உடையார்பாளையம்
| உடையார்பாளையம் | |||||
| — நகரம் — | |||||
| ஆள்கூறு | 11°11′08″N 79°17′32″E / 11.185475°N 79.292278°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | அரியலூர் | ||||
| வட்டம் | உடையார்பாளையம் | ||||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||||
| முதலமைச்சர் | விஜய்[2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | ந. மிருணாளினி, இ. ஆ. ப [3] | ||||
| பேரூராட்சி தலைவர் | மலர்விழி ரஞ்சித்குமார் | ||||
| மக்கள் தொகை | 12,688 (2011[update]) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
|
குறியீடுகள்
| |||||
| இணையதளம் | www.townpanchayat.in/udayarpalayam | ||||
உடையார்பாளையம் (ஆங்கிலம்: Udayarpalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பேரூராட்சி ஆகும். உடையார்பாளையம் நகரம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
உடையார்பாளையம் என்பது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஒரு புனித யாத்திரைத் தலமாகும்; இந்தத் தலத்தைப் பார்வையிட வெளிநாடுகளில் இருந்தும் மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். இந்தப் புனித யாத்திரைத் தலம், அதன் ஆன்மீக மகிமை, தொன்மை, மற்றும் ஸ்தல வரலாற்றின் சிறப்பால் பக்தர்களை ஈர்த்து வருகிறது. இந்து மதத்தின் மிகவும் புனிதமான தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
உடையார்பாளையம் நகரில் புகழ்மிக்க கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் அருள்மிகு பயறணீநாத சுவாமி ஆலயம், அருள்மிகு திரு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆலயம், அருள்மிகு திரு வில் வளைத்த விநாயகர் ஆலயம் சிறப்பு வாய்ந்தது. இக்கோவில்கள் பல 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்குள்ள உடையார்பாளையம் அரண்மனை மிகவும் தொன்மை வாய்ந்தது.[4].
அமைவிடம்
[தொகு]திருச்சி - சிதம்பரம் பிரதான சாலையில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தின் உடையார்பாளையம் தாலுகா தலைநகர் - உடையார்பாளையம் பேரூராட்சி என்பது பக்தி, பண்பாடு மற்றும் வர்த்தகத்தின் முக்கிய மையமாக விளங்குகிறது. உடையார்பாளையம் பேரூராட்சி, இதற்கு அருகிலுள்ள முக்கிய நகரங்களாக அரியலூர் தென்மேற்கு திசையில் சுமார் 38 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஜெயங்கொண்டம் 8 கிலோமீட்டர், கும்பகோணம் 30 கிலோமீட்டர் மற்றும் விருத்தாச்சலம் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளன.
உடையார்பாளையம் தாலுகா தலைநகர் - உடையார்பாளையம் பேரூராட்சி என்பது ஆன்மீக, கலாச்சார மற்றும் வர்த்தகச் சந்திப்பு மையமாக, பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் பெரும் ஈர்ப்பாக விளங்குகிறது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]12 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 48 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கும்,[5] சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, இப்பேரூராட்சி 3,155 வீடுகளும், 12,688 மக்கள்தொகையும் கொண்டது.[7][8]
பெயர்க்காரணம்
[தொகு]உடையார்பாளையம் தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய ஜமீன்களில் ஒன்றாகும். வீரத்திற்கும் தியாகத்திற்கும் கல்விக்கும் பெயர் பெற்ற பல ஜமீன்தார்கள் இப்பகுதியை சிறப்பாக ஆண்டுள்ளனர். காலாட்கள் தோழ உடையார்கள் தலைமையில் 350-க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஆட்சி செய்யப்பட்ட சமஸ்தானத்தின் தலைநகரமாக இருந்ததால், இந்நகரம் “உடையார்பாளையம்” என்று பெயர் பெற்றது.
புராண காலத்தில் வழங்கப்பட்ட பெயர்கள்
[தொகு]1.தென் நைமிசாரணியம்: புராணங்களில் சொல்லப்படும் மூல நைமிசாரணியம் வட இந்தியாவில் உள்ளது. ஆனால், உடையார்பாளையம் தலபுராணத்தில், இந்தப் பகுதி (உடையார்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காடுகள் நிறைந்த பகுதி) முனிவர்கள் தவம் செய்த இடமாகவும், புராணங்கள் ஓதப்பட்ட இடமாகவும் கருதப்படுவதால், இது "தென் நைமிசாரணியம்" என்று போற்றப்படுகிறது.
உடையார்பாளையம் தலபுராணத்தில் 'நைமிசாரணியம்' என்பது அந்த ஊரின் புனிதத் தன்மையை உயர்த்திச் சொல்லும் ஒரு அடைமொழியாகும். வடக்கே உள்ள நைமிசாரணியத்தைப் போலவே, இங்கேயும் இறை ரகசியங்களும் புராணங்களும் போதிக்கப்பட்டன என்பதே இதன் உட்பொருள்.
