பேச்சு:கூடைப்பந்தாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png கூடைப்பந்தாட்டம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

ஏற்கனவே கூடைப்பந்து என்ற தலைப்பில் கட்டுரை உள்ளது. இரு கட்டுரைகளில் உள்ள கருத்துக்களையும் இணைக்கலாம். கூடைப்பந்து, கூடைப்பந்தாட்டம் ஆகிய இரு தலைப்புகளில் எது பொருத்தம் என்று எனக்குத் தெளிவில்லை--ரவி 05:51, 30 ஜனவரி 2006 (UTC)

மன்னிக்கவும் ஏற்கனவே இருந்த கட்டுரையை நான் கவனிக்கவில்லை. பொதுவாக செய்திகளில் கூட கூடைப்பந்தாட்டம் என்றுதானெ சொல்லுவார்கள்?--ஜெ.மயூரேசன் 06:48, 30 ஜனவரி 2006 (UTC)

இதில் மன்னிப்பதற்கு ஒன்றுமில்லை :) எல்லாருக்கும் அவ்வப்போது நேர்வது தான். கூடைபந்து என்பது basket ball என்பதின் அப்பட்டம்மான மொழிபெயர்ப்பு. கூடைப்பந்தாட்டம் என்பது அப்பந்தை வைத்து ஆடப்படும் ஆட்டத்தை குறித்து அப்பந்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதால் கூடைப்பந்தாட்டம் என்ற சொல்லையே பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். மற்ற பயனர் கருத்தையும் அறியலாம். அப்படியெனில், கூடைப்பந்து கட்டுரையில் பொருத்தமானவற்றை வெட்டி இங்கு ஒட்ட விட்டு கூடைப்பந்து கட்டுரையில் அப்பந்து குறித்த தகவல்களை மட்டும் தரலாம் என நினைக்கிறேன்--ரவி 06:57, 30 ஜனவரி 2006 (UTC)

ஏனைய பயனர்களும் இதை ஏற்றுக்கொள்ளுமிடத்து வெட்டி ஒட்டும் வேலையை தொடங்கலாம். நன்றி--ஜெ.மயூரேசன் 04:56, 31 ஜனவரி 2006 (UTC)

மேலே கூறப்பட்டுள்ள திட்டத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. -- Sundar \பேச்சு 05:05, 31 ஜனவரி 2006 (UTC)

கலைச்சொற்கள்[தொகு]

  • உள்ளெறிதல் - throw in/inbound
  • பக்கக் கோடு - touch line/sideline
  • தரைக்கு மேலாகப் பந்தாடல் - air dribble
  • பின் பலகை - back board
  • பின் ஆடுகளம் - back court
  • இலக்கு வளையம் - basket ring/rim
  • நடு ஆட்டுக்காரர் - center
  • அணித்தலைவன் - captain
  • நடுவட்டம் center circle

--Natkeeran 22:23, 3 ஆகஸ்ட் 2008 (UTC)