ஒருங்கிசைந்த நீச்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருசிய ஒருங்கிசைந்த நீச்சல் அணி, மே 2007

ஒருங்கிசைந்த நீச்சல் (synchronized swimming) எனப்படுவது, நீச்சல், நடனம், சீருடற்பயிற்சி இவற்றை உள்ளடக்கிய ஓர் போட்டியாகும். இதில் தனிநபர், சோடிகள் மற்றும் அணியினர் ஒருங்கிசைந்த நிகழ்வுகளை இசைக்கேற்ப நீரில் நடத்துவர். இதற்கு உயரிய நீச்சல் திறமை, உடற்திறன், தாங்குதிறன், நெகிழ்வு, நளினம், கலைத்தன்மை, நேர உணர்வு மற்றும் நீரினடியில் இருக்கும்போது மூச்சடக்கல் ஆகிய திறமைகள் இன்றியமையாதவை.

ஒலிம்பிக் மற்றும் உலக சாதனை போட்டிகளில் ஆண்கள் பங்கேற்க இயலாது. இருப்பினும் பிற பன்னாட்டு மற்றும் தேசிய போட்டிகள் ஆண்களை அனுமதிக்கின்றன. அமெரிக்க மற்றும் கனடா ஆண்களை அனுமதிக்கிறது.

போட்டியாளர்கள் அவர்களது திறன், நெகிழ்வு மற்றும் தாங்குதிறனை கடினமான செயல்களை நிகழ்த்தி காட்டுவர். நீதிபதிகளுக்கு இரு செயற்திட்டங்களை காட்டுவர்; ஒன்று நுட்பத்திற்காக மற்றொன்று கட்டற்றதாக. இதனை பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு கட்டுப்படுத்தி வருகிறது.

காண்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]