உடையார்பாளையம் வட்டம்
உடையார்பாளையம் வட்டம் , தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக உடையார்பாளையம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 99 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].
அவை,
அய்யூர், அழகாபுரம், ஆமனக்கன்தொண்டி, அம்பாவூர், அனைக்குடம், ஆண்டிமடம், அன்காரயனல்லூர் கிழக்கு, அன்காரயனல்லூர் மேற்கு, அணிகுதிச்சான் வடக்கு, அணிகுதிச்சான் தெற்கு, ஆத்துக்குறிச்சி,தேவமன்கலம், தருமசமுத்திரம், இடையார், எரவான்குடி, கோவிந்தபுத்தூர், குண்டவெளி கிழக்கு, குண்டவெளி மேற்கு, இடையக்குறிச்சி, இடங்கன்னி, இளையபெருமாநல்லூர், இலையூர் கிழக்கு, இலையூர் மேற்கு, இருகையூர், கச்சிப்பெருமாள், ஜெயங்கொண்டசோழபுரம், கடம்பூர், கோடங்குடி வடக்கு, கோடங்குடி தெற்கு, காரைக்குறிச்சி, காட்டகரம் வடக்கு, காட்டகரம் தெற்கு, காட்டாத்தூர் வடக்கு, கட்டாத்தூர் தெற்கு, கீழகுடியிருப்பு, கீழநத்தம், கோடாலிக்கருப்பூர், கோடக்கூர், கூவத்தூர் வடக்கு, கூவத்தூர் தெற்கு, குலோத்துங்கநல்லூர், குருவாலப்பர்கோயில், பாப்பாக்குடி, பெரிய வளையம், பிச்சனூர், பிராஞ்சேரி, கூவாகம், மனகெதி, மருதூர், மேலூர், முத்துசேர்வாமடம், கல்லாத்தூர், தண்டலை.
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 3,87,194 ஆகவுள்ளது.. தாழ்த்தப்பட்டோர் 87,900 ஆகவும், பட்டியல் பழங்குடியினர் 8,161 ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு 72.18% ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2011-09-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110926145102/http://www.ariyalur.tn.nic.in/DisttInf.htm.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2010-08-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100823022443/http://tnmaps.tn.nic.in/taluk.php?dcode=16.
- ↑ Udayarpalayam Taluka Population, Caste, Religion Data