வி. கே. திவாகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. கே. திவாகரன்
அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர் மற்றும் பொதுச்செயலாளார்
பதவியில்
சூன் 11,2018 – ஜூலை 12, 2022
தனிநபர் தகவல்
பிறப்பு திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி அண்ணா திராவிடர் கழகம் (2018-2022)
பிற அரசியல்
சார்புகள்
அஇஅதிமுக (2017 வரை)
இருப்பிடம் தஞ்சை, தமிழ்நாடு, இந்தியா

வி. கே. திவாகரன் (V. K. Divakaran) என்பவர் நடிகரும்,வி. கே. சசிகலாவின் சகோதரரும் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியின் நிறுவன தலைவரும்,பொதுச்செயலாளரும் ஆவார்.[1][2]

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் ஓ. பன்னீர்செல்வம் ஓர் அணியிலும், இபிஎஸ் மற்றும் டி. டி. வி. தினகரன் ஒரு அணியில் இருந்தனர். பின்னர் பழனிச்சாமியும், ஓ. பன்னீர் செல்வமும் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பின் இணைந்தனர். இதனால் இவரின் மருமகன் டி. டி. வி. தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.

இதனால் டி. டி. வி. தினகரனுக்கும், மாமா திவாகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 'அம்மா அணி' என்ற பெயரில் திவாகரன் புதிய அமைப்பு ஒன்றைத் தொடங்கினார். பின்னர் அதை கட்சியாக மாற்றினார்.இவருக்கு ஜெய் ஆனந்த் என்ற மகன் உள்ளார்.[3][4]1991ல் அதர்மம் என்ற பெயரில் முரளி நடித்த திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் வேடம் ஏற்று நடித்தார் திவாகரன்.[5] இந்நிலையில் சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு வெளியான அறிக்கையில், “சின்னம்மா தலைமையில் அதிமுகவோடு, அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் விழா தஞ்சாவூரில் வருகிற 2022 ஜூலை 12ஆம் தேதி காலை 11 மணியளவில் தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கே._திவாகரன்&oldid=3459049" இருந்து மீள்விக்கப்பட்டது