உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014

← 2009 24 ஏப்ரல் 2014 2019 →

39 இடங்கள்
  First party Second party
 
தலைவர் ஜெ. ஜெயலலிதா நரேந்திர மோதி
கட்சி அஇஅதிமுக பா.ஜ.க
கூட்டணி கூட்டணி அல்லாமல் தனித்து போட்டி தே.ச.கூ
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
- வாரணாசி
வென்ற
தொகுதிகள்
37 2 (பாஜக-1+பாமக-1)
மாற்றம் Increase 28 Increase 2

  Third party Fourth party
 
தலைவர் மு. கருணாநிதி சோனியா காந்தி
கட்சி திமுக காங்கிரசு
கூட்டணி ஜ.மு.கூ ஐ.மு.கூ
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
- ரேபரேலி
வென்ற
தொகுதிகள்
0 0
மாற்றம் 18 8


பச்சை = அதிமுக மற்றும் ஆரஞ்சு = தேசிய ஜனநாயகக் கூட்டணி


இந்தியக் குடியரசின் பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஏப்ரல் 24, 2014 அன்று நடந்தது.

தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் முன்னெடுப்புகள்

[தொகு]
  • வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை பொதுமக்களிடையே பரப்பும்முகமாக அரசு சார்பற்ற அமைப்புகள் இரண்டுடன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், ஒப்பந்தம் செய்தது.[1]
  • தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக தேர்தலுக்கு முந்தைய நாளில் மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.[2] தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள 144 தடையுத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தியது.[3]

தேர்தல் அட்டவணை

[தொகு]
  • தேர்தலின் முக்கிய நாட்கள் காலக்கோடு[4]
தேதி நிகழ்வு
மார்ச் 29 மனுத்தாக்கல் ஆரம்பம்
ஏப்ரல் 5 மனுத்தாக்கல் முடிவு
ஏப்ரல் 7 வேட்புமனு ஆய்வு ஆரம்பம்
ஏப்ரல் 9 வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்
ஏப்ரல் 24 வாக்குப்பதிவு
மே 16 வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு

தேர்தல் கூட்டணிகள்

[தொகு]

அதிமுக

[தொகு]
  • இத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதென தமிழக வாழ்வுரிமை கட்சியும், சமத்துவ மக்கள் கட்சியும் முடிவு செய்தன.[5]
  • கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக, 4 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றினை அதிமுக அமைத்தது.[6]
  • தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அதிமுகவுடனான கூட்டணி முறிந்ததாக இடதுசாரிகள் தெரிவித்தனர்.[7][8] இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது என முடிவு செய்துள்ளதாக இவ்விரு கட்சிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.[9]
    • ஒரு தருணத்தில், தமிழ்நாட்டில் அதிமுகவும் இந்திய பொதுவுடமைக் கட்சியும் இணைந்து போட்டியிடுவார்கள் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார்.[10][11][12] தமிழ்நாட்டில் அதிமுக - இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெறுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.[13]
    • மத்தியில் 10 வருடங்களுக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சியில் நரேந்திர மோடி அடுத்த இந்திய பிரதமராக கொண்டாடபட்டபோது. பாஜகவின் வலதுசாரி சித்தாந்ததிற்க்கு எதிராக தமிழகத்தில் ஜெயலலிதா அவர்கள் தனது அதிமுகவுடன் மதசார்பற்ற இடதுசாரி சித்தாந்த கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ), இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி (சி.பி.எம்) போன்ற கட்சிகள் தனது கூட்டணியில் இணையுமாறு அழைப்புவிடுத்தார்.
    • ஆனால் தொகுதி உடன்பாட்டால் இம்முறை இரண்டு கம்னியூஸ்ட் கட்சிகளும் இணையாததால். அதிமுக எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டியிட்டு தமிழகத்தில் 37 தொகுதிகளில் ஜெயலலிதாவின் அதிமுக கட்சி வென்று மத்தியில் நாடாளுமன்றத்தில் மதவாத கட்சிக்கு இடையே தனிப்பெரும் மாநில கட்சியாக உருவெடுத்தது. இந்த வெற்றியின் ரகசியத்தை செல்வி ஜெயலலிதாவிடம் கேட்டபோது இந்த வெற்றி எனக்கு கிடைத்த வெற்றி என்பதை விட இது பெரியாரின் சித்தாந்ததிற்க்கு, கிடைத்த வெற்றி அண்ணாவின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, புரட்சி தலைவர் புகழிற்க்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.
    • அதே போல் மத்தியில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க அறுதிபெரும்பாண்மை இல்லாமல் தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் எங்கள் அதிமுகழக அரசு சார்பில் வெற்றி பெற்ற அனைத்து மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் பாஜக அல்லாத அரசு ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சி பொதுச்செயலரும், தமிழக முதலவருமான ஜெயலலிதா அவர்கள் கூறினார்.

