எஸ். எஸ். சிவசங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். எஸ். சிவசங்கர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும் ஆவார். தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2006 தேர்தலில் ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] பின்னர் 2011, 2021 ஆம் ஆண்டு தேர்தல்களில், சட்டமன்ற உறுப்பினராக, குன்னம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை (பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர்) அமைச்சராக பதவியேற்றார்.[3]

வாழ்க்கை குறிப்பு[தொகு]

இவரின் சொந்த ஊர் அரியலூர் ராஜாஜி நகர் ஆகும். அண்ணாமலை பல்கலைகழகத்தில் 1990 ஆம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். சிவசங்கருக்கு டாக்டர் காயத்ரிதேவி என்ற மனைவியும், சிவசரண், சிவசூர்யா என்ற 2 மகன்களும் உள்ளனர்.[4]

இலக்கியம்[தொகு]

இவரது முகநூல எழுத்துக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு “மக்களோடு நான்“ என்ற பெயரில் கிழக்கு பதிப்பத்தால் நூலாக வெளிவந்தது. அந்திமழை என்ற இதழில் விருந்தினர் பக்கத்தில் இடம்பெற்ற இவரது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இவரின் இரண்டாவது நூலாக “சோழன் ராஜா ப்ராப்தி“ என்ற பெயரில் வெளியானது. அமேசான் கிண்டில் பென் டூ பப்ளிஷ் என்ற தலைப்பில் 2019 ஆம் ஆண்டு நடத்திய போட்டியில் இவரால் எழுதப்பட்ட “தோழர் சோழன்“ என்ற நூல் இறுதிப் போட்டியில் உள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எஸ்._சிவசங்கர்&oldid=3288526" இருந்து மீள்விக்கப்பட்டது