2.ஜில்லிகா வனம் (ஜில்லிகாரண்யம்): 'ஜில்லிகா' என்றால் சமஸ்கிருதத்தில் 'வண்டு' என்று பொருள். முற்காலத்தில் இப்பகுதி அடர்ந்த காடாக இருந்தபோது, வண்டுகள் அதிக அளவில் ரீங்காரம் செய்ததால் இப்பெயர் பெற்றது.
3.திருப்புலிவனம்(வியாக்ரபுரி): சமஸ்கிருதத்தில் 'வியாக்ரம்' என்றால் 'புலி' என்று பொருள். எனவே, வடமொழியில் இத்தலம் 'வியாக்ரபுரி' என்று அழைக்கப்படுகிறது. இதன் தமிழாக்கமே 'திருப்புலிவனம்' (திரு + புலி + வனம்) ஆகும். முற்காலத்தில் இப்பகுதி அடர்ந்த காடாக இருந்தபோது, புலிகள் நடமாட்டம் அதிகம் இருந்ததாகவும், அவை இறைவனை வழிபட்ட வனமாக இது கருதப்பட்டதாலும் 'திருப்புலிவனம்' என வழங்கப்பட்டது.
4.பத்ராரணியம்(இலந்தை வனம்): சமஸ்கிருதத்தில் 'பத்ரம்' என்றால் 'இலந்தை மரம்' என்று பொருள். 'ஆரண்யம்' என்றால் 'வனம்' அல்லது 'காடு' என்று பொருள். எனவே, 'பத்ராரணியம்' என்பதற்கு 'இலந்தை மரங்கள் நிறைந்த காடு' என்பது அர்த்தம்.புராண காலத்தில் முனிவர்கள் மற்றும் சித்தர்கள் அமைதியான சூழலில் தவம் செய்ய விரும்புவார்கள். இத்தலத்தின் இலந்தை வனப்பகுதி தவம் செய்வதற்கு உகந்த இடமாக இருந்ததால், பல முனிவர்கள் இங்கு தங்கி இறைவனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
5.பிரம்மபுரி / பிரம்மபுரம்: படைப்புக் கடவுளான பிரம்மன், இத்தலத்து இறைவனை வழிபட்டு தனது தொழிலைப் புரியும் ஆற்றலைப் பெற்றதாகக் கருதப்படுவதால் இப்பெயர் பெற்றது.
6.இராகவன்புரி / இராமஈசுவரம்: இராமபிரான் (இராகவன்) வனவாசத்தின் போது இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்ட காரணத்தால் இப்பெயர்களால் அழைக்கப்படுகிறது.
7.அங்காரகபுரி / அங்காரகேசன்புரி / அங்காரகேசன்புரம்: நவக்கிரகங்களில் ஒருவரான அங்காரகன் (செவ்வாய் பகவான்), தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்ற தலம் என்பதால் இப்பெயர் உருவானது.
8.வணிகேசன்புரி / வணிகேசன்புரம்: வணிகர்கள் மற்றும் செல்வந்தர்கள் (வணிகேசன்) வழிபட்டு மேன்மையுற்ற தலம் என்பதைக் குறிக்கிறது.
9.திருமுற்கபுரி / திருமுற்கபுரம்: முற்காலத்தில் முனிவர்களும் ஞானிகளும் தவம் மேற்கொண்ட புனித நிலம் இது. முற்கல முனிவர் தொடர்புடைய தவம் செய்த புனித இடமாக விளங்கியதால், இவ்விடம் “முற்கபுரி” என்ற பெயரால் அழைக்கப்பட்டது.
10.பயறணீச்சுரம் / பயறணீசுவரம் / பயறணீநாதர்புரம்: இத்தலத்தின் மூலவர் 'பயறணீசுவரர்' (பயறு + அணி + ஈஸ்வரர்). மிளகை பயறாக மாற்றிய திருவிளையாடல் நிகழ்ந்த தலம் என்பதால் இறைவன் பெயராலேயே இவ்வூர் அழைக்கப்படுகிறது.
11.பயறணீமகாலிங்கபுரி / பயறணீமகாலிங்கபுரம்: புராண வர்ணனைகளின்படி, இத்தலத்தில் அருள்பாலிக்கும் சிவலிங்கம் அளவுகடந்த தெய்வீக ஒளியையும் அபூர்வமான சக்தியையும் தன்னகத்தே கொண்டதாகப் போற்றப்படுகிறது. பக்தர்கள் மனமார வேண்டுகின்ற அனைத்துப் பிரார்த்தனைகளையும் அருளால் நிறைவேற்றும் திருவுளம் உடைய இந்த மகிமைமிகு லிங்கத்தின் காரணமாக, இத்தலம் ‘மகா தலம்’ எனப் புனித பெருமையைப் பெற்றுள்ளது.
