குத்துச்சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குத்துச்சண்டை வீரர்கள்

குத்துச்சண்டை ஒரு சண்டை விளையாட்டு. ஒரே எடைத்தரத்தில் உள்ள இரு வீரர்கள் கைமுட்டியுறை, மற்றும் சில பாதுகாப்பு அணிகலங்கள் அணிந்து கை முட்டிகளால் மட்டும் சண்டை செய்வதே குத்துச்சண்டை ஆகும். ஒருவர் அடித்துத் தனது எதிரியை வீழ்த்திவிட்டால், விழுந்தவர் நடுவர் 10 எண்ணுவதற்குள் எழும்பாவிட்டால் வீழ்த்தியவர் வெற்றி பெறுவார். அல்லது போட்டியின்போது ஒரு சண்டையாளரின் உடல் நிலைமை தொடர்ந்து போட்டியிட முடியா நிலைமை வந்தாலும் எதிர்த்து நின்ற மற்ற சண்டையாளர் வெற்றி பெறுவார். இரு சண்டையாளர்களும் குறிப்பிட்ட சுற்றுகள் தொடர்ந்து சண்டையிட்டு, அதற்கு பின்னரும் நிலைத்து நின்றால் அவர்கள் பெற்ற புள்ளிகளை வைத்து வெற்றியாளர் நடுவர்களால் தேர்வு செய்யப்படுவார். குத்துச்சண்டை ஒரு ஒலிம்பிக் விளையாட்டு ஆகும்.

தமிழகத்தில் குத்துச்சண்டை[தொகு]

கிரீஸ் நாட்டில் கி. மு. 688 - ல் தோன்றிய ஒலிம்பிக் விளையாட்டில் இந்த விளையாட்டு இடம் பெற்றிருந்தது என்பது வரலாறு. கிறித்துவுக்கு முற்பட்ட சங்ககாலத்தில் புகார் நகரில் போட்டி விளையாட்டுக்கென ஒரு மன்றம் இருந்ததையும், அதில் கையால் ஒருவர்மீது ஒருவர் சினம் கொண்டு தாக்கிக் குத்திக்கொண்டு யாரும் பின்னிடாமல் விளையாடியதையும் பற்றிய செய்திகள் உள்ளன.[1] இந்த விளையாட்டு கையுறை அணியாமல் வெறுங்கையால் குத்தி விளையாடப்பட்டது.

மேலும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மலர் தலை மன்றத்துப் பலர் உடன் குழீஇ,
    கையினும் கலத்தினும் மெய் உறத் தீண்டி,
    பெருஞ் சினத்தால் புறக்கொடாஅது,
    இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர், (பட்டினப்பாலை)


"https://ta.wikipedia.org/w/index.php?title=குத்துச்சண்டை&oldid=1881146" இருந்து மீள்விக்கப்பட்டது