பாஜக கூட்டணி

[தொகு]

திமுக கூட்டணி

[தொகு]

பொதுவுடமைக் கட்சிகள் கூட்டணி

[தொகு]
  • பொதுவுடமைக் கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது இல்லையென்றான பின் அவை எக்கூட்டணியிலும் இணையாமல் தனித்து போட்டியிட்டன.[21]
  • இரு பொதுவுடமைக் கட்சிகளும் தலா ஒன்பது இடங்களில் போட்டியிட்டன.[22] இந்திய பொதுவுடமைக் கட்சி தென்காசி, நாகப்பட்டினம், திருப்பூர், சிவகங்கை, புதுவை, கடலூர், திருவள்ளூர், தருமபுரி மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளிலும் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) கோயம்புத்தூர், மதுரை, வட சென்னை, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளிலும் போட்டியிட்டது.

காங்கிரசு

[தொகு]
  • எக்கட்சிகளும் காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை.
  • புதுச்சேரியில் இதன் வேட்பாளராக நடுவண் அரசின் அமைச்சர் நாராயணசாமியை அறிவித்தது.[23]

பிற கட்சிகள்

[தொகு]
  • கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர் சுப. உதயகுமார் தன் ஆதரவாளர்கள் 500 பேருடன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்[24] தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி எளிய மக்கள் கட்சி என்று அழைக்கப்படும் என்று கூறினார்.[25]
  • ஆம் ஆத்மி கட்சியின் ஏழாவது வேட்பாளர் பட்டியலில் 8 பேர் தமிழகத்திலிருந்து போட்டியிடுவர் என்றும் சுப. உதயகுமார் கன்னியாகுமரியிலிருந்து போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது[26]
  • ஆம் ஆத்மி கட்சியின் பன்னிரெண்டாவது வேட்பாளர் பட்டியலில் 9 பேர் தமிழகத்திலிருந்து போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டது [27]

கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல்

[தொகு]
  • அதிமுக, புதுச்சேரியையும் சேர்த்த 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது[28]. கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவான பின் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என்று ஜெயலலிதா கூறினார்.[29]
  • திமுக புதுச்சேரிக்கும் சேர்த்து 35 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ஆ. ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.[30][31][32].
  • தேமுதிக வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.[33]
  • பாசக கூட்டணி தொகுதி ஓதுக்கீடு பட்டியலை பாசக தலைவர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார், இதில் தேமுதிக 14 இடங்களிலும், பாமக 8 இடங்களிலும் பாசக 8 இடங்களிலும் மதிமுக 7 இடங்களிலும் கொங்கு மக்கள் தேசிய கட்சியும் இந்திய ஜனநாயக கட்சியும் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகின்றனர்.[34]
  • மதிமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வைகோ அறிவித்தார்[35]
  • காங்கிரசில் 30 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்[36]
  • இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள்[37]:
தொகுதி வேட்பாளர்
வடசென்னை உ. வாசுகி
கோயம்புத்தூர் பி.ஆர். நடராஜன்
கன்னியாகுமரி ஏ.வி. பெல்லார்மின்
மதுரை பா. விக்ரமன்
திருச்சி எஸ். ஸ்ரீதர்
விருதுநகர் கே. சாமுவேல்ராஜ்
திண்டுக்கல் என். பாண்டி
விழுப்புரம் (தனி) ஜி. ஆனந்தன்
தஞ்சாவூர் எஸ். தமிழ்ச்செல்வி
அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் இரண்டு பேர் பெண்கள்; இருவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இதில் விருதுநகர் பொது தொகுதியில் தலித் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.

கட்சிகளின் தேர்தல் பரப்புரை

[தொகு]
  • நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது முதற்கட்ட பரப்புரையை, அதிமுக பொதுச் செயலராகிய ஜெயலலிதா மார்ச் 3 முதல் ஏப்ரல் 5 வரை ஈடுபடுவாரென தெரிவிக்கப்பட்டது. விரிவான பயண விவரமும் வெளியிடப்பட்டது.[38]

கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

[தொகு]
  • அதிமுகவின் தேர்தல் அறிக்கை பெப்ரவரி 25 அன்று வெளியிடப்பட்டது.[39]
  • திமுகவின் தேர்தல் அறிக்கை மார்ச் 11 அன்று வெளியிடப்பட்டது.[40]
  • இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)த்தின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.[41]

தேர்தல் கருத்துக் கணிப்புகள்

[தொகு]
  • பெப்ரவரி 13, 2014 அன்று டைம்ஸ் நொவ் தொலைக்காட்சி - CVoter நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பின் விவரம், வெளியிடப்பட்டது[42]:
கட்சி கணிக்கப்பட்ட இடங்கள்
அதிமுக 27
திமுக 5
தேமுதிக 2
காங்கிரஸ் 1
மதிமுக 1
சிபிஐ 1
சிபிஎம் 1
விடுதலை சிறுத்தைகள் கட்சி 1
நிறுவனம் கருத்துகணிப்பு வெளியான தேதி அதிமுக கூட்டணி திமுக கூட்டணி காங்கிரசு கூட்டணி பாசக கூட்டணி மற்றவர்கள்
டைம்ஸ் நவ்[42] பெப்ரவரி 13,2014 27 6 1 3 2
ஐபிஎன்லைவ்[43] சனவரி 25,2014 15-23 7-13 க.எ க.எ க.எ
ஐபிஎன்லைவ்[44] மார்ச்சு 7, 2014 14-20 10-16 க.எ க.எ க.எ
ஏபிசி-நீல்சன்[45] பெப்ரவரி 22, 2014 19 13 க.எ க.எ க.எ
என்டிடிவி[46] மார்ச்சு 13 27 10 க.எ 2 க.எ
ஐபிஎன்லைவ்[47] ஏப்ரல் 1 15-21 10-16 0 6-10 0
என்டிடிவி [48] ஏப்பிரல் 3 25 11 0 3 0
  • க.எ = கருத்துகணிப்பு எடுக்கவில்லை அல்லது தமிழகத்துக்கு என்றில்லாமல் அகில இந்திய கணிப்புடன் இணைத்து சொல்லப்பட்டது