கருவறையில் அரிய ஒளியுடன் வீற்றிருக்கும் லிங்கத் திருமேனி, தரிசிக்கும் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் மயக்கும் வண்ணம் அபார கம்பீரத்துடனும் ஆனந்தமிகு அழகுடனும் விளங்குகிறது. இதன் தெய்வீக மேன்மையைக் குறிக்கவே ‘மகா’ (பெருமை, உயர்வு) என்ற சிறப்புப்பெயருடன் ‘மகாலிங்கம்’ என அன்போடு அழைக்கப்படுகிறது.
பிற பெயர்கள்
[தொகு]இந்நகரம் அதன் வரலாறு, ஆட்சி மரபு மற்றும் தொழில்துறை சிறப்புகளால் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது.
- புனித யாத்திரைத் தலம் - முற்கால முனிவர்கள் தவம் செய்த புனித நிலமாக விளங்கும் உடையார்பாளையம், ஆன்மீக ஒளி ஒளிரும் தெய்வீக தலமாக புகழ்பெற்றது. பக்தி பரவசம் தரும் இந்த திருப்புனித தலம், அதன் மகிமை மற்றும் தொன்மை காரணமாக உலகம் முழுவதிலும் உள்ள பக்தர்களை ஈர்க்கிறது.
- கோயில்கள் நகரம் – இந்நகரில் பல்வேறு பழமையான கோயில்கள் அமைந்துள்ளதால் இப்பெயர் வழங்கப்பட்டது.
- காஞ்சி பல்லவர்கள் நகரம் – காஞ்சி பல்லவர் காலத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்பினால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
- பாளையக்காரர் நகரம் – பாளையக்காரர்கள் ஆட்சி செய்த முக்கியமான நகரமாக இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது.
- பட்டு நகரம் – பாளையக்காரர் ஆட்சிக் காலத்தில் இந்நகரம் சிறந்த பட்டு உற்பத்தி மையமாக விளங்கியது.
- இரண்டாம் காஞ்சிபுரம் – பாளையக்காரர் காலத்தில் காஞ்சிபுரத்தை ஒத்த கலாச்சாரம் மற்றும் முக்கியத்துவம் பெற்றிருந்ததால் இந்நகரம் “இரண்டாம் காஞ்சிபுரம்” என அழைக்கப்பட்டது.
- ஜமீன்தார் நகரம் – ஜமீன்தார்களின் ஆட்சி மற்றும் செல்வாக்கால் இந்நகரம் இப்பெயரால் அறியப்பட்டது.
- உடையார்பாளையம் - கலைகளின் தட்சிண கயிலாயம் –உடையார்பாளையம் ஜமீன் (காலாட்கள் தோழ உடையார்) ஆட்சிக் காலத்தில், நகரம் கலை, இசை மற்றும் இலக்கியங்களுக்குப் புகலிடமாக விளங்கியது. காசி மற்றும் கைலாயத்திற்குச் சென்று இறைவனை வழிபட முடியாதவர்கள், தட்சிண கயிலாயமான உடையார்பாளையத்திற்கு வந்து அங்குள்ள அறிஞர்களையும், இறைவனையும் தரிசிப்பதாகக் கருதப்பட்டது. இசை மையம்: தஞ்சாவூருக்கு இணையாக இசைக்கலைஞர்கள் இங்கு வாழ்ந்ததால், இது "இசையின் தட்சிண கயிலாயம்" எனப் போற்றப்பட்டது. சுப்பராம தீட்சிதர் தனது நூலில் இந்த ஊரின் ஆன்மீக மற்றும் கலைச் சிறப்பை இவ்வாறே உருவகப்படுத்துகிறார்.
- தாலுகா நகரம் - உடையார்பாளையம், அரியலூர் மாவட்டத்தின் முக்கிய தாலுகா நகரமாக, ஆன்மீக ஒளியும் பாரம்பரியச் செழிப்பும் கொண்ட இடமாக விளங்குகிறது. இங்கு விவசாயம், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் சந்தைகள் வளமாக செயல்படுகின்றன. சுற்றியுள்ள கிராமங்களின் வரவுகளை ஒருங்கிணைக்கும் முக்கிய மையமாக இது அமைந்துள்ளது. பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பக்தி நிகழ்வுகள் இந்நகரின் ஆன்மீக மகிமையை மேலும் உயர்த்துகின்றன. உலகம் முழுவதிலிருந்தும் பயணிகள் மற்றும் பக்தர்கள் இந்த நகரத்தின் ஒளி, மகிமை மற்றும் ஆன்மீக சக்தியை அனுபவிக்க வருகிறார்கள்.
