணி பெரியாண்டவர் கோயில் மற்றும் பெரியவெண்மணி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.

சிற்றூர்கள்[தொகு]

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்:

  1. சின்னவெண்மணி
  2. சின்னவெண்மணி காலனி
  3. கொத்தவாசல்
  4. கொத்தவாசல் காலனி
  5. புதுக்குடிசை

சான்றுகள்[தொகு]

  1. https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2018/04/2018042652.pdf
  2. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2019-01-13.
  3. வருவாய் கிராமங்களின் பட்டியல்