நெடுமுப்போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெடுமுப்போட்டியின் மூன்று முதன்மை அங்கங்கள்: நீச்சல், மிதிவண்டி, ஓட்டம்

நெடுமுப்போட்டி (Triathlon, டிரையத்லான்) என்பது நீடிக்கும் திறனைச் சோதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெறும் மூன்று விளையாட்டுக்கள் அடங்கியப் பல்விளையாட்டுப் போட்டியாகும்.[1] பல வேறுபாடுகள் இருந்தாலும் மிகப் பரவலாக நடைமுறையிலுள்ள நெடுமுப்போட்டியில் அடுத்தடுத்து பல்வேறு தொலைவுகளுக்கு நீச்சல், மிதிவண்டி ஓட்டப்பந்தயம், மற்றும் ஓட்டப் போட்டிகள் அங்கமாக உள்ளன. இ்ந்தப் போட்டியில் பங்குபெறுவோர் நீச்சல், மிதிவண்டி, ஓட்டம் என்ற தனித்தனி போட்டிகளுக்கு இடையே எடுத்துக்கொள்ளும் "மாறுதல்" நேரங்கள் உட்பட மொத்தம் போட்டியை விரைவாக முடிக்க போட்டியிடுகின்றனர்.[1]

இப்போட்டிக்கு டிரையத்லான் என்ற பெயர் கிரேக்க மொழியிலிருந்து, (டிரை= மூன்று, அத்லோசு=போட்டி) சூட்டப்பட்டுள்ளது.[2]

டிரையத்லான் போட்டிகள் பல்வேறு தொலைவுகளுக்கு நடத்தப்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் பன்னாட்டு டிரையத்லான் சங்கம் மற்றும் அமெரிக்க டிரையத்லான் அமைப்புக்களின்படி விரைவுத் தொலைவு (750 மீட்டர்கள் (0.47 mi) நீச்சல், 20 கிலோமீட்டர்கள் (12 mi) மிதிவண்டி, 5 கிலோமீட்டர்கள் (3.1 mi) ஓட்டம்), இடைநிலை (அல்லது சீர்தர) தொலைவு, பொதுவாக "ஒலிம்பிக் தொலைவு" (1.5 கிலோமீட்டர்கள் (0.93 mi) நீச்சல், 40 கிலோமீட்டர்கள் (25 mi) சவாரி, 10 கிலோமீட்டர்கள் (6.2 mi) ஓட்டம்), நெடுந்தொலைவு (1.9 கிலோமீட்டர்கள் (1.2 mi) நீச்சல், 90 கிலோமீட்டர்கள் (56 mi) சவாரி, 21.1 கிலோமீட்டர்கள் (13.1 mi) ஓட்டம் - பாதி இரும்பு மனிதன்), மற்றும் மீயுயர் தொலைவு (3.8 கிலோமீட்டர்கள் (2.4 mi) நீச்சல், 180 கிலோமீட்டர்கள் (110 mi) சவாரி, மற்றும் மரத்தான்: 42.2 கிலோமீட்டர்கள் (26.2 mi) ஓட்டம்) வகைப்படுத்தப் பட்டுள்ளன. மிகவும் புகழ்பெற்ற மீயுயர் போட்டியாக இரும்பு மனிதன் டிரையத்லான் உள்ளது.[3]

மாறுமிடங்கள் என நீச்சலில் இருந்து மிதிவண்டிக்கு மாறவும் (T1), மிதிவண்டியிலிருந்து ஓட்டத்திற்கு மாறவும் (T2) ஒதுக்கப்பட்டுள்ளன. இங்கு மிதிவண்டிகள், வேண்டிய உடை சாதனங்கள், மற்றும் அடுத்தப் போட்டிக்குத் தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு செலவிடப்படும் நேரமும் ( T1 , T2 ) போட்டியை முடிக்க எடுத்துக்கொள்ளும் மொத்த நேரத்தில் அடங்கும்.[4] பங்கு பெறுவோரின் எண்ணிக்கைப் பொறுத்து இந்த மாறுமிடங்களின் அளவு இருக்கும்.[5]

இப்போட்டிகள் மூன்று விளையாட்டுக்களிலும் விளையாட்டு வீரரின் தொடர்ந்த மற்றும் அவ்வப்போதைய பயிற்சியின் மீதும் உடற்பயிற்சி மற்றும் பொது வலிமையையும் குவியப்படுத்துகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg


"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுமுப்போட்டி&oldid=2227992" இருந்து மீள்விக்கப்பட்டது