உயரம் தாண்டுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தடகள விளையாட்டு
உயரம் தாண்டுதல்
Canadian high jumper Nicole Forrester demonstrating the Fosbury flop
ஆண்கள் சாதனைகள்
உலகச் சாதனைகூபா ஜேவியர் சோட்டோமேயர் 2.45 m (8 அடி 14 அங்) (1993)
ஒலிம்பிக் சாதனைஐக்கிய அமெரிக்கா சார்லஸ் ஒஸ்டின் 2.39 m (7 அடி 10 அங்) (1996)
பெண்கள் சாதனைகள்
உலகச் சாதனைபல்காரியா ஸ்டெஃப்கா கோஸ்டாடினோவா2.09 m (6 அடி 10+14 அங்) (1987)
ஒலிம்பிக் சாதனைஉருசியா எலினா ஸ்லேசரென்கோ2.06 m (6 அடி 9 அங்) (2004)

உயரம் பாய்தல் என்பது தடகள விளையாட்டுக்களில் ஒன்றாகும். இதிலே போட்டியாளர்கள், குறித்த அளவு உயரங்களில் கிடை நிலையில் வைக்கப்படும் சட்டம் (bar) ஒன்றைத் தாண்டிப் பாய்தல் வேண்டும். ஜேவியர் சாட்டோமேயர் (Javier Sotomayor) என்பவரே இப்பொழுது இவ்விளையாட்டில் உலக சாதனையாளராக உள்ளார். இவர் பாய்ந்த உயரம் 8 அடி 1/2 அங்குலம் ஆகும்.[1][2][3]

போட்டி விதிகளும் நடைமுறைகளும்[தொகு]

இவ்விளையாட்டுக்கான போட்டி ஒன்றில், தாண்ட வேண்டிய சட்டம் ஆரம்பத்தில் குறைந்த அளவு உயரத்தில் வைக்கப்படும். பின்னர், ஒரு குறிப்பிட்ட அளவினால் உயர்த்திச் செல்லப்படும். இந்த அளவு பொதுவாக 3 சமீ அல்லது 5 சமீ ஆக இருக்கும். சாதனைகளுக்காகப் பாயும் போது உயரம் ஒவ்வொரு சதம மீட்டரால் உயர்த்தப்படுவதும் உண்டு. எந்த உயரத்தில் தொடங்குனது என்பதை ஒவ்வொரு போடியாளரும் தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட உயரத்தை ஒருவர் தாண்டி விட்டால், பின்வருபவர்கள் அதிலும் குறைந்த உயரத்தில் பாயத் தொடங்க முடியாது. ஒரு குறிப்பிட்ட உயரத்தை முயற்சிப்பதா இல்லையா என்பதைப் போட்டியாளரே தீர்மானித்துக் கொள்லலாம். ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு குறிப்பிட்ட உயரத்தைத் தாண்ட மூன்று வாய்ப்புக்கள் வழங்கப்படும். அவ்வுயரத்தைப் பாயத் தொடங்கிய பின்னரும், தொடர்ந்து வரும் வாய்ப்புக்களை விட்டுவிட்டு அடுத்த உயரத்தைப் பாய முயற்சிக்கலாம். ஆனால், குறிப்பிட்டதொரு உயரத்தில் மூன்று வாய்ப்புக்களிலும் தோல்வியுறும் போட்டியாளர்கள், போட்டியிலிருந்து விலக்கப்படுவர். அதிக உயரம் தாண்டும் போட்டியாளர் வெற்றி பெற்றவர் ஆவார். ஒன்ன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர்கள் ஒரே அளவு ஆகக்கூடிய உயரத்தைத் தாண்டியிருந்தால், இறுதி உயரத்தைப் பாயும்போது, குறைந்த அளவு வாய்ப்புக்களைப் பயன்படுத்தியவரே வென்றவராக அறிவிக்கப்படுவார். இதிலும் சமநிலை காணப்பட்டால், முழுப் போட்டியிலும் குறைந்த அளவு தோல்வியில் முடிந்த முயற்சிகளுடன் கூடிய போட்டியாளர் வெல்வார். இதிலும் முடிவு எட்டப்பட முடியாவிட்டால், அப்போட்டியாளர்கள் மீண்டும் பாய வாய்ப்பு அளிக்கப்படும். இவ்வாறு அளிக்கப்படும் மேலதிக வாய்ப்புக்களும், சாதனைகளுக்காகக் கணக்கில் எடுக்கப்படும்.


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயரம்_தாண்டுதல்&oldid=3769114" இருந்து மீள்விக்கப்பட்டது