திருமகன் ஈவெரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமகன் ஈ. வெ. ரா.
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2021-04.01.2023
முன்னவர் கே. எஸ். தென்னரசு
பின்வந்தவர் --
தொகுதி ஈரோடு கிழக்கு
தனிநபர் தகவல்
பிறப்பு ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு 4 சனவரி 2023[1]
ஈரோடு,தமிழ்நாடு,இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) பூர்ணிமா ராமசாமி
பெற்றோர் ஈவிகேஎஸ் இளங்கோவன் -வரலட்சுமி
இருப்பிடம் ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா

திருமகன் ஈவெரா (Thirumagan EVR; 1977 – 4 சனவரி 2023) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராக உள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் கோபிச்செட்டிப்பாளையத்தில் ஈ. வெ. கி. ச. இளங்கோவன் - வரலட்சுமி இணையரின் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் ராம். இவர் பெரியார் ஈ. வெ. ராமசாமியின் அண்ணன் ஈ. வெ. கிருஷ்ணசாமியின் கொள்ளுப்பேரனும் அவர் மகன் ஈ. வி. கே. சம்பத்தின் பேரனும் ஆவார். திருமகன் ஈவெராக்கு சஞ்சய் என்ற அண்ணன் ஒருவர் இருக்கிறார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்தார்.[2][3] இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறையின் தலைவராக இருந்துள்ளார்.[4] 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இறப்பு[தொகு]

திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவால் ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தநிலையில் 2023 சனவரி 4 அன்று காலமானார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.hindutamil.in/news/tamilnadu/924972-erode-east-constituency-congress-mla-thirumagan-evera-passes-away-cm-m-k-stalin-pays-tribute.html
  2. தமிழக காங்கிரஸ் பொருளாளர் ஆனார் ரூபி மனோகரன் 32 துணை தலைவர், 57 பொதுச் செயலர் நியமனம் வசந்தகுமார், திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ், தங்கபாலு வாரிசுகளுக்கு பொதுச் செயலர் பதவி. தி ஹிந்து தமிழ் நாளிதழ். 03 ஜனவரி 2021. https://www.hindutamil.in/news/todays-paper/tnadu/618468-.html. 
  3. தமிழக காங்கிரஸ் கட்சி மாநில நிர்வாகிகள் நியமனம்: வாரிசுகளுக்கு அதிக அளவில் பதவி. தி ஹிந்து தமிழ் நாளிதழ். 02 ஜனவரி 2021. https://www.hindutamil.in/news/tamilnadu/618244-appointment-of-tamil-nadu-congress-party-state-administrators-high-post-for-heirs.html. 
  4. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகனுக்கு காங்கிரஸில் பதவி. தி ஹிந்து தமிழ் நாளிதழ். 10ஏப்ரல் 2015. https://www.hindutamil.in/news/tamilnadu/39926-.html. 
  5. https://news.google.com/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMyMTAzNjXSAQA?hl=ta&gl=IN&ceid=IN%3Ata
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமகன்_ஈவெரா&oldid=3644557" இருந்து மீள்விக்கப்பட்டது