எறிபந்தாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எறிபந்தாட்டம் (hand ball) 7 பேர் ஒரு அணிக்கு என பந்தை கைகளால் கையாண்டு ஆடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். காற்பந்தாட்டம் போன்று பந்தை ஒரு இலக்கு கம்பத்துக்குள் இடவேண்டும், ஆனால் கால்களால் அல்லாமல் கைகளால் பந்தை கையாடி பந்தை இலக்கு கம்பத்துக்குள் போட வேண்டும். ஒருவர் பந்தை 3 வினாடிகளுக்கு மேல் கையில் வைத்திருக்க முடியாது. பந்தை கையில் வைத்துக் கொண்டு 3 காலடிகள் எடுக்கலாம். மேலும் பந்தை கூடைப்பந்தாட்டத்தைப் போன்று பந்தாடிக் கொண்டு எவ்வளவு தூரமும் கொண்டு செல்லலாம்.

எறிபந்தாட்டம் ஒரு ஒலிம்பிக் விளையாட்டு ஆகும். இது உலகின் வேகம் மிகுந்த விளையாட்டுக்களில் ஒன்றாகும். இலக்கின் இடைவெளி தூரம் 3 மீட்டர் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எறிபந்தாட்டம்&oldid=3619262" இருந்து மீள்விக்கப்பட்டது