கூடைப்பந்து புகழவை
Jump to navigation
Jump to search
நெய்ஸ்மித் நினைவகக் கூடைப்பந்து புகழவை என்பது உலக கூடைப்பந்து வரலாற்றில் மிக உயர்ந்த வீரர்களையும் பயிற்சியாளர்களையும் போற்றும் அவையாகும். ஹார்லம் குளோப்ட்ராட்டர்ஸ் போன்ற புகழ்பெற்ற அணிகள் இவ்வவையில் உள்ளன.
1959ல் தோன்றி 1968ல் ஸ்பிரிங்ஃபீல்ட் நகரத்தில் திறந்தது. 1985ல் இக்கட்டடம் கனெடிகட் ஆறுக்கு பக்கம் ஸ்பிரிங்ஃபீல்டின் நடுப் பகுதிக்கு நகர்ந்தது,
2002 செப்டம்பர் 28ல் இவ்வவை ஒரு புது 45 மில்லியன் $ கட்டடத்துக்கு நகர்ந்தது.
உறுப்பினர்கள்[தொகு]
2007 கூடைப்பந்து புகழவை தேர்தலுக்கு பிறகு இவ்வவையில் 278 உறுப்பினர்கள் (131 வீரர்கள், 77 பயிற்சியாளர்கள், மூவர் வீரர்களாகவும் பயிற்சியாளராவும், 54 உதவியாளர்கள், 13 நடுக்காரர்கள்), 5 அணிகள் உள்ளனர். ஜான் வுடென், லெனி வில்கென்ஸ், பில் ஷார்மன் ஆகிய மூன்று பேர் மட்டும் வீரர்களாகவும் பயிற்சியாளராகவும் உள்ளனர்.