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
  • வேட்புமனுவினை தாக்கல் செய்தல் ஏப்ரல் 5 அன்று முடிவடைந்த நிலையில், மொத்தம் 1318 பேர் வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தனர்[49][50].
ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம்
1198 118 2 1318
  • தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்:
ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம்
842 63 1 906
  • வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்:
ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம்
53 8 0 61
  • களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்:
ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம்
789 55 (6.5%) 1 845

வேட்பாளர் இறுதிப் பட்டியல் (முக்கிய கட்சிகள், தொகுதிவாரியாக)[51]

[தொகு]
தொகுதியின் பெயர் வேட்பாளர்
அதிமுக திமுக கூட்டணி பாஜக கூட்டணி காங்கிரசு பொதுவுடமைக் கட்சி கூட்டணி
திருவள்ளூர் பி.வேணுகோபால் ரவிக்குமார் விசிக வி. யுவராஜ் தேமுதிக எம். ஜெயக்குமார் ஏ. எஸ். கண்ணன் சிபிஐ
வட சென்னை டி. ஜி. வெங்கடேஷ்பாபு ஆர். கிரிராஜன் திமுக சௌந்தரபாண்டியன் தேமுதிக பிஜு சாக்கோ உ. வாசுகி சிபிஎம்
தென் சென்னை ஜெ. ஜெயவர்தன் டி. கே. எஸ். இளங்கோவன் திமுக இல. கணேசன் பாஜக எஸ். வி. ரமணி
மத்திய சென்னை எஸ். ஆர். விஜயகுமார் தயாநிதி மாறன் திமுக ஜே. கே. ரவீந்திரன் தேமுதிக சி. டி. மெய்யப்பன்
ஸ்ரீபெரும்புதூர் கே. என். ராமச்சந்திரன் ஜெகத்ரட்சகன் திமுக மாசிலாமணி மதிமுக அருள் அன்பரசு
காஞ்சிபுரம் (தனி) மரகதம் குமாரவேல் ஜி. செல்வம் திமுக மல்லை சத்யா மதிமுக டி. விஸ்வநாதன்
அரக்கோணம் கோ. ஹரி என். ஆர். இளங்கோ திமுக ஆர். வேலு பாமக ராஜேஷ் எஸ். ராஜேஷ்
வேலூர் பி. செங்குட்டுவன் எம்.ரகுமான் இயூமுலீ ஏ. சி. சண்முகம் புதிய நீதிக் கட்சி விஜய் இளஞ்செழியன் இம்தாத் சரிப்
கிருஷ்ணகிரி கே. அசோக்குமார் பி. சின்னபில்லப்பா திமுக ஜி. கே. மணி பாமக ஏ. செல்லக்குமார்
தருமபுரி பி. எஸ். மோகன் ஆர். தாமரைச் செல்வன் திமுக அன்புமணி ராமதாஸ் பாமக ராம. சுகந்தன் சிபிஐ
திருவண்ணாமலை ஆர். வனரோஜா சி. என். அண்ணாத்துரை திமுக எதிரொலி மணியன் பாமக ஏ.சுப்ரமணியம்
ஆரணி வி. ஏழுமலை ஆர். சிவானந்தம் திமுக ஏ. கே. மூர்த்தி பாமக கே. விஷ்ணு பிரசாத்
விழுப்புரம் (தனி) எஸ். ராஜேந்திரன் கே. முத்தையன் திமுக உமா சங்கர் தேமுதிக கே. ராணி ஜி. ஆனந்தன் சிபிஎம்
கள்ளக்குறிச்சி கே. காமராஜ் மணிமாறன் திமுக வி. பி. ஈஸ்வரன் தேமுதிக ஆர். தேவதாஸ்
சேலம் வி. பன்னீர்செல்வம் உமா ராணி திமுக எல். கே. சுதீஷ் தேமுதிக மோகன் குமாரமங்கலம்
நாமக்கல் பி. ஆர். சுந்தரம் எஸ். காந்திசெல்வன் திமுக எஸ். கே. வேல் தேமுதிக ஜி. சுப்பிரமணியம்
