குதிரையேற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

குதிரையேற்றம் குதிரையின் மீது ஏறி அதனைக் கட்டுப்படுத்தி ஓட்டுதலை முதன்மையாகச் சுட்டுகின்றது. குதிரையின் மீது இருந்து கொண்டு பிற செயல்களை செய்தல், குதிரையைப் பல வினோத செயற்பாடுகளைச் செய்வித்தல் போன்றவையும் குதிரையேற்றத்தில் அடங்கும். பழங்காலத்தில் பலதரப்பட்டோர் கற்று பயன்படுத்தும் ஒரு திறனாக குதிரையேற்றம் இருந்தது. குறிப்பாக குதிரைப்படை வீரர்கள் குதிரையேற்றம் கற்றனர். குதிரை போக்குவரத்து விலங்காகவும், வேளாண்மை செயற்பாடுகளுக்கும் பயன்பட்டது. இக்காலத்தில் குதிரையேற்றம் ஒரு ஒலிம்பிக் விளையாட்டாகவும் இருக்கிறது.