கடவூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கடவூர் வட்டம் (Kadavur taluk) தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தின் ஆறு வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] கடவூர் வட்டம் கடவூர் மற்றும் மைலம்பட்டி என இரண்டு உள்வட்டங்களையும், 23 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது. [2]கடவூர் வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் தரகம்பட்டியில் செயல்படுகிறது.

கடவூர் ஊராட்சி ஒன்றியம் முழுமையாகவும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் சில பகுதிகளும் கடவூர் வருவாய் வட்டத்தில் உள்ளது. இவ்வட்டம் கரூர் மக்களவைத் தொகுதி மற்றும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிகளில் அடங்கியுள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

471.85 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கடவூர் வட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 1,09,810 ஆகும். அதில் ஆண்கள் 54,852 ஆகவும், பெண்கள் 54,958 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1002 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 57.85% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்டோரில் ஆண் குழந்தைகள் 6,130 ஆகவும், பெண்கள் 5,747 ஆக உள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடவூர்_வட்டம்&oldid=2957013" இருந்து மீள்விக்கப்பட்டது