கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)
கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 65. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் 2,41,981 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க 281 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கலசப்பாக்கம் தொகுதியில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 50 சதவீதமும், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும், இதர சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும் உள்ளனர்.
இத்தொகுதியில் கலசப்பாக்கம் வட்டம், போளூர் வட்டம், செங்கம் வட்டம் மற்றும் , ஜமுனாமரத்தூர் வட்டத்தின் 112 ஊராட்சிகள் மற்றும் புதுப்பாளையம் பேரூராட்சி இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.
கலசப்பாக்கம் தொகுதியை பொறுத்தவரையில் முழுக்க முழுக்க விவசாயத்தை சார்ந்த தொகுதியாக அமைந்துள்ளது. இதில் குறிப்பாக நெல், கரும்பு, வாழை, பூச்செடிகள் போன்ற பயிர் வகைகளை நம்பியே விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இத்தொகுதியில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக செய்யாறு மற்றும் மேல்சோழங்குப்பம் பகுதியில் மிருகண்டா அணை, படவேடு செண்பகதோப்பு அணை உள்ளன. மேலும் சுற்றுலாத்தலமாக ஜவ்வாதுமலை, அமிர்தி மற்றும் பருவதமலை ஆகியவை உள்ளன.[1]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]
- போளூர் வட்டம் (பகுதி)
கல்பட்டு, இரும்பிலி, குப்பம், கல்குப்பம், வாழியூர், காளசமுத்திரம், படவேடு, செண்பகத்தோப்பு,அனந்தபுரம்,
அமிர்தி, நீப்பளாம்பட்டு, காணமலை, நம்மியம்பட்டு, சீங்காடு,மண்டபாறை, வீரப்பனூர், புதுப்பட்டு, எரியூர், கீழ்கணவாயூர், புளியங்குப்பம், குட்டக்கரை, ஓடமங்கலம், கோவிலூர், பட்டார்வைக்காடு, தும்பக்காடு,
கிடாம்பாளையம், கெங்கவரம், மேல்சிப்பிலி, எருமையனூர், கீழ்தட்டியாப்பட்டு, மேல்சோழங்குப்பம், வடகரைநம்மியந்தல், சீனந்தல், தேவராயன்பாளையம், காந்தபாளையம், ஆதமங்கலம், கேட்ட்வரம்பாளையம், சேங்கபுத்தேரி, மேலாரணி, ஆனைவாடி, காப்பலூர், வன்னியனூர், கட்சிரிமங்கலம், மேல்வில்வராயநல்லூர், எர்ணமங்கலம், சிறுவள்ளூர், அருணகிரிமங்கலம், கெங்கலாமகாதேவி, நல்லான்பிள்ளைபெற்றாள், வீரளூர், மட்டவெட்டு, மேல்பாலூர், கீழ்பாலூர், கடலாடி, தென்மாதிமங்கலம், பாணாம்பட்டு, பூண்டி, பில்லூர், கலசபாக்கம், தென்பள்ளிப்பட்டு, விண்ணுவம்பட்டு, காலூர், பத்தியவாடி, காம்பட்டு, அணியாலை, லாடவரம், கெங்கநல்லூர், அலங்காரமங்கலம், பாடகம், சீட்டம்பட்டு மற்றும் படியம்புத்தூர் கிராமங்கள்.
- செங்கம் வட்டம் (பகுதி)
வீரானந்தல், முன்னுரமங்கலம், புதூஉர்செங்கம், உண்ணாமலைபாளையம், காரப்பட்டு, புதுப்பட்டு, கொரட்டாம்பட்டு, காஞ்சி, அரிதாரிமங்கலம், தாமரைப்பாக்கம், நயம்பாடி, மஷார், கல்லரப்பாடி, ஏந்தல், நம்மியந்தல், ஆலத்தூர், ஓரவந்தவாடி, நந்திமங்கலம், பனைஓலைப்பாடி, பெரியேரி, கொட்டகுளம், முத்தனூர், தொரப்பாடி, நரசிங்கநல்லூர், படிஅக்ரஹாரம், அல்லியேந்தல், ஜப்திகாரியேந்தல், கெங்கம்பட்டு, கீழ்படூர், வாய்விடந்தாங்கல், மேல்படுர், குலால்பாடி, நத்தவாடி, வடமாத்தூர், மேல்நாச்சிப்பட்டு, சேந்தமங்கலம், அன்னந்தல், மேல்ப்புஞ்சை, வாசுதேவம்பட்டு, எறையூர் மற்றும் மேல்மடியனூர் கிராமங்கள்,
புதுப்பாளையம் (பேரூராட்சி)[2].
