அவசரத் தொலைபேசி எண்

9-1-1 என்பது கனடா, கோஸ்ட்டா ரிக்கா, எல் சால்வடோர், ஜோர்தான், லைபீரியா, பரகுவை, உருகுவை, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைமுறையில் உள்ள அவசரத் தொலைபேசி எண்கள்
அவசரத் தொலைபேசி எண் (emergency telephone number) என்பது அவசர நிலைமைகளில் பொது பாதுகாப்பு உதவிகளைப் பெறுவதற்காக நடைமுறையில் இருக்கும் தொலைபேசி எண்கள் ஆகும். பலநாடுகளில் அவசர உதவிகளைப் பெறும் இத்தகைய வலையமைப்புகள் நடைமுறையில் உள்ளன. இலகுவில் நினைவில் வைப்பதற்காக பொதுவாக மூன்று இலக்கங்களைக் கொண்டதாக இத் தொலைபேசி எண்கள் காணப்படும். சில நாடுகளில் வேறுபட்ட சேவைகளுக்கு வேறுபட்ட எண்கள் பயன்படுத்தும் முறைகளும் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், உருசியா, உக்ரைன் மற்றும் சுவிட்சர்லாந்தில் பொதுவான தொலைபேசி இலக்கமான 112 பயன்படுகின்றது.[1] இலங்கையில் 119 காவல்படை அவசர அழைப்பு எண்ணாக உள்ளது.
இந்தியாவில் அவசரத் தொலைபேசி எண்கள்[தொகு]
- காவல்துறை உதவி - 100
- தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் - 101
- இலவச முதலுதவி வண்டி - 108
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Emergency call services". 2013-01-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-01-08 அன்று பார்க்கப்பட்டது.