அமேசான் கிண்டில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமேசான் கிண்டில்
மூன்றாம் தலைமுறை கிண்டில்
உருவாக்குனர்அமேசான்.காம்
உற்பத்தியாளர்பாக்ஸ்கான்
வகைமின்னூல் படிப்பான்
வெளியீட்டு தேதிநவம்பர் 19, 2007 (2007-11-19)
விலை$399
இயக்க அமைப்புலினக்ஸ்2.6.26
ஆற்றல்3.7 வோல்ட்டு, 1750 BA1001 model
மைய செயற்பகுதி532 ஏர்ட்சு, ARM-11
சேமிப்பு திறன்(total/user available) 256 மெகாபைட்டு/180 மெகாபைட்டு 2 கிகாபைட்டு/1.4 கிகாபைட்டு(கிண்டில்2) or 4 GB/3 கிகாபைட்டு(கிண்டில்3) or 4 GB/3.3 கிகாபைட்டு(கிண்டில்DX) உள்ளக நினைவகம்திடீர் நினைவகம்
நினைவகம்256 மெகாபைட்டு (கிண்டில்3)
Displayஅங்குலம் மூலைவிட்டம்,
3.6 in (91 மிமி) × 4.8 in (122 மிமீ),
600 × 800 படவணுs or 0.48 படவணுs,
167 ppi density,
4-level அடர்கருப்பு
or 16-level கிரே(கிண்டில்2 and 3)
மின் தாள்
உள்ளீடுஅகிலத் தொடர் பாட்டை 2.0 ,
நினைவக அட்டை,
3.5 மில்லிமீட்டர் காதொலிப்பான்
இயல்புநிலை ஒலிப்பான்,
AC திறன் பொருத்தி
Connectivityஅமேசான் கிண்டில்சிடிஎம்ஏ வைப் பயன்படுத்துகிறது ,
802.11bg ஒய்-ஃபை (கிண்டில்3)
Dimensions8.0 × 5.3 × 0.8 in (203 × 135 × 20.3 மிமீ)
8.0 × 5.3 × 0.36 in (203 × 135 × 9.14 மிமீ) (கிண்டில்2)
7.5 × 4.8 × 0.34 in (190 × 123 × 8.51 மிமீ) (கிண்டில்3)
10.4 x 7.2 x 0.38 in (264 x 183 x 9.65 மிமீ) (கிண்டில்டிஎக்ஸ் 2)
Weight10.2 oz (290 g) (கிண்டில்1 & 2)
8.7 oz (247 g) (கிண்டில்3)
8.5 oz (241 g) (கிண்டில்3 Wi-Fi only)
18.9 oz (540 g) (கிண்டில்டிஎக்ஸ் 2)

அமேசான் கிண்டில் என்பது அமேசான் நிறுவனம் உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட மின்னூல்களை இலகுவாக வாசிக்க உதவும் ஒரு மின்படிப்பான் ஆகும். இதனை பயன்படுத்துவோர் கம்பியற்ற இணைப்புக்களின் உதவியுடன் மின்னூல்கள், செய்தித்தாள்கள், இதழ்கள், வலைப்பதிவுகள் போன்ற அனைத்து எண்முறை ஊடகங்களையும் இணைய உலாவிகள் மூலம் தேடிப் பெற்றுக் கொள்ளவும், வாங்கவும், தரவிறக்கம் செய்து கொள்ளவும், எளிதாக மின்னூல்களை வாசிக்கவும் இந்தக் கருவி பயன்படுகின்றது[1].

கிண்டில் வன்பொருள் கருவிகள் மின்தாள்களில் அகரவரிசை, வடிவங்களைக் காட்சிப்படுத்துகின்றன. இதனால் தாள்களில் வாசிப்பது போன்ற தோற்ற உருவாக்கம் பெறப்படுகின்றது. அத்துடன் இவை குறைந்தளவு ஆற்றலைப் பயன்படுத்தவும் உதவுகின்றது.

அமேசானின் 2011 மே மாத அறிக்கையில், கடந்த ஆண்டில் அச்சிடப்பட்ட நூல்களை விடவும் அதிகளவில் கிண்டில் நூல்கள் தம்மால் விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது[2][3]. மின் மை (E Ink) என்ற வகையிலான திரையை இந்தக் கிண்டில் கருவி கொண்டிருப்பதால், தாளில் படிக்கும் கண்களை உறுத்தாத, இனிய அனுபவம் கிடைக்கிறது.

