யூரோலீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூரோலீகின் சின்னம்

யூரோலீக் (Euroleague) ஐரோப்பாவில் மிக உயர்ந்த கூடைப்பந்தாட்டச் சங்கமாகும். யூரோலீகில் 13 ஐரோப்பிய நாடுகளிலிருந்து மொத்தத்தில் 24 அணிகள் உள்ளன.

1958இல் ஃபீபாவால் உருவாக்கப்பட்ட இச்சங்கம் இன்று ஐரோப்பியக் கூடைப்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியம் என்ற அமைப்பின் ஆட்சியில் உள்ளது. ரியால் மட்ரிட், மக்கபி டெல் அவீவ், சிஸ்கா மாஸ்கோ இச்சங்கத்தின் வரலாற்றில் மிக வெற்றியார்ந்த சங்கங்கள் ஆகும்.

யூரோலீக் வரலாற்றில் ஆர்விடாஸ் சபோனிஸ், டெர்க் நொவிட்ச்கி, பேஜா ஸ்டொயாகொவிக் போன்ற பல உயர்ந்த வீரர்கள் என்.பி.ஏ.யுக்கு சென்று வெற்றி பெற்றுள்ளனர். அண்மைய ஆண்டுகளில் சில ஆட்டக்காரர்கள் என்.பி.ஏ.யிலிருந்து யூரோலீகுக்கும் சென்றுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரோலீக்&oldid=1350665" இலிருந்து மீள்விக்கப்பட்டது