ஈ. வெ. கி. ச. இளங்கோவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஈ.வெ.கி.ச.இளங்கோவன்
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 21, 1948 (1948-12-21) (அகவை 69)
ஈரோடு, தமிழ்நாடு
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) வரலட்சுமி
பிள்ளைகள் 2 மகன்கள்
இருப்பிடம் சென்னை

ஈ.வெ.கி.ச.இளங்கோவன் (ஆங்கிலம்:E. V. K. S. Elangovan) ஒர் தமிழக அரசியல் வாதி ஆவார். இவர் ஈரோட்டில் 21-12-1948 ஆம் தேதி பிறந்தார். சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றார். இவர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா.வின் அண்ணன் கிருஷ்ணசாமியின் பேரன் ஆவார். இவரின் தந்தை ஈ. வெ. கி. சம்பத் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவரின் தாயார் ஈ. வெ. கி. சுலோசனாசம்பத் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு செயலாளராக இருந்தார்.. இவரது மனைவி பெயர் வரலட்சுமி இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.இவர் 2004 மக்களவைத் தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இரண்டு லட்சம் (214477) வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்.

இவர் தமிழகச் சட்டப்பேரவை உறுப்பினராகவும், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும்,தமிழக காங்கிரஸ் தலைவராகவும்மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._வெ._கி._ச._இளங்கோவன்&oldid=2339237" இருந்து மீள்விக்கப்பட்டது