உள்ளடக்கத்துக்குச் செல்

நீச்சற் போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீச்சல்
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்பு பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு(FINA)
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
பகுப்பு/வகைநீர்விளையாட்டுக்கள்
தற்போதைய நிலை
ஒலிம்பிக்1896 முதல்

நீர் விளையாட்டுக்களில் ஒன்றான நீச்சற்போட்டி, மனிதன் தன் உந்துதலினால் நீரில் இடம் பெயர்வதைக் குறிக்கும் மனித நீச்சல் திறனை அடிப்படையாகக் கொண்டு, ஓர் குறிப்பிட்ட தொலைவை மிகக் குறைந்த நேரத்தில் கடப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட, விளையாட்டுப் போட்டியாகும். தொலைதூர மற்றும் முன்னோடியாக விளங்கிட கடல் மற்றும் நீரிணைகளில் நீஞ்சுவது போன்ற வேகத்திற்கு முன்னுரிமை அளிக்காத உடற்திறனை சோதிக்கும் பிற நீச்சல் போட்டிகளும் உள்ளன. நீச்சற்போட்டி என்பது பிற நீர் விளையாட்டுக்களான நீரில் பாய்தல், ஒருங்கிசைந்த நீச்சல் மற்றும் நீர் போலோ போன்றவற்றிலிருந்து வேறுபட்டது; அனைத்து நீர் விளையாட்டுகளிலும் நீந்துவது தேவையாயிருப்பினும் நீச்சற்போட்டிகளில் குறிக்கோளாக வேகம் மற்றும் உடற்திறன் இவையே முதன்மையாக விளங்குகின்றன.

நீச்சற்போட்டிகள் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் அவை துவங்கிய 1896 முதல் இடம் பெற்று வருகின்றன. இதனை உலகளவில் பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு கட்டுப்படுத்தி வருகிறது. உடற்சக்தியைச் செலவழிக்கும் உடற்பயிற்சிகளில் நீச்சல் முதன்மை வகிப்பதாகக் கருதப்படுகிறது.[1][2][3]

வெளியிணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Most Mentioned Olympic Sport in 2004". www.topendsports.com. பார்க்கப்பட்ட நாள் 7 March 2017.
  2. "Why are the individual and relay medleys swum so differently at the Olympics?". SBNation. 10 August 2016. பார்க்கப்பட்ட நாள் 2019-06-05.
  3. "USA Swimming - Rules & Regulations". www.usaswimming.org. பார்க்கப்பட்ட நாள் 7 March 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீச்சற்_போட்டி&oldid=4100125" இலிருந்து மீள்விக்கப்பட்டது