தரைப் பயிற்சி (சீருடற்பயிற்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2007 பான் அமெரிக்க விளையாட்டுகளின்போது பிரேசிலின் விளையாட்டாளர் ஜேட் பர்போசா தரைப் பயிற்சிகளை மேற்கொள்ளுதல்

சீருடற்பயிற்சிகளில், தரை என இதற்கெனத் தயாரிக்கப்பட்டுள்ள பயிற்சித் தளம் குறிப்பிடப்படுகிறது. இது ஓர் விளையாட்டுக் கருவியாகவும் கருதப்படுகிறது. தரைப் பயிற்சிகளை ஆண்களும் பெண்களும் நிகழ்த்திக் காட்டுவர். மதிப்புத் தாளில் இதற்கான ஆங்கிலச் சுருக்கம் FX என்பதாகும்.

பெரும்பாலான போட்டிகளில் போட்டியாளர்கள் துள்ளுவதற்கு ஏதுவாக உந்துத் தரை பயன்படுத்தப்படுகிறது.

தரைத் தளம்[தொகு]

கரணம் நிகழ்த்தும் ஓர் சீருடற்பயிற்சியாளர்

ஆண்களுக்கான 'விரும்பிய பயிற்சிகளாக', (தற்போதைய தரைப் பயிற்சிகளை ஒத்திருந்தது) துவங்கியது.[1] 1948 வரை பெண்கள் இந்தப் போட்டிகளில் அனுமதிக்கப்படவில்லை.[1]

பெரும்பாலான போட்டித் தளங்கள் உந்துத் தரைகள் ஆகும். இவற்றில் சுருள்வில்களும் மீள்மமும் ஒட்டுப் பலகையும் கலந்த சேர்மமும் பயன்படுத்தப்பட்டு தரை உந்துத்திறனுடனும் கால் பதிக்கையில் மிருதுவாகவும் போட்டியாளர் கரணங்களில் உயரம் எட்ட ஏதுவாகவும் உள்ளது. பயிற்சித் தரைகளின் எல்லைகள் தெளிவாக குறியிடப் பட்டிருக்கும் - "எல்லைக்கு வெளியே"யான பகுதிகள் வெள்ளை நிற நாடாவாலோ மாறுபட்ட வண்ண விரிப்பினாலோ காட்டப்பட்டிருக்கும்.

தரைப் பயிற்சிகளைக் காட்டிட ஆண் போட்டியாளருக்கு 60 வினாடிகளும் பெண் போட்டியாளருக்கு 90 வினாடிகளும் வழங்கப்படுகின்றன. ஆண்களைப் போலன்றி பெண்கள் தங்கள் பயிற்சிகளை இசைக்கேற்றவாறு நிகழ்த்துகின்றனர்.

அளவைகள்[தொகு]

தரைப் பயிற்சித் தளத்தின் எல்லைகள்

பயிற்சித் தரையின் அளவைகளை பன்னாட்டு சீருடற்பயிற்சிகள் கூட்டமைப்பு (FIG) வரையறுக்கிறது. இந்த அளவைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை.

  • பயிற்சி பரப்பு: 1,200 சென்டிமீட்டர்கள் (39 ft) x 1,200 சென்டிமீட்டர்கள் (39 ft) ± 3 சென்டிமீட்டர்கள் (1.2 in)
  • குறுக்காக: 1,697 சென்டிமீட்டர்கள் (55.68 ft) ±5 சென்டிமீட்டர்கள் (2.0 in)
  • எல்லை: 100 சென்டிமீட்டர்கள் (3.3 ft)
  • பாதுகாப்பு மண்டலம்: 200 சென்டிமீட்டர்கள் (6.6 ft)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "History of Artistic Gymnastics". FIG. 2009-12-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-10-06 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Floor (gymnastics)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.