உள்ளடக்கத்துக்குச் செல்

குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறிஞ்சிப்பாடி, கடலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது குறிஞ்சிப்பாடி தொகுதி.வடலூர் நகராட்சி மற்றும் குறிஞ்சிப்பாடி சிறப்பு நிலை பேரூராட்சி.

மற்றும்குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தின் 51 கிராம ஊராட்சிகள் மற்றும் கடலூர் ஊராட்சி ஒன்றியத்தின் 20 ஊராட்சிகள் என 71 ஊராட்சிகளை உள்ளடக்கியுள்ளது. இத்தொகுதியில் குறிஞ்சிப்பாடி நகரம் புத்து மாரியம்மன் கோயில் மற்றும் சுப்புராயர் கோவில்& வடலுார் வள்ளலார் சத்திய ஞான சபை, திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றவை. விவசாயிகளின் வாழ்வாதாரமாக பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி உள்ளன. முந்திரி, வாழை விவசாயம், நெசவு மற்றும் மீன்பிடி தொழில் பிரதானம்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

கடலூர் வட்டம் (பகுதி) குணமங்கலம். பில்லாலி, திருவந்திபுரம், கருப்படித்துண்டு, அரிசிபெரியாங்குப்பம், குமாரபேட்டை, ஓட்டேரி, திருமானிக்குழி, வானகாதேவி, விலங்கல்பட்டு, நடுவீரப்பட்டு, சென்னப்பநாயக்கண்பாளையம், வெள்ளகரை, ராமாபுரம், மாவடிபாளையம். கரையேறவிட்டகுப்பம், வெட்டுக்குளம், பொன்னையன்குப்பம், பச்சையன்குப்பம், குடிகாடு, காரைக்காடு, அன்னவல்லி, கெங்கமநாயகன்குப்பம், வழுதாம்பட்டு, தொண்டமாநத்தம், சேடப்பாளையம், தியாகவல்லி, செம்மங்குப்பம், கோதண்டராமாபுரம், அம்பலவாணம்பேட்டை, தோப்புக்கொல்லை, திமராவுத்தன்குப்பம், கிருஷ்ணன்குப்பம், தம்பிபாளையம், ஆயீக்குப்பம், அகரம், தங்களிக்குப்பம், அனுக்கம்பட்டு, திருச்சேபுரம், காயல்பட்டு, கம்பளிமேடு, ஆலப்பாக்கம், பூவானிக்குப்பம், இடங்கொண்டாம்பட்டு, அக்கத்திம்மாபுரம், ரங்கநாதபுரம், கேசவநாராயணபுரம், தம்பிபேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கஞ்சமாண்டான்பேட்டை, தையல்குணாம்பட்டினம், தீர்த்தனகிரி, ஆதிநாராயணபுரம், தானூர், ஆண்டார்முள்ளிபள்ளம். சிறுபாலையூர், கருவேப்பம்பாடி, கண்ணாடி, ஆடூர்குப்பம், விருப்பாக்சி, ராசாகுப்பம், கருங்குழி, கொளக்குடி, நையின்னக்குப்பம், மருவாய், அரங்கமங்களம், குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரி மற்றும் குண்டியமல்லூர் கிராமங்கள்.

வடலூர் நகராட்சி மற்றும் குறிஞ்சிப்பாடி சிறப்பு நிலை பேரூராட்சி.[1]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1962 என். ராஜாங்கம் திமுக 32,046 56.48% செயராமன் காங்கிரசு 21,898 38.59%
1967 என். ராஜாங்கம் திமுக 25,478 54.50% செயராமன் காங்கிரசு 18,226 38.99%
1971 என். ராஜாங்கம் திமுக 27,465 51.43% செயராமன் நிறுவன காங்கிரசு 25,939 48.57%
1977 எம். செல்வராஜ் திமுக 19,523 28.75% நடராசன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 16,997 25.03%
1980 ஏ. தங்கராசு அதிமுக 38,349 49.65% எம். செல்வராசு திமுக 35,390 45.82%
1984 ஏ. தங்கராசு அதிமுக 45,400 49.90% சி. குப்புசாமி திமுக 34,434 37.85%
1989 என். கணேசமூர்த்தி திமுக 44,887 47.14% ஆர். இராசேந்திரன் அதிமுக (ஜெ) 16,043 16.85%
1991 கே. சிவசுப்ரமணியன் அதிமுக 51,313 46.92% என். கணேசமூர்த்தி திமுக 38,842 35.52%
1996 எம். ஆர். கே. பன்னீர்செல்வம் திமுக 67,152 54.99% என். பண்டரிநாதன் அதிமுக 28,139 23.04%
2001 எம். ஆர். கே. பன்னீர்செல்வம் திமுக 65,425 55.78% கே. சிவசுப்ரமணியன் அதிமுக 41,562 35.44%
2006 எம். ஆர். கே. பன்னீர்செல்வம் திமுக 56,462 --- என். இராமலிங்கம் மதிமுக 54,547 ---
2011 ஆர். ராஜேந்திரன் அதிமுக 88,345 -- எம். ஆர். கே. பன்னீர்செல்வம் திமுக 64,497
2016 எம். ஆர். கே. பன்னீர்செல்வம் திமுக 82,864 44.03% ஆர். ராஜேந்திரன் அதிமுக 54,756 29.09%
2021 எம். ஆர். கே. பன்னீர்செல்வம் திமுக 1,00,688 செல்விராமஜெயம் அதிமுக 84,232
  • 1977இல் காங்கிரசின் இராதாகிருசுணன் 14663 (21.60%) & ஜனதாவின் பாலசுப்பிரமணியன் 13080 (19.26%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் காங்கிரசின் நடேசன் 15000 (15.75%) வாக்குகள் பெற்றார்.
  • 1991இல் பாமகவின் தங்கராசு 18638 (17.04%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் பாமகவின் ஞானமூர்த்தி 12231 (10.02%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் சுந்தர மூர்த்தி 8541 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
1,88,205 % % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1,541 0.82%[2]

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-12. பார்க்கப்பட்ட நாள் 2016-06-03.

வெளியிணைப்புகள்

[தொகு]