ஜேம்ஸ் நெய்ஸ்மித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டாக்டர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் (Dr. James Naismith) (நவம்பர் 6, 1861 - நவம்பர் 28, 1939) ஒரு கனடிய விளையாட்டு கல்வி ஆசிரியரும், கூடைப்பந்து கண்டுபிடிப்பாளரும், அமெரிக்க காற்பந்தாட்டத்தில் தலைக்கவசத்தை கண்டுபிடித்தவரும் ஆவார். 1891ல் இவர் முதல் 13 கூடைப்பந்து சட்டங்களை கூறியுள்ளார்; இச்சட்டங்களில் 12 இன்று வரை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுகின்றன.

1861ல் அல்மொன்டே, கனடாவில் பிரந்த நெய்ஸ்மித் ஸ்பிரிங்ஃபீல்ட், மாசசூசெட்ஸில் விளையாட்டு கல்வி ஆசிரியராக இருக்கும்பொழுது கூடைப்பந்து விளையாட்டைக் கண்டுபிடித்தார். 13 ஆண்டுகளுக்குப்பின்னர் 1904 ஒலிம்பிக் போட்டிகளில் சோதனை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு 1936 ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக கூடைப்பந்து விளையாட்டு இருந்தது. 1898ல் நெய்ஸ்மித் கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியரும் முதலாம் கூடைப்பந்து பயிற்றுனராவும் ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_நெய்ஸ்மித்&oldid=2767925" இருந்து மீள்விக்கப்பட்டது