சோழர் – பல்லவர் காலக் கலை நகரம்
[தொகு]அரியலூர் மாவட்டத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உடையார்பாளையம் விளங்குகிறது.
பண்டைய காலத்தில் இந்நகரம் பாளையக்காரர்களின் ஆட்சிக்கான தலைமையகமாக இருந்தது. சுற்றியுள்ள பல கிராமங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால், இந்நகரம் அரசியல் மற்றும் பொருளாதார செயல்பாட்டில் முக்கிய இடம் பெற்றது. அந்தக் காலத்தின் நினைவாக இன்றளவும் நகரில் உள்ள அரண்மனை சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. அதேபோல், அந்த அரச வம்சத்தினர் இன்றும் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
நகரத்தின் உள்கட்டமைப்பு அக்காலத்திலேயே திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கு உள்ள சிவன் கோயில் அதன் பரப்பளவு மற்றும் கட்டமைப்பின் அடிப்படையில் தமிழகத்தில் முக்கிய இடத்தைப் பெற்றதாகக் கருதப்படுகிறது. தமிழகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.[சான்று தேவை] கூடுதலாக, இந்நகரில் சிதிலமடைந்த நிலையில் ஒரு பழமையான பெருமாள் கோயிலும் காணப்படுகிறது.
“காலாட்கள் தோழ உடையார்” என்ற பட்ட பெயருடன் அரியலூர் – உடையார்பாளையம் பகுதியை ஆண்ட அரசர்கள், சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அரண்மனையை கட்டியதாகக் குறிப்பிடப்படுகின்றது. அங்கு பீரங்கிகள், துப்பாக்கிகள், வாள்கள், வேல்கம்புகள், அம்பாரி, பல்லக்கு போன்ற பல அரச காலப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறன.
மேலும், “தமிழ்த் தாத்தா” என்று அறியப்பட்ட உ. வே. சாமிநாத ஐயர் போன்ற அறிஞர்களுக்கு உடையார்பாளையம் அரசர்கள் ஆதரவு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
திரைப்படப் படப்பிடிப்பு
[தொகு]உடையார்பாளையம் நகரம், தனது பாரம்பரிய மற்றும் வரலாற்று சிறப்புகளால் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கான முக்கிய தளமாக உருவெடுத்து வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க படப்பிடிப்பு மையங்களில் ஒன்றாக மாறியுள்ள இந்நகரம், அதன் பழமையான கட்டிடங்கள் மற்றும் இயற்கை சூழலால் திரைப்படத் தயாரிப்பாளர்களை ஈர்க்கிறது. தமிழ்த் திரைப்படத் துறையுடன் சேர்ந்து, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் மும்பை போன்ற பகுதிகளின் திரைப்படத் துறைகளும் இங்கு தொடர்ந்து படப்பிடிப்புகளை மேற்கொண்டு வருகின்றன.
முக்கிய நகர சிறப்புகள்
[தொகு]நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நகரம் – இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒருவனாக உடையார்பாளையம் குறிப்பிடத்தக்கது.
சரித்திர மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் – நீண்ட வரலாறு, புராணக் கதைகள் மற்றும் ஆன்மீக மரபுகள் இந்நகரின் புகழைக் கூட்டுகின்றன.
பயறணீநாத சுவாமி ஆலய தெப்பம் – நகரத்தின் பிரதான ஆன்மிக மற்றும் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.
600 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பல்லவர் அரண்மனை – பண்டைய காலத்து பல்லவர் கட்டுமான கலை, தேர்ந்தெடுக்கப்பட்ட நெறிமுறை கட்டமைப்பு மற்றும் சிதறிய கட்டிடப்பொருட்கள் இந்நகரின் வரலாற்று பெருமையை வெளிப்படுத்துகின்றன.
வரலாற்று மையம் – இந்திய மற்றும் தமிழ்நாடு வரலாற்றுப் பக்கங்களில் முக்கிய பங்கு பெற்றது.
தென்னிந்தியாவின் கலை மற்றும் இலக்கிய மையம் – உடையார்பாளையம், தென்னிந்தியாவின் கலை மற்றும் இலக்கியப் பரவலுக்கான முக்கிய கலாச்சார மையமாக ஒரு காலத்தில் திகழ்ந்ததாக வரலாற்றியல் ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.
கலை மற்றும் அறிவுத்தளம் – சித்தர்கள், தீட்சிதர்கள், ஞானிகள், அரசியல்வாதிகள், பகுத்தறிவாளர்கள், சான்றோர், புகழ்பெற்ற படைப்பாளிகள் மற்றும் கலைஞர்கள் வாழ்ந்த மற்றும் வளர்ந்த நகரம்.
பழமொழிகளில் உடையார்பாளையம்
[தொகு]பழமொழி: உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?
