உள்ளடக்கத்துக்குச் செல்

நீச்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீச்சற்குளத்தில் நீந்தும் ஒரு நீச்சுக்காரர்

நீச்சல் என்பது நீரினுள் எந்தவித கருவிகளும் இல்லாமல் பக்க உறுப்புகளின் அசைவின் மூலம் மிதந்து, நகரும் செயலாகும். நீச்சல் பழக்கம் புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தருகிறது. குளிப்பதற்கும், மீன்பிடிப்பதற்கும், புத்துணர்ச்சிக்கும், உடற்பயிற்சிக்கும் மற்றும் விளையாட்டாகவும் நீச்சல் பழக்கம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

நீச்சல் முறையை விளக்கும் நகர்படம்

வரலாறு

[தொகு]

வரலாற்றிற்கு முந்திய காலமான கற்காலம் தொட்டே நீச்சல் கலை மனிதர்களிடம் இருந்ததற்கான ஆதாரங்கள் 7000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் மூலம் காணக்கிடைக்கின்றன. கில்கமெஷ் காப்பியம், இலியட், ஒடிசி மற்றும் விவிலியம் போன்ற எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் 2000 கி.மு.விலிருந்து கிடைக்கின்றன. 1538ல் நிக்கோலஸ் வேமன் என்ற ஜெர்மனியரார் முதல் நீச்சல் புத்தகம் வெளியிடப்பட்டது. 1800களில் ஐரோப்பாவில் நீச்சல்கலையை விளையாட்டாக பயன்படுத்த தொடங்கினார்கள். 1896ல் ஏதென்ஸ் நகரில் நடந்த முதலாம் கோடைகால ஒலிம்பிக் போட்டியில் நீச்சற் போட்டிகளும் சேர்க்கப்பட்டது. 1908ல் பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. பிற்காலத்தில் பல வடிவங்களில் நீச்சல் கலை மேம்படுத்தப்பட்டது.திருக்குறளில் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் குறிக்கப்படும் வினைகளின் ஒன்று நீச்சல். மறைமுகமாக இதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை அறியலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீச்சல்&oldid=2891757" இலிருந்து மீள்விக்கப்பட்டது