ஈரோடு எஸ். செல்வக்குமார சின்னையன் பவித்ரவள்ளி திமுக ஏ. கணேசமூர்த்தி மதிமுக சி. கோபி கே. கே. குமாரசாமி
திருப்பூர் வா. சத்யபாமா செந்தில்நாதன் திமுக என். தினேஷ் குமார் தேமுதிக இ. வி. கே. எஸ். இளங்கோவன் சுப்பாராயன் சிபிஐ
நீலகிரி (தனி) கோபால் ஆ.ராசா திமுக பி.காந்தி
கோயம்புத்தூர் நாகராஜன் பழனிக்குமார் திமுக ஆர்.பிரபு பி.ஆர். நடராஜன் சிபிஎம்
பொள்ளாச்சி மகேந்திரன் பொங்கலூர் பழனிச்சாமி திமுக ஈஸ்வரன் கொமதேக கே.செல்வராஜு
திண்டுக்கல் உதயகுமார் காந்திராமன் திமுக என்.எஸ்.வி. சித்தன் என். பாண்டி சிபிஎம்
கரூர் தம்பித்துரை ம. சின்னசாமி திமுக என்.எஸ். கிருஷ்ணன் தேமுதிக எஸ்.ஜோதிமணி
திருச்சிராப்பள்ளி பா.குமார் அன்பழகன் திமுக எஸ்.எம்.டி. சாருபாலா தொண்டமான் எஸ். ஸ்ரீதர் சிபிஎம்
பெரம்பலூர் மருதராஜன் சீமானூர் பிரபு திமுக பாரிவேந்தர் பச்சமுத்து இஜக எம்.ராஜசேகரன்
கடலூர் ஆ.அருண்மொழிதேவன் நந்தகோபாலகிருஷ்ணன் திமுக ஜெயசங்கர் தேமுதிக கே.எஸ்.அழகிரி கு.பாலசுப்ரமணியன்
சிதம்பரம் (தனி) சந்திரகாசி தொல்.திருமாவளவன் விசிக சுதாமணிரத்னம் பாமக பி.வள்ளல்பெருமாள்
மயிலாடுதுறை பாரதிமோகன் செ. ஹைதர் அலி மமக க. அகோரம் பாமக மணிசங்கர் அய்யர்
நாகப்பட்டினம் (தனி) கோபால் ஏ.கே.எஸ். விஜயன் திமுக வடிவேல் ராவணன் பாமக டி.ஏ.பி. செந்தில் பாண்டியன் கோ. பழனிச்சாமி சிபிஐ
தஞ்சாவூர் பரசுராமன் டி.ஆர்.பாலு திமுக கருப்பு முருகானந்தம் பாஜக கிருஷ்ணசாமி வாண்டையார் எஸ். தமிழ்ச்செல்வி சிபிஎம்
சிவகங்கை செந்தில்நாதன் துரைராஜ் திமுக ஹெச். ராஜா பாஜக கார்த்தி சிதம்பரம் எஸ்.கிருஷ்ணன் சிபிஐ
மதுரை கோபாலகிருஷ்ணன் வேலுச்சாமி திமுக டி.சிவமுத்துகுமா தேமுதிக பி.என்.பரத் நாச்சியப்பன் பா. விக்ரமன் சிபிஎம்
தேனி பார்த்திபன் பொன். முத்துராமலிங்கம் திமுக க. அழகுசுந்தரம் மதிமுக ஜே.எம். ஆருண்
விருதுநகர் ராதாகிருஷ்ணன் ரத்னவேலு திமுக வைகோ மதிமுக மாணிக் தாகூர் கே. சாமுவேல்ராஜ் சிபிஎம்
இராமநாதபுரம் அன்வர்ராஜா முகமது ஜலீல் திமுக குப்புராமு சு. திருநாவுக்கரசர் உமா மகேஸ்வரி
தூத்துக்குடி ஜெயசீலி தியாகராஜ் ஜெகன் திமுக எ.பி.சி.வி. சண்முகம் சிபிஐ
தென்காசி (தனி) வசந்தி முருகேசன் கிருஷ்ணசாமி புதிய தமிழகம் சதன் திருமலைக்குமார் மதிமுக கே.ஜெயகுமார் பொ.லிங்கம் சிபிஐ
திருநெல்வேலி பிரபாகர் தேவராஸ் சுந்தரம் திமுக எஸ்.எஸ். ராமசுப்பு
கன்னியாகுமரி ஜான்தங்கம் எப்.எம்.ராஜரத்தினம் திமுக பொன்.ராதா கிருஷ்ணன் பாஜக வசந்தகுமார் ஏ.வி. பெல்லார்மின் சிபிஎம்

.[22] இந்திய பொதுவுடமைக் கட்சி தென்காசி, நாகப்பட்டினம், திருப்பூர், சிவகங்கை, புதுவை, கடலூர், திருவள்ளூர், தருமபுரி மற்றும் தூத்துக்குடி

வாக்குப்பதிவு

[தொகு]

