உள்ளடக்கத்துக்குச் செல்

ஈ. வெ. கி. ச. இளங்கோவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஈ. வெ. கி. ச. இளங்கோவன்
மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர்
பதவியில்
2004 - 2009
முன்னையவர்கே கே காளியப்பன்
தொகுதிகோபிச்செட்டிப்பாளையம்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில்
1984–1988
முன்னையவர்டி. கே. சுப்ரமணியம்
பின்னவர்ஆர். இரங்கசாமி
தொகுதிசத்தியமங்கலம் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2023–2024
முன்னையவர்திருமகன் ஈவெரா
தொகுதிஈரோடு கிழக்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1948-12-21)திசம்பர் 21, 1948
ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு14 திசம்பர் 2024(2024-12-14) (அகவை 75)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்வரலட்சுமி
பிள்ளைகள்திருமகன் ஈவெரா, சஞ்சய்
பெற்றோர்தந்தை : ஈ. வெ. கி. சம்பத்
தாயார் : ஈ. வெ. கி. சுலோசனாசம்பத்
வாழிடம்கோபிச்செட்டிப்பாளையம், தமிழ்நாடு, இந்தியா
மூலம்:

ஈ. வெ. கி. ச. இளங்கோவன் (ஆங்கிலம்: E. V. K. S. Elangovan, திசம்பர் 21, 1948 - திசம்பர் 14, 2024) ஒரு தமிழக அரசியல்வாதியும், தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் ஆவார். முந்தைய (2004–2009) காங்கிரசு ஆட்சிக் காலத்தில் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சருமாக இருந்தவர்.[1] தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி மூத்த தலைவர்களாக இருந்தவர்.

இளமைக் காலம்

[தொகு]

இவர் திசம்பர் 21, 1948 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பி. ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றார்.

குடும்பம்

[தொகு]

இவர் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும் அவர் மகன் ஈ. வெ. கி. சம்பத் அவர்களின் மகனும் ஆவார். நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். இவரின் தாயார் ஈ. வெ. கி. சுலோசனாசம்பத் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்புச் செயலாளராக இருந்தார். இவரின் மனைவி பெயர் வரலட்சுமி, இவர்களுக்கு 2 மகன்கள். இரண்டாவது மகன் திருமகன் ஈவெரா 2023 ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

போட்டியிட்ட தேர்தல்கள்

[தொகு]
ஆண்டுதொகுதியின் பெயர்மக்களவை / சட்டமன்றம்முடிவு
1984சத்யமங்கலம் சட்டமன்றத் தொகுதிசட்டமன்றம்வெற்றி
1989பவானி சட்டமன்றத் தொகுதிசட்டமன்றம்தோல்வி
1996கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிமக்களவைதோல்வி
2004கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதிமக்களவைவெற்றி
2009ஈரோடு மக்களவைத் தொகுதிமக்களவைதோல்வி
2014திருப்பூர் மக்களவைத் தொகுதிமக்களவைதோல்வி
2019தேனி மக்களவைத் தொகுதிமக்களவைதோல்வி
2023 ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிசட்டமன்றம்வெற்றி

வகித்த பதவிகள்

[தொகு]

இறப்பு

[தொகு]

இளங்கோவன் உடல் நலக்குறைவால் 2024 டிசம்பர் 14 ஆம் தேதி சென்னையில் காலமானார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Elangovan,Shri E.V.K.S." Lok Sabha. Archived from the original on 17 ஜூன் 2012. Retrieved 2 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்- அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்". குமுதம். https://kumudam.com/evks-elangovan-passes-away-congress-workers-in-shock. பார்த்த நாள்: 14 December 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._வெ._கி._ச._இளங்கோவன்&oldid=4494270" இலிருந்து மீள்விக்கப்பட்டது