பெயரிடுதல், பரிணாமம்[தொகு]

2004 ஆம் ஆண்டில் அமேசான்.காம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலரான ஜெப் பெசோஸ்தன்னுடைய ஊழியர்களிடம் ஒரு பணியைக் கொடுத்தார். அது உலகிலேயே ஒரு சிறந்த மின்னூல் படிப்பானை நமது போட்டி நிறுவனங்கள் உருவாக்குவதற்கு முன் நாம் உருவாக்க வேண்டும் என்பதாகும். அமேசான் இதற்கு இட்ட குறிப்பெயர் ஃபியோனா ஆகும்.[4]

தெ கிண்டில் என்ற பெயரானது நிறுவனத்தின் ஆலோசகர்களான மைக்கேல் பேட்ரிக் க்ரோனன் மற்றும் கரின் ஹிப்மா என்பவர்களால் ஏற்படுத்தப்பட்டது. ஆய்வுக்கூடம் 126 (லேப் 126) தங்களின் கருவிக்கு ஒரு பொருத்தமான பெயரை வைக்குமாறு மைக்கேல் பேட்ரிக் க்ரோனன் மற்றும் கரின் ஹிப்மா போன்றவர்களிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்கள் இதற்கு கிண்டில் எனப் பெயரிட்டனர். அதற்கு வெளிச்சத்தை உருவாக்குவது என்பது பொருளாகும். [5] அறிவார்ந்த மற்றும் மகிழ்ச்சி தரக்கூடிய வாசிப்பு அனுபவத்தைத் தரக்கூடியது என்ற பொருள் தரக்கூடிய உவமையாக இந்தப் பெயர் பொருத்தமானதாக இருந்ததாக அவர்கள் நினைத்தனர்.[6]

2007 ஆம் ஆண்டில் கிண்டில் வன்பொருளுடன் கிண்டில் கருவி வெளியானது. பின் 2009 இல் சற்றுப் பெரிய திரையுடன் கிண்டில் டிஎக்சு வெளியானது. பலவிதமான கிண்டில் கருவிகள் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று விசைப்பலகையுடனும் மற்றொன்று தொடுதிரையோடு வெளியிடப்பட்டது. மேலும் கிண்டில் மென்பொருளுடன் கூடிய கைக் கணினி கிண்டில் தீ என்ற பெயரிலும், விலை குறைவான தொடுதிரை கொண்ட கிண்டில் 7என்ற கருவியும் வெளிவந்தது. கிண்டில் மின்னனு படிப்பான் என்பது வாசித்தலுக்கு மட்டும் என்ற ஒரே நோக்கோடு தான் வெளிடயிப்பட்டது. ஏனெனில் வேறு சில வசதிகள் அதில் இருந்தால் வாசிப்பதில் இருந்து கவனச் சிதறல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்பதால் அது தவிர்க்கப்படுகிறது.

அமேசான் நிறுவனம், பல்வேறு தளங்களிலும் மற்றும் கருவிகளிலும் குறிப்பாக மைக்ரோசாப்ட் விண்டோசு, மாக் இயக்குதளம், ஆண்ட்ராய்டு இயங்குதளம், ஐஓஎஸ், பிளாக்பெர்ரி இயங்குதளம், விண்டோசு செல்லிடத் தொலைபேசி போன்றவற்றில் செயல்படும் வகையில் கிண்டிலை உருவாக்கியுள்ளது.[7] மேலும் அமேசான் மேகக் கணிமை பயனர் வசதியையும் அளித்துள்ளது. இதன் மூலம் நவீன உலாவிகளின் மூலம் மின்னனு நூல்களைப் படிக்க முடியும்.[8]

கருவிகள்[தொகு]

முதல் தலைமுறை[தொகு]

கிண்டில்[தொகு]

அமேசான் தனது முதல் மின்னனுப் படிப்பானை நவம்பர் 19,2007 இல் 399 அமெரிக்க டாலர் மதிப்பில் வெளியிட்டது. [9] விற்பனை துவங்கிய ஐந்தரை மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது.[10] பின் ஐந்து மாதங்கள் வரையில் இருப்பில் இல்லை என்ற செய்தியே 2008 ஏப்ரல் இறுதி வரை நீடித்தது.[11]