இந்த பழமொழி ஒருவரின் திறமையின்மையையும், அவர்களின் வீண் பெருமையையும் சுட்டிக்காட்டுகிறது.
பொருள்:
- ஒருவர் தனது சொந்த இடத்தில் (உள்ளூரில்) எளிதான காரியத்தை (ஓணான் பிடித்தல்) கூட செய்யத் திறனற்றவராக இருந்தால், அவர் தொலைதூர இடத்திற்கு, முன்பின் தெரியாத ஒரு பெரிய நகரத்திற்கு (உடையார்பாளையம்) சென்று கடினமான காரியத்தை (உடும்பு பிடித்தல்) எப்படிச் செய்ய முடியும்?
- சுருக்கமாக, உள்ளூரில் சிறிதளவு திறமை இல்லாத ஒருவர், வெளியூரில் பெரிய சாதனைகளைச் செய்ய முடியாது.
விளக்கம்:
- "ஓணான்" என்பது சிறிய, எளிதில் பிடிக்கக்கூடிய உயிரினம்.
- "உடும்பு" என்பது பெரிய, கடினமான உயிரினம்.
- "உடையார்பாளையம்" என்பது ஒரு பல்லவர் சமஸ்தான அரசுப் பகுதி.
இந்த பழமொழி, தற்பெருமை பேசுபவர்களை அல்லது தங்களது அடிப்படைத் திறமைகளை வளர்த்துக் கொள்ளாமல் பெரிய இலக்குகளை நோக்கிச் செல்பவர்களைக் கேலி செய்யப் பயன்படுகிறது.
உதாரணங்கள்:
- ஒருவர் தனது சொந்த ஊரில் சிறிய வியாபாரத்தை கூட வெற்றிகரமாக நடத்தத் திறனற்றவராக இருந்தால், அவர் ஒரு பெரிய நகரத்தில் பெரிய தொழிலை எப்படி நடத்த முடியும்?
- ஒருவர் தனது சொந்த வீட்டில் சிறிய வேலைகளைக் கூடச் செய்யத் திறனற்றவராக இருந்தால், அவர் ஒரு பெரிய நிறுவனத்தில் பெரிய பொறுப்புகளை எப்படி ஏற்க முடியும்?
இந்த பழமொழி, கடினமான செயல்களைச் செய்வதற்கு முன், அடிப்படைத் திறமைகளை வளர்த்துக் கொள்வது அவசியம் என்பதை உணர்த்துகிறது.
முக்கிய நிகழ்வுகள்
[தொகு]- உடையார்பாளையம் தாலுகா பெயர் போராட்டம்.
- உடையார்பாளையம் தாலுகா துப்பாக்கிச் சூடு நிகழ்வு.
நகரின் முக்கியச் சுற்றுலா இடங்கள்
[தொகு]முக்கிய கோயில்கள்
[தொகு]- அருள்மிகு நறுமலர் பூங்குழல் நாயகி உடனுறை ஸ்ரீ பயறணீசுவரர் சுவாமி திருக்கோயில்
- ஶ்ரீ தேவி பூ தேவி சமேத ஶ்ரீ பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆலயம்
- வில் வளைத்த விநாயகர் ஆலயம்
- ஆஞ்சநேயர் சுவாமி ஆலயம்
- கலியுக சித்தர் திரு இராமலிங்கசுவாமி ஆலயம் அல்லது திரு குருநாதசுவாமி ஆலயம்
- வட பத்ரகாளியம்மன் ஆலயம்
- வெள்ளைப்பிள்ளையார் ஆலயம்
- காமன் ஆலயம்
- கண்ணனூர் மகா மாரியம்மன் ஆலயம்
- ஶ்ரீ தேவி பூ தேவி சமேத ஶ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
முக்கியத் திருவிழாக்கள்
[தொகு]- திரு பயறணீநாதசுவாமி ஆலய பூஜைகள்-உற்சவங்கள்-சனிப்பெயர்ச்சி விழா-குருப்பெயர்ச்சி விழா-பிரதோச விழா-மஹா சிவராத்திரி விழா-பௌர்ணமி திருவலம்-அன்னாபிசேக விழா-தெப்பத்திருவிழா
- திரு 'கண்ணனூர்' மஹா மாரியம்மன் ஆலய தெப்பத்திருவிழா மற்றும் வானவேடிக்கை
- திரு 'சித்தேரிக்கரை' திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா
- திரு பாலமுருகன் ஆலய காவடியாட்ட திருவிழா
- 'கலியுக சித்தர்' திரு இராமலிங்கசுவாமி ஆலய காவடியாட்ட திருவிழா
- திரு வட பத்ரக்காளியம்மன் ஆலய உற்சவ திருவிழா
- திரு பெரியநாயகி அம்மன் ஆலய மண்டல பூஜைகள்
- திரு ஓம்சக்தி-ஆதிபராசக்தி ஆடி மாத மாபெரும் கஞ்சிக்கலயத் திருவிழா
- ஆடி 18 கொண்டாட்டம் - ஆடி மாதம் அருகில் உள்ள ஊர்களில் , கிராமங்களில் இருந்து இங்கு வந்து புதுமண தம்பதிகள் கொண்டாடுவது வழக்கம்
போக்குவரத்து
[தொகு]விமானப் போக்குவரத்து
[தொகு]இவ்வூருக்கு அருகிலமைந்துள்ள திருச்சி விமானநிலையம் விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
தொடருந்துப் போக்குவரத்து
[தொகு]அரியலூர் மற்றும் கும்பகோணம், விருத்தாச்சலம் ஆகியவை உடையார்பாளையத்திற்கு அருகில் உள்ள மூன்று முக்கிய தொடருந்து நிலையங்கள். அங்கிருந்து சென்னை மற்றும் திருச்சி வழியாக வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு, தெற்குப்பகுதிகளுக்கு செல்லும் தொடருந்துகள் உள்ளன.
