எம். ஆர். கே. பன்னீர்செல்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம். ஆர். கே. பன்னீர்செல்வம்
சமூக நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்
தொகுதி குறிஞ்சிப்பாடி
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி திமுக
பெற்றோர் எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி[1]
பணி அரசியல்வாதி
As of 20 நவம்பர், 2020

எம். ஆர். கே. பன்னீர்செல்வம் (M. R. K. Panneerselvam) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராவார்.


முட்டத்தில் 25 ஆகத்து 1957இல் பிறந்த இவர் இளங்கலை படிப்பாக சட்டப்படிப்பை படித்தவர். இவர் தமிழக சட்டசபைக்கு மூன்று முறை தி.மு.க சார்பில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக 11வது சட்டசபை காலத்தில் இருந்தார்..[2][3] இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவரின் அக்காள் மங்கையர்க்கரசி சிதம்பரம் நகராட்சியில் துணைத் தலைவராக இருந்தார்.[4]


மேற்கோள்கள்[தொகு]