வாழப்பாடி ராமமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாழப்பாடி கே. ராமமூர்த்தி
தனிநபர் தகவல்
பிறப்பு 1940 (1940)
வாழப்பாடி, சேலம், தமிழ்நாடு
இறப்பு அக்டோபர் 27, 2002(2002-10-27) (அகவை 61–62)
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

வாழப்பாடி கே. ராமமூர்த்தி (1940 - அக்டோபர் 27, 2002) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் ஆறு முறை இந்திய மக்களவை உறுப்பினராகவும் இரு முறை இந்திய நடுவண் அரசில் ஆய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

ராமமூர்த்தி 1940 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிறந்தார். 1959இல் திராவிடர் கழகத்தில் இணைந்தார். அடுத்த ஆண்டே அக்கட்சியிலிருந்து விலகி இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். 1968ல் சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளரானார். காங்கிரசு கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான ஐ. என். டி. யூ. சியின் தலைவராகப் பணியாற்றினார். காங்கிரசின் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். ஜி. கே. மூப்பனார் தலைமையிலான காங்கிரசு கோஷ்டிக்கு எதிராக “வாழப்பாடி கோஷ்டி” என்று ஒன்று இவரது தலைமையில் செயல்பட்டது. 1977 பொதுத் தேர்தலில் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980, 1984, 1989, 1991 பொதுத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியிலிருந்தும், 1998 தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனிக்கட்சி[தொகு]

1991-92ல் பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான நடுவண் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பின் காங்கிரசிலிருந்து விலகி திவாரி காங்கிரசில் இணைந்து அதன் தமிழ்நாட்டுத் தலைவராகப் பணியாற்றினார். 1996 சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். இத்தேர்தலில் திவாரி காங்கிரசு எத்தொகுதியிலும் வெற்றி பெற வில்லை. பின் 1998 நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழக ராஜீவ் காங்கிரசு என்ற கட்சியைத் தொடங்கி அதிமுக-பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வென்றார். 1998-99ல் அடல் பிகாரி வாச்பாய் அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பின்பு ஆட்சி கலைக்கப்பட்டு அடுத்த வருடத்திலேயே 1999 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-பாஜக கூட்டணியில் இடம் பெற்றார். ஆனால் வெற்றி பெற இயலவில்லை. 2001ல் கட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் காங்கிரசில் இணைந்து விட்டார். 2002ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]