இரண்டாம் தலைமுறை[தொகு]

கிண்டில் 2[தொகு]

பெப்ரவரி 10, 2009 இல் அமேசான் தனது இரண்டாம் தலைமுறை கிண்டிலான கிண்டில் 2 என்பதை அறிவித்தது[12]. ஆனால் அது பெப்ரவரி 23, 2009 இல் விற்பனைக்கு வந்தது. உரையை ஒலியாக மாற்றக்கூடிய வசதியுடன் வந்தது. மேலும் இதில் 2 கிகாபைட்டு அளவிற்கு உள்ளக நினைவிடம் இருந்தது. அதில் 1.4 ஜிகாபைட்டு அளவிற்கு பயனர்கள் பயன்பாட்டிற்கு இருந்தது. முதல்தலைமுறை கிண்டிலின் எதிர்மறை தாக்கத்தால் கிண்டில் 2 இல் நினைவக அட்டைக்கான இடமின்றி கிண்டில்2 வந்தது. இது முதல் தலைமுறை கிண்டிலை விட மிகவும் மெல்லியதாக இருந்தது.[13]

மேற்கோள்கள்[தொகு]

 1. Dudley, Brier (19 November 2007). "Kindle hacking, iPod parallels and a chat with the Kindle director". Seattle Times இம் மூலத்தில் இருந்து 21 டிசம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101221083337/http://blog.seattletimes.nwsource.com/brierdudley/2007/11/chatting_with_amazons_kindle_d.html. பார்த்த நாள்: 28 December 2010. 
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-09-25. பார்க்கப்பட்ட நாள் 2011-06-30.
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-05-28. பார்க்கப்பட்ட நாள் 2011-06-30.
 4. அமேசானின் ரகசிய ஆராய்ச்சிக் கூடத்தில் எதிர்கால மின்னனு படிப்பானை உருவாக்கிக் கொண்டிருக்கிறது தெ வெர்ஜ், 2014
 5. "சொற்பிறப்பியல் அகராதி: கிண்டில்". பார்க்கப்பட்ட நாள் மே 1, 2012.
 6. ஃபிரட்மேன், நான்சி (டிசம்பர் 9, 2008). "கிண்டில் இந்தப் பெயர் எப்படி வந்தது?". nancyfriedman.typepad.com. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 7. பெரஸ், சாரா (மே18, 2010). "ஆண்ட்ராய்டிற்கும் கிண்டில் வருகிறது". தெ நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/external/readwriteweb/2010/05/18/18readwriteweb-kindle-for-android-is-coming-24445.html. 
 8. மேகக் கணிமைப் பயனர் Amazon.com.
 9. "அமேசான் கிண்டில் முதல் தலைமுறை". அமேசான்.காம்.
 10. படேல், நிலாய் (21 நவம்பர் 2007). "கிண்டிலைந்தரை மணிநேரத்தில் விற்றுத்தீர்ந்தது". என்கெட்ஜட்.காம். Archived from the original on நவம்பர் 23, 2007. பார்க்கப்பட்ட நாள் 21 நவம்பர் 2007.
 11. சோரல், சார்லி (21 ஏப்ரல் 2008). "அமேசான் கிண்டில் மறுபடியும் இருப்பில் வந்தது". வியர்ட்.காம். pp. தொழில்நுட்பக் கருவிகள் ஆய்வகம் வலைப்பூ. Archived from the original on 22 April 2008. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2008. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 12. "அமேசான்.காம்: இரண்டாம் தலைமுறை இலவச 3ஜி இணைப்புடன்".
 13. "கிண்டில் 2 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்". அமேசான்.காம். Archived from the original on 11 பெப்ரவரி 2009. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 11, 2009. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

ரோஸ், சார்லி (19 November 2007), அமேசானின் முதன்மை செயல் தலைவர் கிண்டிலைப் பற்றி (நேர்காணல்), archived from the original (video) on 22 நவம்பர் 2007

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமேசான்_கிண்டில்&oldid=3747510" இலிருந்து மீள்விக்கப்பட்டது