உள்ளடக்கத்துக்குச் செல்

இரா. கோபாலகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரா. கோபாலகிருஷ்ணன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2014-2019
பதவியில்
1 செப்டெம்பர் 2014 – 31 ஆகஸ்ட் 2019
தொகுதிமதுரை நாடாளுமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 அக்டோபர் 1968 (1968-10-05) (அகவை 56)
செல்லூர், மதுரை, தமிழ்நாடு
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்திருமதி கோ. தீபா
பிள்ளைகள்2
வாழிடம்(s)மதுரை, தமிழ்நாடு
முன்னாள் கல்லூரியாதவர் கல்லூரி
வேலைவிவசாயி
As of 17 டிசம்பர், 2016

இரா. கோபாலகிருஷ்ணன் (R Gopalakrishnan) (பிறப்பு: அக்டோபர் 5, 1968) என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் . இவர் மதுரை தொகுதியில் இருந்து மக்களவைக்கு 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

கோபாலகிருஷ்ணன் 1968ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூரில் பிறந்தார். இவர் கல்லூரிக் கல்வியினை மதுரையில் உள்ள யாதவர் கல்லூரியில் பயின்றார். இவரது மனைவி திருமதி. கோ. தீபா ஆவார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[2]

கோபாலகிருஷ்ணன் 2011 முதல் 2014 வரை மதுரை மாநகராட்சியின் மாநகர துணை தந்தையாக இருந்தார்.[3] இவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களில் ஒருவராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 21 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 22 May 2014.
  2. "Members Bioprofile, Gopalakrishnan, Shri R." மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 19 December 2016.
  3. "R. Gopalakrishnan, new Deputy Mayor". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
  4. "அ.தி.மு.க.வை வலுப்படுத்த 6 அமைச்சர்கள் உள்பட 11 பேர் அடங்கிய வழிகாட்டு குழு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு". Daily Thanthi. பார்க்கப்பட்ட நாள் 2020-10-31. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._கோபாலகிருஷ்ணன்&oldid=3785257" இலிருந்து மீள்விக்கப்பட்டது