அண்ணா திராவிடர் கழகம்
அண்ணா திராவிடர் கழகம் | |
---|---|
நிறுவனர் | வி. கே. திவாகரன் தற்போதைய பொதுச் செயலாளர் (2018-) |
தொடக்கம் | 10 சூன், 2018 |
கொள்கை | நீர் சேமிப்பு, பாலின சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் |
அரசியல் நிலைப்பாடு | நடுநிலை |
இந்தியா அரசியல் |
அண்ணா திராவிடர் கழகம் ஒரு தமிழக அரசியல் கட்சியாகும். 2018 சூன் 10 அன்று வி. கே. சசிகலாவின் சகோதரரான வி. கே. திவாகரன், இக்கட்சியைத் தொடங்கினார்.[1]
புதிய அமைப்பு தொடக்கம்[தொகு]
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் ஓ. பன்னீர்செல்வம் ஓர் அணியிலும், க.பழனிசாமி மற்றும் டி. டி. வி. தினகரன் ஒரு அணியில் இருந்தனர்.
பின்னர் க.பழனிச்சாமியும், ஓ. பன்னீர் செல்வமும் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பின் இணைந்தனர். இதனால் சசிகலாவின் சகோதரரி மகனான டி. டி. வி. தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.
இதனால் டி. டி. வி. தினகரனுக்கும், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 'அம்மா அணி' என்ற பெயரில் திவாகரன் புதிய அமைப்பு ஒன்றைத் தொடங்கினார். பின்னர் அதை கட்சியாக மாற்றினார்.
கட்சியின் பெயர்[தொகு]
திருவாரூர், மன்னார்குடியில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை சூன் 10, 2018 அன்று அறிமுகப்படுத்தினார். தனது கட்சியின் பெயர் அண்ணா திராவிடர் கழகம் என்றும் கட்சி கொடியானது கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறக்கொடியின் நடுவே பச்சை நிறத்தில் நட்சத்திரம் ஆகியவை உள்ளது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "அண்ணா திராவிடர் கழகம்’புதிய கட்சி தொடங்கினார் திவாகரன்". https://m.dinakaran.com/cms/News_Detail.asp?Nid=410193. தினகரன் (சூன் 11, 2018)
- ↑ "அண்ணா திராவிடர் கழகம்: கட்சியின் பெயரை அறிவித்தார் திவாகரன்; கொடியும் அறிமுகம்". https://www.dailythanthi.com/News/State/2018/06/10104443/Anna-Dravidar-Kazagam-Divakaran-declared-party-name.vpf.தினத் தந்தி (சூன் 10, 2018)