கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாட்டில்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2004
|
|
மக்களவைக்கான 39 இடங்கள் |
---|
|
First party
|
Second party
|
|
|
|
தலைவர்
|
மு. கருணாநிதி
|
ஜெ. ஜெயலலிதா
|
கட்சி
|
திமுக
|
அதிமுக
|
தலைவரின் தொகுதி
|
போட்டியிடவில்லை
|
போட்டியிடவில்லை
|
வென்ற தொகுதிகள்
|
39
|
0
|
மாற்றம்
|
+12
|
-14
|
மொத்த வாக்குகள்
|
16,483,390
|
10,002,913
|
விழுக்காடு
|
57.40%
|
34.84%
|
|
|
இந்தியக் குடியரசின் பதினான்காவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 39 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
பின்புலம்[தொகு]
2004ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன. 1999 நாடாளுமன்றத்தேர்தலுக்குப் பின் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அங்கம் வகித்து வந்த திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் அக்கூட்டணியிலிருந்து 2004ம் ஆண்டு விலகின. இந்திய தேசிய காங்கிரசு தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்தன. அக்கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுள் இடம் பெற்றிருந்தன. தேர்தலுக்கு சிறிது காலத்துக்குமுன் தமிழ் மாநில காங்கிரசு இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்து விட்டது. இதனால் காங்கிரசு கூட்டணி மிக வலுவான நிலையில் இருந்தது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக மட்டும் இடம் பெற்றிருந்தது. இவ்விரு கூட்டணிகள் தவிர மூன்றாவது அணி ஒன்றும் களத்தில் இருந்தது. அதில் ஐக்கிய ஜனதா தளம், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மக்கள் தமிழ் தேசம் போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
முடிவுகள்[தொகு]
தமிழக அமைச்சர்கள்[தொகு]
இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:[1]
ஆய அமைச்சர்கள்[தொகு]
இணை அமைச்சர்கள்[தொகு]
மேலும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]