தமிழர் தேசிய முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழர் தேசிய முன்னணி என்பது தமிழ்த் தேசியவாதி பழ. நெடுமாறன் என்பவரும் அவருடன் 60 தமிழ்த் தேசிய அமைப்புகளும் சேர்ந்து துவங்கப்பட்ட கட்சியாகும். இதன் தலைவராகப் பழ. நெடுமாறன் செயல்படுகிறார். [1]

துவக்கம்[தொகு]

2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூரில் வைத்து 400 தமிழ் உணர்வாளர்கள் சேர்ந்து இந்த கட்சியைத் துவக்கினார்கள்.

கொடி[தொகு]

இக்கட்சியின் கொடி மேலே நீல வண்ணத்திலும், கீழே மஞ்சள் வண்ணத்திலும் அமைந்துள்ளது. நீலம் உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழ் மக்களைக்குறிக்கும் என்றும், மஞ்சள் நிறம் தமிழர்களின் வீரம், பண்பாடு, வளமை போன்றவற்றைக் குறிக்கும் என்று கூறியுள்ளார்கள்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_தேசிய_முன்னணி&oldid=2983498" இருந்து மீள்விக்கப்பட்டது