பேருந்துப் போக்குவரத்து
[தொகு]உடையார்பாளையம் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் வழியாக அரியலூர், பெரம்பலூர், துறையூர்,ஜெயங்கொண்டம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திருவரங்கம், பழநி, கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், புதுச்சேரி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் சென்னை போன்ற ஊர்களுக்கு போக்குவரத்து நடைபெறுகிறது. சுற்றுபுறத்தில் உள்ள சிறிய கிராமங்களுக்கு ஒரு இணைப்பு பகுதியாக உடையார்பாளையம் விளங்குகிறது.
முக்கியச் சாலைகள்
[தொகு]- திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை
- உடையார்பாளையம் நகர புறவழிச்சாலை
- உடையார்பாளையம்-திருச்சி சாலை
- உடையார்பாளையம்-சிதம்பரம் சாலை
- உடையார்பாளையம்-கும்பகோணம் சாலை
- உடையார்பாளையம்-அரியலூர் சாலை
- உடையார்பாளையம்-செந்துறை சாலை
- உடையார்பாளையம்-இலையூர், வாரியங்காவல் சாலை (பழைய சென்னை நெடுஞ்சாலை)
- உடையார்பாளையம்-சோழன்குறிச்சி சாலை
- உடையார்பாளையம்-கழுமங்கலம் சாலை
- உடையார்பாளையம்-சுத்தமல்லி சாலை
- உடையார்பாளையம்-முனியதிரயன்பட்டி சாலை
- உடையார்பாளையம்-ஒக்கணம் சாலை
- உடையார்பாளையம்-ஏந்தல் சாலை
முக்கிய நகரங்களிலிருந்து தொலைவு மற்றும் வழித்தடம்
[தொகு]+ முக்கிய இடங்களிலிருந்து உடையார்பாளையம் செல்லும் பல்வேறு வழித்தடங்கள்
கல்வி
[தொகு]கல்வி நிறுவனங்கள்
[தொகு]- மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள்
- நவ்ஃபல் கல்விநிறுவனம்
- அன்னை கல்விநிறுவனம்
- மீனாட்சி இராமசாமி ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
- மீனாட்சி இராமசாமி இன்டஸ்ட்ரியல் ஸ்கூல்
- மீனாட்சி இராமசாமி ஹோட்டல் மேனேஜ்மென்ட் & கேட்ரிங் டேக்னாலஜி
பள்ளிகள்
[தொகு]- அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள்
- குழந்தை இயேசுபாலன் துவக்கப்பள்ளி
- அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி
- அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி
- நவ்ஃபல் பதின்நிலைப் பள்ளி
- மீனாட்சி இராமசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (ஆங்கிலவழி)
- மீனாட்சி இராமசாமி வித்யாலயா பள்ளி (சிபிஎஸ்இ)
- மீனாட்சி இராமசாமி மேனிலைப் பள்ளி(தமிழ்வழி)
கல்லூரிகள்
[தொகு]- மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி
- மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரி
- மீனாட்சி இராமசாமி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
- மீனாட்சி இராமசாமி கல்வியியல் கல்லூரி
- மீனாட்சி இராமசாமி உடற்கல்வியியல் கல்லூரி
- மீனாட்சி இராமசாமி மெரிட் கல்வியியல் கல்லூரி
- அன்னை தெரசா பாராமெடிக்கல் கல்லூரி
மருத்துவமனைகள்
[தொகு]- ஜமீன்தார் தாலுக்கா அரசினர் மருத்துவமனை
- நவஜீவன் மருத்துவமனை
- முஸ்தபா மருத்துவமனை
- ஜி.டி மருத்துவமனை
- வி ஸ் பி மருத்துவமனை
- கலைமகள் பல் மருத்துவமனை
- இ.எஸ் பல் மருத்துவமனை
- ஸ்மைல் பல் மருத்துவமனை
நகரம்
[தொகு]புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் அருள்மிகு பயறணீநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ள காரணத்தினால் இது ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. தமிழகத்திலேயே மிகப் பெரிய தாலுகாவாக இன்றளவும் இருப்பது உடையார்பாளையம் தாலுகாதான். இன்று பல தாலுகாக்களாக பிரிக்கப்பட்டு இருந்தாலும் பெரிய தாலுகாவாகவே கருதப்படுகிறது. பாளையக்காரர் ஆட்சிக்காலத்தில் மாபெரும் வணிக நகராகவே இந்நகரம் இருந்துள்ளது. இவ்வூரை சேர்ந்த இராமசாமி முதலியார் இம்மாவட்டத்திலேயே முதன் முதலில் மீனாட்சி ராமசாமி என்ற பெயரில் கல்லூரிகளை உருவாக்கினார்.
