ஆண்டிமடம்

ஆள்கூறுகள்: 11°20′7″N 79°22′33″E / 11.33528°N 79.37583°E / 11.33528; 79.37583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டிமடம்
Andimadam
பஞ்சாயத்து ஒன்றியம்
ஆண்டிமடம் Andimadam is located in தமிழ் நாடு
ஆண்டிமடம் Andimadam
ஆண்டிமடம்
Andimadam
இந்தியா, தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆண்டிமடம் Andimadam is located in இந்தியா
ஆண்டிமடம் Andimadam
ஆண்டிமடம்
Andimadam
ஆண்டிமடம்
Andimadam (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°20′7″N 79°22′33″E / 11.33528°N 79.37583°E / 11.33528; 79.37583
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர் மாவட்டம்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்6,633
மொழிகள்
 • ஆட்சிதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
பின்கோடு621 801
தொலைபேசிக் குறியீடு04331
வாகனப் பதிவுTN-61
அருகிலுள்ள நகரம்செயங்கொண்ட சோழபுரம்
பாலின விகிதம்1001 /
கல்வியறிவு73.35%
லோக் சபா தொகுதிசிதம்பரம்

ஆண்டிமடம் (Andimadam) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பஞ்சாயத்து கிராமமாகும். இது 16.09.2016-இலிருந்து ஒரு வட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் அதிகமாக காணப்படுவதால் சிமென்ட் நகரம் என அழைக்கப்படுகிறது.

மக்கள்தொகை[தொகு]

2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 6633 ஆண்கள் 3315 பெண்கள் 3318.[1]இது அரியலூரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வடகிழக்கில் 242 கி.மீ. தொலைவில் சென்னை அமைந்துள்ளது. தென்மேற்கில் 111 கி.மீ. தொலைவில் திருச்சியும், தென்கிழக்கில் 23 கி.மீ. தொலைவில் கங்கைகொண்டசோழபுரமும் அமைந்துள்ளது.

பார்க்க வேண்டியவை[தொகு]

அகத்தீசுவரர் ஆலயம்

பழமை வாய்ந்த சிவன் கோவில் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது[2].(மேல அகத்தீச்வரர் ஆலயம் விளந்தை ஆண்டிமடம்[தொடர்பிழந்த இணைப்பு]). இக்கோவிலின் சிவலிங்கம் அகத்தியரால் உருவாக்கப்பட்டது. இக்கோவிலைச்சுற்றி ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளது. மேலும் இங்கு புகழ் பெற்ற புனித மார்த்தினார் ஆலயம் அமைந்துள்ளது.

அகத்தீசுவரர் கோயில் உட்புறம்
விளந்தை முருகர் கோவில்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிமடம்&oldid=3857431" இலிருந்து மீள்விக்கப்பட்டது