கரூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கரூர் மாவட்டம்
India Tamil Nadu districts Karur.svg
கரூர் மாவட்டம்:அமைந்த இடம்
தலைநகரம் கரூர்
மிகப்பெரிய நகரம் கரூர்
ஆட்சியர்
ச.ஜெயந்தி
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

சந்தோசுகுமார்
ஆக்கப்பட்ட நாள் செப்டம்பர் 30 1995
பரப்பளவு 2895.57 கி.மீ² (வது)
மக்கள் தொகை
(2011
வருடம்
அடர்த்தி
1076588 (வது)
371/கி.மீ²
வட்டங்கள் 6
ஊராட்சி ஒன்றியங்கள் 8
நகராட்சிகள் 2
பேரூராட்சிகள் 11
ஊராட்சிகள் 158
வருவாய் கோட்டங்கள் 2


கரூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்று. அமராவதி மற்றும் காவிரி ஆகிய இரண்டு நதிகள் பாய்ந்தோடும் மாவட்டம். இம்மாவட்டத்தின் மிகப்பெரிய நகரம், மாவட்டத் தலைநகரான் கரூர் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 10,76,588 ஆகும். இவற்றில் கல்வியறிவு பெற்றவர்கள் 81.74 சதவிகதமாகும்.

வரலாறு[தொகு]

2000 ஆண்டுக்கும் பழமையான வரலாறு கொண்டது கரூர் தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றாகும்.இந்து மத நம்பிக்கைப்படி இறைவன் பிரம்மா தனது படைப்பு தொழிலை இங்குதான் தொடங்கியதாக கருதப்படுகிறது. அதன் பொறுட்டே இவ்வூர் ’’’கரூவூர்’’’ என அழைக்கப்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில் கருவூர் என்றும் வஞ்சி மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர் சேரர்களின் தலைநகராக விளங்கியிருக்கிறது.சோழ,பாண்டிய பேரரசுகள் இந்த ஊரை கைப்பற்றும் நோக்கில் பலமுறை போர் தொடுத்துள்ளனர். பண்டைய காலங்களில் ரோமாபுரியோடு நெருங்கிய தொடர்புடன் கருவூர் இருந்திருக்கிறது.தங்கநகைகள் ஏற்றுமதியில் கருவூர் ஈடுபட்டிருந்திருக்கிறது என்பதற்கு பல்வேறு தொல்பொருள் ஆய்வில் கிடைத்த ரோம நாணயங்களே ஆதாரம். மேலும் கருவூரை 150 கிரேக்க புலவர்கள் தங்கள் பாடல்களில் ”கோருவூரா” என்று குறிப்பிட்டு தமிழகத்தின் சிறந்த வாணிப மையம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

சேரர்களால் தலைநகரான வஞ்சி மாநகர் பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டு பிந்நாளில் பல்லவ அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.சோழர்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலங்கள் கருவூர் இருந்துள்ளது.நாயக்கர்களாலும் பிற்பாடு திப்பு சுல்தான் ஆட்சியின் கீழும் கருவூர் இருந்துள்ளது.1793ல் கரூர் கோட்டையை அழித்து ஆங்கிலேயர்கள் கரூர் கைப்பற்றியிருக்கின்றனர்.

ஆங்கிலேயரின் ஆட்சிகாலத்தில் பண்டைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூர் தாலுக்கா 1910 ம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டதுடன் இணைக்கப்பட்டது.

பல்வேறு ஆழ்வார்களாலும், சங்கப்புலவர்களாலும் பாடப்பெற்ற தலமாகவும் கரூர் விளங்குகிறது.சிலப்பதிகாரத்தில் கருவூர் பற்றிய வரலாற்று தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

கரூர் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகவும் அழைக்கப்படுகிறது.[1]

கரூர் பசுபதீசுவரர் ஆலயம்

கரூர் மாவட்டத்தின் உருவாக்கம்[தொகு]

நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

கரூர்,குளித்தலை மற்றும் மணப்பாறை தாலுக்காக்களை இணைத்து கரூர் மாவட்டம் அரசாணை எண் 913/1995ன் படி உருவாக்கப்பட்டது. மணப்பாறை தாலுக்கா திருச்சியுடன் இணைக்கப்பட்டு முசிறி தாலுக்காவை கரூர் மாவட்டத்துட்ன் இணைத்தனர். பின்னர் முசிறி தாலுக்காவும் திருச்சி மாவட்டத்துடன் இணைந்தது.[2]

எல்லைகள்[தொகு]

வடக்கில் நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களையும், கிழக்கில் பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களையும், தெற்கில் திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களையும், மேற்கில் ஈரோடு மாவட்டத்தையும் கரூர் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

கோட்டங்கள்-2[தொகு]

  • கரூர்
  • குளித்தலை

வட்டங்கள் 6[தொகு]

உள்ளாட்சி அமைப்புகள்[தொகு]

நகராட்சிகள்-2[தொகு]

ஊராட்சி ஒன்றியங்கள் 8[தொகு]

பேரூராட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. கரூர் மாவட்ட அதிகாரபூர்வ அரசு வலைப்பக்கம்
  2. தமிழக அரசு வலைப்பக்கம்
  3. [1]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரூர்_மாவட்டம்&oldid=2184357" இருந்து மீள்விக்கப்பட்டது