சமயம்
[தொகு]மக்கள்தொகையில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் கணிசமான அளவில் கிறித்தவர்களும் முஸ்லிம்களும் வாழ்கின்றனர்.
மொழியும் பண்பாடும்
[தொகு]இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலானோர் இந்து சமய மக்களே. சிறுபான்மை சமூக கிறிஸ்தவ, முஸ்லிம்களும் கணிசமான அளவில் வாழ்கின்றனர். அனைவரும் உடை, உணவு, பழக்க வழக்கங்கள், திருமணம், சடங்கு, சம்பிரதாயங்களில் பின்பற்றுவது அவரவர் இனத்தைச் சார்ந்த தமிழ் பண்பாடு.
பொருளாதாரம்
[தொகு]விவசாயம் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகிறது. இங்கு முந்திரி, கடலை, கரும்பு, போன்ற பயிர்கள் செய்யப்படுகின்றன. இங்கு முந்திரி, கடலை முக்கிய பயிர்கள் ஆகும். பட்டு மற்றும் தறி உற்பத்தியிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. கால்நடைகள் வளர்ப்பு பெரிதும் உதவுகிறது. இவ்வூர் நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்றது.
பணப்பயிர்கள்
[தொகு]இந்நகரப் பகுதியில் முந்திரி,கடலை ஆகியன பணப் பயிர்களாக கருதப்படுகிறது
நகர நிர்வாகம்
[தொகு]உடையார்பாளையம் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். 12.4 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்நகரம் 15 பெரிய வார்டுகளாக பிரிக்கப்பட்டு பேரூராட்சித் தலைவர் மற்றும் செயல் அலுவலரால் நிர்வகிக்கபடுகிறது. பல்வேறு தெருக்களை உடைய இந்நகரத்தில் சொத்துவரி, குடிநீர் வரி வசூலித்தல் மற்றும் குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரித்தல், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை நகர நிர்வாகம் மேற்கொள்கிறது. உடையார்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் தெருக்களுக்கு கவுன்சிலர்களும், அவர்களுக்குத் தலைமையாக பேரூராட்சித் தலைவரும் நகரின் நிர்வாகத்தைக் கவனிக்கின்றனர்.
பல்துறை அரசு அலுவலகங்கள்
[தொகு]- உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
- உடையார்பாளையம் பேரூராட்சி அலுவலகம்
- உடையார்பாளையம் முதன்மை அஞ்சல் நிலையம்
- உடையார்பாளையம் கிளை அஞ்சல் நிலையம்
- உடையார்பாளையம் உதவி மின்பொறியாளர் அலுவலகம்
- உடையார்பாளையம் உதவி செயற்பொறியாளர் அலுவலகம்
- உடையார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம்
- உடையார்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் (மேற்கு)
- உடையார்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் (கிழக்கு)
- உடையார்பாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
- உடையார்பாளையம் வட்ட ஆய்வாளர் அலுவலகம்
- உடையார்பாளையம் சார்பதிவாளர் அலுவலகம்
- உடையார்பாளையம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகம்
- உடையார்பாளையம் கால்நடைப் பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலகம்
- உடையார்பாளையம் காவல் நிலையம்
- உடையார்பாளையம் கிளை நூலகம்
- உடையார்பாளையம் ஆதிதிராவிடர் தனிவட்டாட்சியர் அலுவலகம்
- உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலகம்
- உடையார்பாளையம் பி.எஸ்.என்.எல் மின்னணு தொலைபேசி அலுவலகம்
- உடையார்பாளையம் வனச்சரக அலுவலகம் (நாச்சியார்ப்பேட்டை)
- உடையார்பாளையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் (ஜெயங்கொண்டம்)
சந்தைகள்
[தொகு]- வாரசந்தை
- தினசரி
வங்கிகள்
[தொகு]- இந்தியன் வங்கி
- கனரா வங்கி
- பாண்டியன் கிராம வங்கி
அருகிலுள்ள நகரங்கள்
[தொகு]புவியியல் அமைப்பும் அண்டை ஊர்களும்
[தொகு]வட எல்லை: இப்பகுதியின் வடக்கே விருத்தாசலம் மற்றும் ஆண்டிமடம் ஆகிய வணிகப் பகுதிகள் அமைந்துள்ளன.