2009 நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவுடன் ஒரு ஒப்பீடு

[தொகு]
தொகுதியின் எண் தொகுதியின் பெயர் 2009 வாக்குப்பதிவு சதவீதம்[52] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [53][54] வித்தியாசம்
1. திருவள்ளூர் 70.57% 73.73% 3.16%
2. வட சென்னை 64.91% 63.95% 0.96%
3. தென் சென்னை 62.66% 60.37% 2.29%
4. மத்திய சென்னை 61.04% 61.49% 0.45%
5. ஸ்ரீபெரும்புதூர் 66.10% 66.21% 0.11%
6. காஞ்சிபுரம் (தனி) 74.24% 75.91% 1.67%
7. அரக்கோணம் 77.84% 77.80% 0.04%
8. வேலூர் 71.69% 74.58% 2.89%
9. கிருஷ்ணகிரி 74.16% 77.68% 3.52%
10. தருமபுரி 72.75% 81.14% 8.39%
11. திருவண்ணாமலை 79.89% 78.80% 1.09%
12. ஆரணி 76.62% 80.00% 3.38%
13. விழுப்புரம் (தனி) 74.58% 76.84% 2.26%
14. கள்ளக்குறிச்சி 77.28% 78.26% 0.98%
15. சேலம் 76.45% 76.73% 0.28%
16. நாமக்கல் 78.70% 79.64% 0.94%
17. ஈரோடு 75.98% 76.06% 0.08%
18. திருப்பூர் 74.67% 76.22% 1.55%
19. நீலகிரி (தனி) 70.79% 73.43% 2.64%
20. கோயம்புத்தூர் 70.84% 68.17% 2.67%
21. பொள்ளாச்சி 75.83% 73.11% 2.72%
22. திண்டுக்கல் 75.58% 77.36% 1.78%
23. கரூர் 81.46% 80.47% 0.99%
24. திருச்சிராப்பள்ளி 67.35% 71.11% 3.76%
25. பெரம்பலூர் 79.35% 80.02% 0.67%
26. கடலூர் 76.06% 78.69% 2.63%
27. சிதம்பரம் (தனி) 77.30% 79.61% 2.31%
28. மயிலாடுதுறை 73.25% 75.87% 2.62%
29. நாகப்பட்டினம் (தனி) 77.71% 77.64% 0.07%
30. தஞ்சாவூர் 76.63% 75.49% 1.14%
31. சிவகங்கை 70.98% 72.83% 1.85%
32. மதுரை 77.48% 67.88% 9.60%
33. தேனி 74.48% 75.02% 0.54%
34. விருதுநகர் 77.38% 74.96% 2.42%
35. இராமநாதபுரம் 68.67% 68.67% = 0.00%
36. தூத்துக்குடி 69.13% 69.92% 0.79%
37. தென்காசி (தனி) 70.19% 73.6% 3.41%
38. திருநெல்வேலி 66.16% 67.68% 1.52%
39. கன்னியாகுமரி 64.99% 67.69% 2.70%

நோட்டா வாக்களித்தோர் விவரம்

[தொகு]
தொகுதியின் எண் தொகுதியின் பெயர் நோட்டா வாக்களித்தோர்
1. திருவள்ளூர் 23,598
2. வட சென்னை 17,472
3. தென் சென்னை 20,402
4. மத்திய சென்னை 21,959
5. ஸ்ரீபெரும்புதூர் 27,676
6. காஞ்சிபுரம் (தனி) 17,736
7. அரக்கோணம் 10,370
8. வேலூர் 7,100
9. கிருஷ்ணகிரி 16,020
10. தருமபுரி 12,693
11. திருவண்ணாமலை 9,595
12. ஆரணி 9,304
13. விழுப்புரம் (தனி) 11,440
14. கள்ளக்குறிச்சி 10,901
15. சேலம் 9,595
16. நாமக்கல் 16,002
17. ஈரோடு 16,268
18. திருப்பூர் 13,941
19. நீலகிரி (தனி) 46,559
20. கோயம்புத்தூர் 17,428
21. பொள்ளாச்சி 12,947
22. திண்டுக்கல் 10,591
23. கரூர் 13,763
24. திருச்சிராப்பள்ளி 22,848
25. பெரம்பலூர் 11,605
26. கடலூர் 10,338
27. சிதம்பரம் (தனி) 12,138
28. மயிலாடுதுறை 13,181
29. நாகப்பட்டினம் (தனி) 15,662
30. தஞ்சாவூர் 12,218
31. சிவகங்கை 7,988
32. மதுரை 19,866
33. தேனி 10,312
34. விருதுநகர் 12,225
35. இராமநாதபுரம் 6,279
36. தூத்துக்குடி 11,447
37. தென்காசி (தனி) 14,492
38. திருநெல்வேலி 12,893
39. கன்னியாகுமரி 4,150

பிற குறிப்பிடத்தக்க தகவல்கள்

[தொகு]
  • நாடாளுமன்றத் தேர்தலில் 1967ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்போது அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளது.[55]
  • வாக்காளர்ப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 3,341 மூன்றாம் பாலினத்தவர்களில், 419 பேர் (12.54%) தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.[56]

மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சராசரி 73.67% என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது[57]

இடைத்தேர்தல்

[தொகு]

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து நடத்தப்பட்டது.

தேர்தல் முடிவுகள்

[தொகு]

விரிவான தரவுகளுக்கு -

கூட்டணி வாரியாக

[தொகு]
அதிமுக இடங்கள் திமுக+ இடங்கள் பாஜக+ இடங்கள் காங்கிரஸ் இடங்கள் இடதுசாரிகள் இடங்கள்
அதிமுக 37 திமுக 0 தேமுதிக 0 காங்கிரஸ் 0 சிபிஐ 0
விசிக 0 பாஜக 1 சிபிஎம் 0
புதக 0 மதிமுக 0
இயூமுலீ 0 பாமக 1
மமக 0
மொத்தம் 37 மொத்தம் 0 மொத்தம் 2 மொத்தம் 0 மொத்தம் 0

பச்சை நிறம் = அதிமுக வென்ற தொகுதிகள், ஆரஞ்சு நிறம் = பாஜக வென்ற தொகுதி, இளம்பச்சை நிறம் = பாமக வென்ற தொகுதி

தொகுதிவாரியாக சுருக்கமான விவரம்

[தொகு]
வரிசை எண் தொகுதி வெற்றியாளர் கட்சி இரண்டாம் இடம் வந்தவர் கட்சி வாக்குகள் வித்தியாசம் முழுமையான விவரத்திற்கு அம்புக்குறியின் மீது சொடுக்கவும்
1 திருவள்ளூர் (தனி) பொ. வேணுகோபால் அதிமுக டி. ரவிக்குமார் விடுதலை சிறுத்தை 3,23,430
2 வட சென்னை வெங்கடேஷ் பாபு அதிமுக கிரி ராஜன் திமுக 99,704
3 தென் சென்னை ஜெ. ஜெயவர்த்தன் அ.தி.மு.க இளங்கோவன் தி.மு.க 36625
4 மத்திய சென்னை எஸ். ஆர். விஜயகுமார் அ.தி.மு.க தயாநிதி மாறன் தி.மு.க 45841
5 சிறீபெரும்புதூர் (தனி) க. நா. இராமச்சந்திரன் அ.தி.மு.க ஜெகத்ரட்சகன் தி.மு.க 1,02,646
6 காஞ்சீபுரம் (தனி) கு. மரகதம் அ.தி.மு.க ஜி.செல்வம் தி.மு.க 1,46,866
7 அரக்கோணம் கோ. ஹரி அ.தி.மு.க என்.ஆர்.இளங்கோ தி.மு.க 3,25,430
8 வேலூர் பி. செங்குட்டுவன் அ.தி.மு.க ஏ.சி.சண்முகம் புதிய நீதிக்கட்சி 59,393
9 கிருஷ்ணகிரி கே. அசோக் குமார் அ.தி.மு.க. பி. சின்ன பில்லப்பா தி.மு.க. 2,06,591
10 தர்மபுரி அன்புமணி ராமதாஸ் பாமக மோகன் அ.தி.மு.க. 77,146
11 திருவண்ணாமலை இர. வனரோசா அதிமுக அண்ணாதுரை திமுக 1,68,606
12 ஆரணி வி. ஏழுமலை அதிமுக ஆர். சிவானந்தம் திமுக 2,43,847
13 விழுப்புரம் (தனி) சு. இராசேந்திரன் அதிமுக கே. முத்தையன் திமுக 1,93,367
14 கள்ளக்குறிச்சி க. காமராஜ் அதிமுக இரா.மணிமாறன் திமுக 2,23,507
15 சேலம் வெ. பன்னீர்செல்வம் அதிமுக செ.உமாராணி திமுக 2,67,610
16 நாமக்கல் பி. ஆர். சுந்தரம் அதிமுக செ. காந்திச்செல்வன் திமுக 2,94,374
17 ஈரோடு எஸ். செல்வகுமார சின்னையன் அதிமுக அ. கணேசமூர்த்தி மதிமுக 2,11,563
18 திருப்பூர் வா. சத்தியபாமா அதிமுக என். தினேஷ்குமார் தே.மு.தி.க 1,79,315
19 நீலகிரி (தனி) சி. கோபாலகிருஷ்ணன் அதிமுக ஏ. இராஜா திமுக 1,04,940
20 கோயம்புத்தூர் பி. நாகராஜன் அதிமுக சி. பி. ராதாகிருஷ்ணன் பாஜக 42,016
21 பொள்ளாச்சி சி. மகேந்திரன் அதிமுக ஈ. ஆர். ஈசுவரன் கொங்கு மக்கள் தேசிய கட்சி 1,40,974
22 திண்டுக்கல் எம். உதயகுமார் அதிமுக காந்திராமன் திமுக 1,27,845
24 கரூர் மு. தம்பிதுரை அதிமுக சின்னசாமி திமுக 1,95,247
25 திருச்சிராப்பள்ளி ப. குமார் அதிமுக அன்பழகன் திமுக 1,50,476
26 பெரம்பலூர் ஆர். பி. மருதராஜா அதிமுக சீமானூர் பிரபு திமுக 2,13,048
27 கடலூர் ஆ. அருண்மொழித்தேவன் அதிமுக கொ.நந்தகோபாலகிருஷ்ணன் திமுக 2,02,659
28 சிதம்பரம் (தனி) எம். சந்திரகாசி அதிமுக திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் 1,28,507
29 மயிலாடுதுறை ஆர். கே. பாரதி மோகன் அதிமுக செ. ஹைதர் அலி மமக 2,76,943
30 நாகப்பட்டினம் (தனி) டாக்டர். கே. கோபால் அதிமுக ஏ. கே. எஸ். விஜயன் திமுக 1,06,079
31 தஞ்சாவூர் கு. பரசுராமன் அதிமுக டி.ஆர்.பாலு திமுக 1,44,119
32 சிவகங்கை பி. ஆர். செந்தில்நாதன் அதிமுக துரை ராச சுபா திமுக 2,29,385
33 மதுரை இரா. கோபாலகிருஷ்ணன் அதிமுக வேலுச்சாமி திமுக 1,99,424
23 தேனி இரா. பார்த்தீபன் அதிமுக பொன். முத்துராமலிங்கம் திமுக 3,14,532
34 விருதுநகர் த. இராதாகிருஷ்ணன் அதிமுக வைகோ மதிமுக 1,45,915
35 இராமநாதபுரம் அன்வர் ராஜா அதிமுக எசு. முகமது சலீல் திமுக 1,19,324
36 தூத்துக்குடி ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி அதிமுக பி. செகன் திமுக 1,24,002
37 தென்காசி (தனி) வசந்தி முருகேசன் அதிமுக கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் 1,47,333
38 திருநெல்வேலி கே. ஆர். பி. பிரபாகரன் அதிமுக தேவதாச சுந்தரம் திமுக 1,26,099
39 கன்னியாகுமரி பொன். இராதாகிருஷ்ணன் பா ஜ க வசந்தகுமார் காங் 1,28,662

இதையும் காண்க

[தொகு]

தமிழ் விக்கிசெய்தியில் செய்திக் கட்டுரைகள்...

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Election dept. focuses on maximum voter participation". The Hindu. Retrieved 2014-01-25.
  2. "144 தடை உத்தரவு ஜனநாயக விரோதமானது தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு சிபிஎம் கடும் எதிர்ப்பு". தீக்கதிர். 23 ஏப்ரல் 2014. Retrieved 23 ஏப்ரல் 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை திரும்ப பெற சிபிஎம் வலியுறுத்தல்". 22 ஏப்ரல் 2014. Retrieved 23 ஏப்ரல் 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "தமிழகம்: மார்ச் 29-இல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்: மே 16-இல் வாக்கு எண்ணிக்கை". தினமணி. Retrieved 6 மார்ச் 2014.
  5. "மக்களவைத் தேர்தல்: அதிமுகவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு". தினமணி. Retrieved 22 பெப்ரவரி 2014.
  6. "AIADMK forms panel on seat-sharing". The Hindu. Retrieved 5 பெப்ரவரி 2014.
  7. "Left parties call off alliance with AIADMK". rediff. Retrieved 6 மார்ச் 2014.
  8. "AIADMK-Left alliance collapses". thehindu. Retrieved 6 மார்ச் 2014.
  9. "அதிமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகல்". தி இந்து (தமிழ்). Retrieved 6 மார்ச் 2014.
  10. "AIADMK, CPI announce alliance for Lok Sabha elections". NDTV. Retrieved 2 பெப்ரவரி 2014.
  11. "AIADMK-CPI announce alliance for upcoming Lok Sabha elections". IBNLive. Archived from the original on 2014-02-25. Retrieved 2 பெப்ரவரி 2014.
  12. "மக்களவைத் தேர்தலில் அதிமுக - இந்திய கம்யூ. கூட்டணி: ஜெயலலிதா அறிவிப்பு". தமிழ் இந்து. Retrieved 2 பெப்ரவரி 2014.
  13. "Talks on for alternative front, says Prakash Karat". The Hindu. Retrieved 4 பெப்ரவரி 2014.
  14. "BJP, MDMK begin seat-sharing talks". The Hindu. Retrieved 2014-01-24.
  15. "BJP-PMK formal talks begin". The Hindu. Retrieved 8-3-2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  16. "Done deal. BJP scores alliance with Vijaykanth in Tamil Nadu". ndtv. Retrieved 7 மார்ச் 2014.
  17. "சிதம்பரம் தொகுதி: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு". தின பூமி. Retrieved 7 மார்ச் 2014.
  18. "DMK allots one more seat to VCK". The Hindu. Retrieved 8 மார்ச் 2014.
  19. "DMK gives MMK, PT one seat each". thehindu. Retrieved 6 மார்ச் 2014.
  20. "Puthiya Tamizhagam founder Krishnasamy to contest from Tenkasi". The Hindu. Retrieved 6-3-2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  21. "CPM Closes Door on DMK Alliance". NewIndianexpress. Retrieved 10 மார்ச் 2014.
  22. "தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் 18 தொகுதிகளில் போட்டி". மாலைமலர். Archived from the original on 2014-03-14. Retrieved 14 மார்ச் 2014.
  23. "Lok Sabha polls: Congress names Pawan Kumar Bansal from Chandigarh, Raj Babbar to contest from Ghaziabad". timesofindia. Retrieved 13 மார்ச் 2014.
  24. "Anti-nuclear activist Udayakumar joins AAP with 500 supporters". indianexpress. Retrieved 28 பெப்ரவரி 2014.
  25. "ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் சுப.உதயகுமார்". தமிழ் இந்து. Retrieved 28 பெப்ரவரி 2014.
  26. "LS polls: AAP releases 7th list, fields activist Uday Kumar from Kanyakumari". zeenews. Retrieved 18 மார்ச் 2014.
  27. "AAP releases 12th list of candidates for Lok Sabha elections". IBN LIVE. Archived from the original on 2014-03-31. Retrieved 3 ஏப்ரல் 2014.
  28. "பாராளுமன்றதேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு". தினத்தந்தி. Retrieved 24 பெப்ரவரி 2014.
  29. "அதிமுக வேட்பாளர்கள் 40 பேர் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா". தமிழ் இந்து. Retrieved 24 பெப்ரவரி 2014.
  30. "List of DMK candidates for Lok Sabha polls". The Hindu. Retrieved 10 மார்ச் 2014.
  31. "DMK renominates Raja, Maran; denies ticket to Alagiri". thehindubusinessline. Retrieved 10 மார்ச் 2014.
