தமிழக ராஜீவ் காங்கிரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழக ராஜீவ் காங்கிரசு (தமிழக ராஜீவ் காங்கிரஸ்) 1998-2001 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. வாழப்பாடி ராமமூர்த்தியால் தொடங்கப்பட்டது. ராமமூர்த்தி நெடுங்காலமாக இந்திய தேசிய காங்கிரசின் மாநிலத் தலைவர்களுள் ஒருவராக இருந்து வந்தார். 1992ல் காங்கிரசிலிருந்து விலகி திவாரி காங்கிரசில் இணைந்தார். பின்னர் அங்கிருந்து வெளியேறி 1998ல் “தமிழக ராஜீவ் காங்கிரஸ்” என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். 1998 பொதுத் தேர்தலில் அதிமுக-பாஜக-மதிமுக-பாமக கூட்டணியில் இணைந்து இக்கட்சி போட்டியிட்டது. சேலம் மக்களவைத் தொகுதியில் ராமமூர்த்தி வெற்றி பெற்றார். 1999 பொதுத் தேர்தலில் திமுக-பாஜக-மதிமுக-பாமக கூட்டணியின் அங்கமாக மீண்டும் இக்கட்சி போட்டியிட்டது. ஆனால் வெற்றி பெற இயலவில்லை. 2001 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட இக்கட்சி எந்த தொகுதியிலும் வெற்றி பெற இயலவில்லை. இதனால் 2001ஆம் ஆண்டு ராமமூர்த்தி கட்சியைக் கலைத்து விட்டு தன் ஆதரவாளர்களுடன் காங்கிரசில் இணைந்து விட்டார்.

மேற்கோள்கள்[தொகு]