கிழக்கு எல்லை: கிழக்கே ஜெயங்கொண்டம் நகரைத் தொடர்ந்து வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களான கங்கைகொண்டசோழபுரம், சிதம்பரம் அமைந்துள்ளது.
தெற்கு எல்லை: தெற்கே காவிரியின் கிளை ஆறுகள் பாயும் தா.பழூர் வட்டாரம் மற்றும் கும்பகோணம் அமைந்துள்ளன.
மேற்கு எல்லை: மேற்கே மாவட்டத் தலைநகர் அரியலூர் மற்றும் தொழில் நகரங்களான பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி ஆகியவை அமைந்துள்ளன.
உடையார்பாளையம் – நிர்வாக மற்றும் வரலாற்றுப் பின்னணி
[தொகு]வரலாற்றுப் பின்னணி (1801 முதல்) ஆங்கிலேயர் ஆட்சி காலம்
1801 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, உடையார்பாளையத்தை மையமாகக் கொண்டு ஒரு தாலுகா அமைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், அரியலூர் பகுதியும் இந்த தாலுகாவின் கீழ் இடம்பெற்றிருந்தது.
ஜமீன் பாரம்பரியம்
உடையார்பாளையம், ஜமீன்தார்களின் செல்வாக்கும் வரலாற்றுச் சிறப்பும் காரணமாக முக்கியத்துவம் பெற்றது. இதன் அடிப்படையிலேயே “உடையார்பாளையம்” என்ற பெயர் நிலைநிறுத்தப்பட்டது என்று கருதப்படுகிறது.
பெயர் மாற்றப் போராட்டங்கள்
நிர்வாக வசதிக்காக தாலுகா அலுவலகம் ஜெயங்கொண்டம் நகரத்திற்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜெயங்கொண்டம் பகுதி மக்கள் தாலுகாவின் பெயரையும் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
எதிர்ப்புகள்
இதற்கு எதிராக, உடையார்பாளையம் பகுதி மக்கள் தங்கள் ஊரின் வரலாற்று அடையாளமான “உடையார்பாளையம்” என்ற பெயரை மாற்றக் கூடாது எனக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர்.
துப்பாக்கிச் சூடு நிகழ்வு
இந்த போராட்டங்களின் போது சில இடங்களில் மோதல்கள் மற்றும் பதற்றமான சூழ்நிலைகள் உருவானதாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்வுகள் உள்ளூர் மக்களிடையே “உடையார்பாளையம் தாலுகா துப்பாக்கிச் சூடு நிகழ்வு” எனப் பேசப்பட்டு வருகின்றன. இது தமிழக அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க சம்பவமாகக் கருதப்படுகிறது.
தற்போதைய நிலை
தற்போது, அரியலூர் மாவட்டத்தில் “உடையார்பாளையம் தாலுகா” என்ற பெயரிலேயே இந்த நிர்வாக அலகு தொடர்கிறது. தாலுகா அலுவலகம் (வட்டாட்சியர் அலுவலகம்) ஜெயங்கொண்டத்தில் செயல்பட்டு வந்தாலும், அதிகாரப்பூர்வ வருவாய் ஆவணங்களில் “உடையார்பாளையம் தாலுகா” என்ற பெயரே பயன்படுத்தப்படுகிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Udayarpalayam Pallava Kings history
- ↑ "150 - ஜெயங்கொண்டம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/election-2021/ariyalur/640564-150.html. பார்த்த நாள்: 20 September 2025.
- ↑ உடையார்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Population Census 2011
- ↑ Udayarpalayam Town Panchayat
வெளி இணைப்புகள்
[தொகு]- உடையார்பாளையம் பேரூராட்சியின் தொடர்புக்கு
- உடையார்பாளையம் - காணொலி (தமிழில்)
- உடையார்பாளையம் சமஸ்தானம் வரலாறு பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
- உடையார்பாளையம் 'பாளையக்காரர்கள் அரண்மணை' புகைப்படத்தொகுப்பு பரணிடப்பட்டது 2013-08-01 at the வந்தவழி இயந்திரம்
- உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் - ஓர் இலட்சியப் பேராசான்