கூடைப்பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
[[

கூடைப்பந்தாட்டம்[தொகு]

]] கூடைபந்தாட்டம் அமெரிக்க நாட்டில் ஸ்ப்ரிங் பீல்டில் ஒய்.எம் .சி. ஏ கல்லூரியில் பணியாற்றிய டாக்டர் ஏ. ஜேம்ஸ் நேஸ்மித் என்பவரால் 1891 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விளையாட்டு முதலில் உள் அரங்குகளில் எதிர் எதிர் சுவர்களில் பிரம்புக் கூடைகளை ஆணிகளில் மாட்டி பந்தைப் போட்டு விளையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

   முதன் முதலில் 1892-93 ஆம் ஆண்டுகளில் முறையாக 13 விதிமுறைகளை ஏற்படுத்தி டாக்டர் ஏ. ஜேம்ஸ் நேஸ்மித் இவ்விள்ளையாட்டை அறிமுகபடுத்தினார்.          
   கூடைபந்தாட்டப் போட்டி 1936 ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக்ஸீல் முதன் முறையாக 28 நாடுகள் பங்குகொள்ள நடத்தபட்டது. 1932 ஆம் ஆண்டு உலக அமெச்சூர் கூடைபந்தாட்டக் கழகம் அமைக்கபட்டது.   
   அமெரிக்கரான ஹேரிகுரோ பக் என்பவர் 1920 இல் சென்னை ஒய்.எம்.சி.ஏஉடற்பயிற்சிக்கல்லூரியின் மூலமாக கூடைபந்தாட்டபத்தை இந்தியாவில் அறிமுகபடுத்தினார். ஒய்.எம்.சி.ஏஉடற்பயிற்சிக்கல்லூரி முதல்வராக இருந்த சி.சி. அபிரகாம் 1950 ஆம் ஆண்டு இந்திய கூடைபந்தாட்டக் கழகத்தை ஆரம்பித்தார்.                      

ஆடுகள அளவீடுகள்[தொகு]

    செவ்வக வடிவமாக ஆடுகளம் இருக்க வேண்டும்
      நீளம்-28 மீட்டர்
      அகலம்-14 மீட்டர்

நடுவட்டம்[தொகு]

       1.80- மீட்டர் ஆரம்

மூன்று புள்ளி இலக்குப் பரப்பு

    கடைக்கோட்டின் நடுவிலிருந்து 6.25-மீட்டர் தூரத்தில் இரண்டு பக்கமும் ஆடுகளத்தினுள் 1.575- மீட்டர் நீளத்திற்கு பக்க கோடு இருக்க வேண்டும். 
தனி எறி கோடு[தொகு]
      கடைக்கோட்டிலிருந்து 5.80- மீட்டர் தூரத்தில் 3.60- மீட்டர் நீளத்திற்கு வரையப்பட வேண்டும்.
தனி எறி பகுதி[தொகு]
      கடைக்கோட்டின் மையப் பகுதியிலிருந்து 3-மீட்டர் தூரத்திலிருந்து தனி எறி பகுதியின் பக்கக் கோடுகளில் 10 செ.மீ நீளத்திற்கு ஒரு கோடு வரைய வேண்டும்.


பின் பலகை[தொகு]
      பலகை தட்டையாக மீட்டர் குறுக்கு வசமாகவும் மீட்டர் நேர் வசமாகவும் அளவுகள் இருக்க வேண்டும்.
கூடை[தொகு]
     1.6 செ.மீ முதல் 2 செ.மீ கனமுள்ளதாக இருக்க வேண்டும்.
வளையம்[தொகு]
     உள் அளவு 45 செ.மீ விட்டம் இருக்க வேண்டும். தரையிலிருந்து 3.05 மீட்டர் உயரம் பொருத்த வேண்டும். வளையத்தைச் சுற்றி 40 செ.மீ நீளம் இருக்குமாறு பொருத்த வேண்டும்.   

வலை

     பின் பலகையின் அடிபகுதியின் நடுவில் இருந்து 15 செ.மீ உயரத்தில் பலகையின் பரப்பிலிருந்து 15 செ.மீ தள்ளி இருக்க வேண்டும்.


பந்து[தொகு]
    ஆரஞ்சு நிறம். சுற்றளவு 74.9 செ.மீ குறையாமலும் 78 செ.மீ மிகாமலும் இருக்க வேண்டும்.

பந்தின் எடை

     567 கிராமிற்குக் குறையாமலும் 650 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஆட்டகாரர்கள்[தொகு]
    12 நபர்கள். உள்ளே விளையாடுபவர்கள் 05 நபர்கள். மாற்று ஆட்டகாரர்கள் 07 நபர்கள்.

ஆட்ட நேரம்

     10 – (2) 10 – (15) – 10 – (2) – 10 
நுட்ப உபகரணங்கள்[தொகு]

• ஆட்டக் கடிகாரம் • நிறுத்தி ஓடும் கடிகாரம் • 24 விநாடி கடிகாரம் • அணியின் தவறுகளைக் குறிக்கும் எண் அட்டைகள்

கூடைப்பந்து விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள்[தொகு]

• சுறுசுறுப்புடன் செயல் படும் தன்மை உருவாகும். • கூட்டு பணப்பான்மை உருவாகும். • சகிப்புத்தன்மை உருவாகும். • விட்டுகொடுக்கும் தன்மை உருவாகும். • தலைமைப் பண்பு உருவாகும். • வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக ஏற்று கொள்ளும் • பணப்பான்மை உருவாகும்.

மேற்கோள்கள் 

நொவ் தி கேம்ஸ் பாஸ்கெட்பால், முனைவர் ச. அழகேசன், ஆசிரியர் நூற்பதிப்பகம். கோவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூடைப்பந்து&oldid=2379217" இருந்து மீள்விக்கப்பட்டது