குதிரை தாவுதல் (சீருடற்பயிற்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Vault figure.jpg

குதிரை தாவுதல் (vaulting) என்பது கலை நய சீருடற்பயிற்சிகளில் ஒன்றாகும். இதற்கான கருவி தாவுகுதிரை (Vault) என அழைக்கப்படுகிறது. இதனை ஆண்களும் பெண்களும் நிகழ்த்துவர். இதற்கான ஆங்கிலச் சுருக்கம் VT என்பதாகும்.

கருவியும் உடற்பயிற்சிகளும்[தொகு]

1896ஆம் ஆண்டில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கார்ல் சூமேன் தாவுகுதிரை மீது நிகழ்த்துகிறார்.

துவக்கத்தில் இது குதிரைக் கரடு போன்றே ஆனால் கைப்பிடிகள் இன்றி அமைந்திருந்தது. தாவுகுதிரை என அழைக்கப்படும் இக்கருவியின் நீளமான பகுதி பெண்களுக்கு அவர்களது ஓட்டத்திற்கு குறுக்காகவும் ஆண்களுக்கு இணையாகவும் அமைக்கப்படும்.[1] ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பங்காக குதிரை தாவுதல் உள்ளது.

உசுபெசுகிசுத்தானின் எடுவர்டு ஷௌலோவ் 2010 இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் தற்கால தாவுகுதிரையில் ஆகாயத்தில் நிகழ்த்திக் காட்டுதல்

கடந்த ஆண்டுகளில் தாவுகுதிரையில் பல விபத்துகள் நடந்துள்ளன. 1988இல் நிகழ்ந்த தாவுகுதிரை விபத்தொன்றில் அமெரிக்க சீருடற்பயிற்சியாளர் யூலிசா கோமெசு செயலிழக்கம் இழந்தார்; மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தனக்கு ஏற்பட்ட காயங்கள் தொடர்பான சிக்கல்களால் உயிரிழந்தார்.[2] 1998ஆம்ஆண்டு நல்லெண்ண விளையாட்டுக்களுக்கு முந்தைய பயிற்சியாட்டங்களில் சீன விளையாட்டாளர் சாங் லான் கீழே விழுந்து கழுத்து-முதுகெலும்பில் காயமடைந்து செயலிழக்கம் இழந்தார்.[3] 2000ஆம் ஆண்டு ஒலிம்பிக்விளையாட்டுகளில் தாவுகுதிரையின் உயரம் குறைவாக அமைக்கப்பட்டு [4] விளையாட்டாளர்கள் குதிரையின் முன்பகுதியில் இடித்துக் கொண்டார்கள் அல்லது இறங்கும்போது சரியாக கை வைக்க முடியாமல் தவறான இறக்கங்களை எதிர்கொண்டனர்.

2000ஆம் ஆண்டின் சிக்கல்களைத் தொடர்ந்து பன்னாட்டு சீருடற்பயிற்சிகள் கூட்டமைப்பு (FIG) தாவுகுதிரை விவரக்கூற்றுகளை மீளாய்வு செய்து பாதுகாப்பு கருதியும் மேலும் சிறந்த கழைக்கூத்தாட்டு கூறுகளை விளையாட்டு வீரர்கள் காண்பிக்க ஏதுவாகவும் இக்கருவியின் வடிவமைப்பை மாற்றினர்.-[1] 2001ஆம் ஆண்டில் நடந்த உலக கலைநய சீருடற்பயிற்சிகள் சாதனைப் போட்டிகளில் புதியதாக வடிவமைக்கப்பட்ட "தாவு மேசை" பயன்படுத்தப்பட்டது. இதனை டச்சு விளையாட்டுக் கருவிகள் நிறுவனமான சான்சன்-பிரிட்சன் 1990கள் முதல் தயாரித்து வந்திருந்தது. தட்டையான, பெரிய, கூடுதலாக மெத்தென்ற மேற்பரப்பு தரைக்கு பெரும்பாலும் இணையாகவும் உந்துவிசைப் பலகைக்கு அண்மையில் சற்றே சரிந்தும் (இதற்கு நாக்கு என விளிபெயரிட்டுள்ளார்கள்[1]) இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய கருவியைவிட இது பாதுகாப்பானதாகத் தோன்றுகிறது.[5]

அளவைகள்[தொகு]

 • நீளம்: 120 சென்டிமீட்டர்கள் (3.9 ft) ± 1 சென்டிமீட்டர் (0.39 in)[6][7]
 • அகலம்: 95 சென்டிமீட்டர்கள் (3.12 ft) ± 1 சென்டிமீட்டர் (0.39 in)[6][7]
 • உயரம்:
  • ஆண்கள்: 135 சென்டிமீட்டர்கள் (4.43 ft) ± 1 சென்டிமீட்டர் (0.39 in)[6]
  • பெண்கள்: 125 சென்டிமீட்டர்கள் (4.10 ft) ± 1 சென்டிமீட்டர் (0.39 in)[7]
 • ஓடி வரும் தொலைவு:
  • நீளம்: 2,500 சென்டிமீட்டர்கள் (82 ft) ± 10 சென்டிமீட்டர்கள் (3.9 in)[6][7]
  • அகலம்: 100 சென்டிமீட்டர்கள் (3.3 ft) ± 1 சென்டிமீட்டர் (0.39 in)[6][7]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 What's With That Weird New Vault?, an August 2004 "Explainer" article from Slate
 2. "Tales from the vaults" Rebecca Seal,Guardian Unlimited December 4, 2005
 3. "Smiling Sang Lan" Xinhua News Agency, August 29, 2003
 4. "Vault mixup could have cost gymnast medal" ESPN September 28, 2000
 5. "Vault: Everything You Need to know about Vault". 2009-10-04 அன்று பார்க்கப்பட்டது.
 6. 6.0 6.1 6.2 6.3 6.4 "Apparatus Norms". FIG. p. II/21. 2011-12-19 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2009-10-04 அன்று பார்க்கப்பட்டது.
 7. 7.0 7.1 7.2 7.3 7.4 "Apparatus Norms". FIG. p. II/43. 2011-12-19 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2009-10-04 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vault (gymnastics)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.