வெற்றி பெற்றவர்கள்[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | நடராச முதலியார் | சுயேச்சை | 16184 | 54.09 | பெரியசாமி கவுண்டர் | காங்கிரசு | 12460 | 41.64 |
1967 | சு. முருகையன் | காங்கிரசு | 32697 | 51.37 | எம். சுந்தரேசன் | திமுக | 20554 | 32.30 |
1971 | சு. முருகையன் | திமுக | 42893 | 58.88 | எம். சுந்தரசாமி | ஸ்தாபன காங்கிரசு | 29960 | 41.12 |
1977 | பெ. சு. திருவேங்கடம் | திமுக | 26841 | 35.39 | எசு. சுந்தரேச உடையார் | அதிமுக | 25298 | 33.35 |
1980 | பெ. சு. திருவேங்கடம் | திமுக | 44923 | 54.49 | சி. என். விசுவநாதன் | அதிமுக | 32972 | 39.99 |
1984 | எம். பாண்டுரங்கன் | அதிமுக | 54969 | 58.78 | பி. எசு. திருவேங்கடம் | திமுக | 35303 | 37.75 |
1989 | பெ. சு. திருவேங்கடம் | திமுக | 47535 | 48.24 | எசு. கிருசுணமூர்த்தி | அதிமுக (ஜெ) | 25840 | 26.22 |
1991 | எம். சுந்தரசாமி | காங்கிரசு | 65096 | 57.35 | பி. எசு. திருவேங்கடம் | திமுக | 32152 | 28.33 |
1996 | பெ. சு. திருவேங்கடம் | திமுக | 72177 | 59.12 | எம். சுந்தரசாமி | காங்கிரசு | 37647 | 30.83 |
2001 | எஸ். எம். இராமச்சந்திரன் | அதிமுக | 75880 | 58.05 | பி. எசு. திருவேங்கடம் | திமுக | 46990 | 35.95 |
2006 | அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி | அதிமுக | 68586 | 48 | ஆர். காளிதாசு | பாமக | 60920 | 43 |
2011 | அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி | அதிமுக | 91833 | 58.95 | சி.எஸ்.விஜயகுமார் | காங்கிரசு | 53599 | 34.40 |
2016 | வி. பன்னீர்செல்வம் | அதிமுக | 84394 | 45.78 | செங்கம் ஜி. குமார் | காங்கிரசு | 57980 | 31.45 |
2021 | பெ. சு. தி. சரவணன் | திமுக[3] | 94,134 | 47.92 | வி. பன்னீர்செல்வம் | அதிமுக | 84,912 | 43.23 |
- 1967ல் சுயேச்சை கே. ஆர். கே. கவுண்டர் 10393 (16.33%) வாக்குகள் பெற்றா
- 1977ல் காங்கிரசின் எ. மனக்கட்டி கண்டர் 16893 (22.27%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் காங்கிரசின் கே. பி. கே. தங்கமணி 15257 (15.48%) வாக்குகள் பெற்றார்.
- 1991ல் பாமகவின் ஆர். கலைச்செல்வன் 12762 (11.24%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் எல். சங்கர் 5069 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை[தொகு]
10.01.2018 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)யில் ஆண் வாக்காளர்கள் 112506 பேரும், பெண் வாக்காளர்கள் 114971 பேரும் மற்றும் இதர வாக்காளர்கள் 8 பேரும் மொத்தம் 227485 பேர் உள்ளனர்.[1]
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ கலசப்பாக்கம் தொகுதி கண்ணோட்டம் – 2021
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-01-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ கலசபாக்கம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா