அன்புமணி ராமதாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அன்புமணி ராமதாஸ்
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி தர்மபுரி மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 9, 1968 (1968-10-09) (அகவை 49)
புதுச்சேரி
அரசியல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சௌமியா அன்புமணி
பிள்ளைகள் மூன்று
இருப்பிடம் திண்டிவனம் தமிழ்நாடு
சமயம் இந்து
இணையம் www.anbumani4cm.com
As of நவம்பர் 23, 2006
Source: [1]

அன்புமணி ராமதாஸ் (பிறப்பு அக்டோபர் 9, 1968) ஒரு தமிழக அரசியல்வாதியும் கலைப்பயிற்சியால் மருத்துவரும் ஆவார். இவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினர் ஆவார். சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தார். 2004ல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராக பணியாற்றி வந்தார். 2009ல் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சற்று முன் அவரது கட்சி செல்வி ஜெயலலிதா அவர்கள் தலைமையில் அமைந்த எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர்ந்து ஆளுங்கட்சியான காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிடத் தீர்மானித்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார். 2014ல் தர்மபுரி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பசுமைத்தாயகம்[தொகு]

2004ல் பதவியேற்ற இந்தியக் கூட்டாட்சி அமைச்சர்கள் அனைவரிலும் இவர் மிகவும் இளைஞர் (37 வயது). இவர் மருத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் ஊர்ப்புற மருத்துவத்தில் பெரிதும் ஆர்வம் காட்டினார். "பசுமைத் தாயகம்" என்னும் அரசு சாரா சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் இவர்.

புகையிலை, குடிப்பழக்க எதிர்ப்பு[தொகு]

பல வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், ஏற்கனவே வழங்கும் புகை பிடிப்பதைக் கட்டுப்படுத்தும் எச்சரிக்கை அறிக்கைகள், தணிக்கை நெறிகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் அன்புமணி ராமதாஸ். இவர் அமைச்சராக இருந்தபோது, அமெரிக்காவில் இருப்பதைப் போலவே, பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டது. சிகரெட், புகையிலைப் பொருள்கள் விளம்பரங்கள், சிறுவர்களுக்குப் புகையிலைப் பொருள்கள் விற்பது, கல்விக்கூடங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பது என்பவை கீழ் தடை செய்யப்பட்டது.

புகை பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை இந்தியத் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் மூலம் கவர்ச்சிகரமாகக் காட்டி இளைஞர்களைப் போதைப் பொருள்களுக்கு அடிமையாக்குவதைத் தடுக்கக் கடுமையான தணிக்கைநெறிகளைக் கொண்டு வந்தார். இவரது இந்தச் செயல்கள், புகையிலை, மற்றும் மதுபானப் பெருநிறுவனங்களின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாக்கின. இத்தகைய கடும் எதிர்ப்புகள் 2009ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் இவரது கட்சி படுதோல்வி அடைந்ததற்கான காரணங்களில் முதன்மையானதாகக் கட்சித்தலைமை கருதுகிறது.[1]

எனினும், அமெரிக்கப் புற்றுநோய்க் கழகம் இவரது புகையிலைப் பொருள்கள் எதிர்ப்புச் செயல்களைப் போற்றி சூலை 14, 2006 அன்று இந்திய மருத்துவ அமைச்சகத்துக்கு லூதர் எல். டெர்ரி விருது வழங்கிப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் வேட்பாளர்[தொகு]

சேலத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி கூடிய பாமக பொதுக்குழுவில், அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

வழக்கு[தொகு]

2004 முதல் 2009 ஆம் ஆண்டுவரை மத்தில் ஆட்சி செய்த காங்கிரசுக் கட்சி ஆட்சியின்போது இவரின் கட்சி கூட்டணி வைத்திருந்தது. அப்போது இவர் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தார். அப்போது உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் அமைந்துள்ள ரோகில்கண்ட் மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கினார் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்புமணி_ராமதாஸ்&oldid=2424893" இருந்து மீள்விக்கப்பட்டது