உள்ளடக்கத்துக்குச் செல்

காவல்துறைக் கண்காணிப்பாளர் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காவல்துறைக் கண்காணிப்பாளர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காவல்த்துறை கண்காணிப்பாளர்
காவல்துறைக் கண்காணிப்பாளர் / துணைக் காவல் ஆணையர் (இள ஆட்சி நிலையர் தரம்) அதிகாரியின் இலச்சினை
மூத்த காவல்துறைக் கண்காணிப்பாளர் / துணைக் காவல் ஆணையர் (தெரிவு நிலை) அதிகாரியின் இலச்சினை
வகைகாவல் மாவட்டத்தின் தலைவர்
பதவிசெயல்பாட்டில் உள்ளது
சுருக்கம்எஸ்பி
உறுப்பினர்இந்தியக் காவல் பணி
மாநில காவல் பணி
துணை கண்காணிப்பாளர்கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர்
துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளர்
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்

காவல்துறைக் கண்காணிப்பாளர் (எஸ்.பி., Superintendent of Police) என்பது காவல்துறையில் மாவட்ட அளவில் உள்ள ஒரு உயர் பதவியாகும். இந்தியக் காவல் பணி (I.P.S-Indian Police Service) அதிகாரி ஒருவரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக மாநில அரசு நியமிக்கிறது. இவர் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்துக் குற்றங்களையும் தடுக்கும் விதமாக தனக்குக் கீழுள்ள அதிகாரிகளைக் கொண்டு செயல்படுகிறார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட நீதித்துறை அதிகாரிகள் மற்றும் மாநில உயர் அதிகாரிகள் வழிகாட்டுதலின் பேரில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். மேலும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் உதவியுடன் காவல்துறையில் இருப்பவர்கள் அனைவரது சம்பளம், பணிமாற்றம் போன்ற அலுவலகப் பணிகளையும் கண்காணிக்கிறார். கேரள மாநிலத்தில், மாவட்டங்களுக்குப் பொறுப்பான காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்டக் காவல்துறைத் தலைவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இதையும் பார்க்க

[தொகு]