இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி, தமிழ்த் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் துவங்க இருந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அர்ஜுனமூர்த்தி[1] இக்கட்சியின் தலைவர் ஆவார். இந்தகட்சி தொடங்கப்பட்டுள்ளதற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அர்ஜுனமூர்த்தி முன்னர் பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்தார். ரஜினிகாந்த் தனிக் கட்சி துவங்கும் திட்டத்தைக் கைவிட்ட நிலையில், அர்ஜுனமூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியை 27 பிப்ரவரி 2021 அன்று துவக்கியுள்ளார்.[2]

கட்சியின் வாக்குறுதிகள்[தொகு]

இந்த ஆட்சிக்கு வந்தால் ஐந்து திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அடையாள அட்டையுடன், இலவச பெட்ரோல் அடையாள அட்டை வழங்கப்படும். இக்கட்சி ஆட்சிக்கு வந்தால் முதலமைச்சர் உள்ளிட்ட நான்கு துணை முதலமைச்சர்கள் இருப்பார்கள். பத்தாம் வகுப்பிற்கு பிறகு படிப்பை கைவிட்ட மாணவர்களை மீண்டும் இலவசமாக தொழிற்கல்வி பயில பல்கலைக்கழகம் அமைக்கப்படும். கிராமங்கள் தோறும் கிராம வளர்ச்சி அலுவலரை நியமித்து கிராமிய பொருளாதராம் பெருக்கப்படும்.

2021 தேர்தலிலில்[தொகு]

ரோபோ சின்னத்தை கொண்டுள்ள இக்கட்சி 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று இக்கட்சியின் தலைவர் அர்ஜுனமூர்த்தி 17 மார்ச் 2021 அன்று தெரிவித்துள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Who is Arjuna Murthy, coordinator of Rajinikanth's political party
  2. இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி
  3. இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி, 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் எந்த தொகுதியிலும் போட்டியில்லை