பொன்பரப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொன்பரப்பி
சிற்றூர்
பொன்பரப்பி is located in தமிழ் நாடு
பொன்பரப்பி
பொன்பரப்பி
பொன்பரப்பி is located in இந்தியா
பொன்பரப்பி
பொன்பரப்பி
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் பொன்பரப்பி கிராமம்
ஆள்கூறுகள்: 11°16′16″N 79°14′28″E / 11.271°N 79.241°E / 11.271; 79.241ஆள்கூறுகள்: 11°16′16″N 79°14′28″E / 11.271°N 79.241°E / 11.271; 79.241
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்4,614
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்621710
வாகனப் பதிவுTN-
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)
அருகமைந்த நகரம்ஜெயங்கொண்டம்
பாலின விகிதம்1006 /
எழுத்தறிவு75.79%
தட்பவெப்பம்வெப்பம் (கோப்பென் காலநிலை வகைப்பாடு)

பொன்பரப்பி (Ponparappi), தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில், செந்துறை வட்டத்தில் அமைந்த 28 வருவாய் கிராமங்களில் ஒன்றாகும். [1]மேலும் செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பொன்பரப்பி ஊராட்சியில் அமைந்த ஒரு சிற்றூர் ஆகும்.

பொன்பரப்பி, குன்னம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

பெயர்க்காரணம்[தொகு]

சோழர்கள் காலத்திற்கு பிறகு 18ம் நூற்றாண்டுகளில் இந்த ஊரில் 'பொன்பரப்பியனான வனகோபரன்'என்னும் சோழர்கள் பரம்பரையிலிருந்து வந்து ஆட்சி செய்து வந்த சிற்றரசன் நினைவாக 'பொன்பரப்பி' என்றும், 'சோழ மன்னர்களால் குடியமர்த்தப்பட்ட சோழப்பரம்பரையினர்கள் வாழும் பகுதி' என்ற பொருளில் குடிக்காடு என்றும் இவ்வூரின் பெயர் அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பொன்பரப்பின் கிராமத்தில் 1,167 வீடுகளும், 4,754 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 79.47% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1006 பெண்கள் வீதம் உள்ளனர். பொன்பரப்பி வருவாய் கிராமத்தின் மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 17.33% மற்றும் 0.55% ஆக உள்ளனர். [2]

பொன்பரப்பில் உள்ள கோயில்கள்[தொகு]

  • சொர்ணபுரீஸ்வரர் கோயில்
  • சாமுண்டீஸ்வரி கோயில்
  • மாரியம்மன் கோயில்
  • வலம்புரி விநாயகர் கோயில்

கல்வி நிலையங்கள்[தொகு]

  • பொன்பரப்பி அரசு மேனிலைப் பள்ளி
  • பொன்பரப்பி தொடக்கப்பள்ளி
  • பொன்பரப்பிகுடிக்காடு தொடக்கப்பள்ளி
  • பொன்பரப்பி காலணி தொடக்கப்பள்ளி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்பரப்பி&oldid=2699520" இருந்து மீள்விக்கப்பட்டது