  32. "திமுக வேட்பாளர்கள் 35 பேர் பட்டியல்: கருணாநிதி அறிவிப்பு". தி இந்து (தமிழ்). Retrieved 10 மார்ச் 2014.
  33. "Read: DMDK list of 14 candidates for Tamil Nadu". IBNLIVE. Archived from the original on 2014-04-06. Retrieved 7 ஏப்ரல் 2014.
  34. "தமிழக பா.ஜ.க கூட்டணி தொகுதி ஓதுக்கீடு பட்டியல்: ராஜ்நாத் சிங் வெளியிட்டார்". மாலைமலர். Archived from the original on 2014-03-23. Retrieved 20 மார்ச் 2014.
  35. "தமிழகத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு". மாலைமலர். Archived from the original on 2014-03-23. Retrieved 20 மார்ச் 2014.
  36. "தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் 30 பேர் அறிவிப்பு". தமிழ் இந்து. Retrieved 20 மார்ச் 2014.
  37. "16வது மக்களவைத் தேர்தல் – சிபிஐ (எம்) வேட்பாளர்கள்". 18 மார்ச் 2014. Archived from the original on 2014-04-12. Retrieved 16 ஏப்ரல் 2014.
  38. "மார்ச் 3 முதல் ஏப்.5 வரை ஜெயலலிதா முதற்கட்ட பிரச்சாரம்". தமிழ் இந்து. Retrieved 25-2-2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  39. "அதிமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்". தமிழ் இந்து. Retrieved 25-2-2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  40. "100 தலைப்புகளில் திமுக தேர்தல் அறிக்கை: ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண உறுதி". தமிழ் இந்து. Retrieved 11-3-2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  41. "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 16வது மக்களவைத் தேர்தல், 2014 தேர்தல் அறிக்கை". Archived from the original on 2014-04-12. Retrieved 23 ஏப்ரல் 2014.
  42. 42.0 42.1 "National Lok Sabha election 2014 survey". The Times of India. Retrieved 14 பெப்ரவரி 2014.
  43. "National projection: NDA likely to get 211-231, UPA distant second with 107-127". IBNLIVE. Archived from the original on 2014-01-26. Retrieved 29 ஜனவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  44. "Poll Tracker: NDA close to halfway mark with 212-232, needs more allies". IBNLIVE. Archived from the original on 2014-03-07. Retrieved 8 மார்ச் 2014.
  45. "Modi-led NDA way ahead than UPA, to win 236 seats in LS polls 2014: ABP News-Nielsen Opinion Poll". ABP News-Nielsen. Retrieved 8014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  46. "Tamilnadu forcast jayalalitha rules". NDTV. Retrieved 13 மார்ச்சு 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  47. "Tamil Nadu tracker: AIADMK 15-21 seats, DMK 10-16, BJP alliance 6-10". IBN-Live. Archived from the original on 2014-04-04. Retrieved 3 ஏப்ரல் 2014.
  48. "NDTV Opinion Poll: Jayalalithaa to be big player in Tamil Nadu". NDTV. Retrieved 3 ஏப்ரல் 2014.
  49. "List of Candidates who have filed their Nomination – Summary Statistics" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 5 ஏப்ரல் 2014. Archived from the original (PDF) on 2014-05-13. Retrieved 5 ஏப்ரல் 2014.
  50. "List of Candidates who have filed their Nomination – Date wise Details". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 5 ஏப்ரல் 2014. Archived from the original on 2014-04-05. Retrieved 5 ஏப்ரல் 2014.
  51. "Form 7A - List of Contesting Candidates" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 ஏப்ரல் 2014. Archived from the original (PDF) on 2014-05-13. Retrieved 10 ஏப்ரல் 2014.
  52. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved ஏப்ரல் 30, 2014.
  53. "EC revises TN turnout to 73.67%". The Hindu. Retrieved ஏப்ரல் 26, 2014.
  54. "PC_wise_percentage_polling" (PDF). தமிழ்நாடு தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2014-05-13. Retrieved ஏப்ரல் 27, 2014.
  55. "Voter turnout in Tamil Nadu, second best since 1967". The Hindu. Retrieved ஏப்ரல் 27, 2014.
  56. "Transgender turnout is "disappointing"". The Hindu. Retrieved ஏப்ரல் 27, 2014.
  57. "EC revises TN turnout to 73.67%". The Hindu. Retrieved 26 ஏப்ரல் 2014.

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]