இராஜ கண்ணப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராஜ கண்ணப்பன் (R. S. Raja Kannappan) முன்பு எஸ். கண்ணப்பன் என்று அழைக்கப்பட்டவர்.ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் இருந்து 1991 ஆண்டு சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் பொதுப்பணித்துறை அமைச்சராக ஜெ. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 1991-1996 ஆண்டைய காலகட்டத்தில் இருந்தார். பிறகு மக்கள் தமிழ் தேசம் என்ற தனிக்கட்சியை துவக்கினார்.[2] 2001 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி. மு. க வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். 2006, ஆண்டு தனது கட்சியை கலைத்துவிட்டு தி.மு.கவில் இணைத்தார். 2006 சட்டமன்றத் தேர்தலில் தி..மு.க சார்பில் இளையான்குடியில் போட்டியிட்டு வென்றார். பெப்ரவரி 2009 இல் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மீண்டும் இணைந்து, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளரான ப.சிதம்பரத்திடம் தோல்வியுற்றார்.[3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ_கண்ணப்பன்&oldid=2702478" இருந்து மீள்விக்கப்பட்டது