யாதவர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யாதவர் கல்லூரி
Yadava College, Madurai.jpg

நிறுவல்: 1969
வகை: தன்னாட்சி
அமைவிடம்: திருப்பாலை, மதுரை, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்: கோவிந்தராஜன்
இணையத்தளம்: www.yadavacollege.org

யாதவர் கல்லூரி தமிழ் நாட்டில் மதுரையில் உள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி இயற்பியல், கணிதம், வேதியியல், விலங்கியல், கணனியியல், தகவல் தொழிற்நுட்பம் முதலான அறிவியல் பிரிவிலும் தமிழ்,வரலாறு,வணிகவியல் முதலான கலைப் பிரிவிலும் படிப்புகளை வழங்குகிறது. இக்கல்லூரி அரசு உதவி பெறும் இருபாலர் கல்லூரி ஆகும்.

வரலாறு[தொகு]

பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் கல்வியறிவை வளர்க்க, 1969ல் தமிழக அரசின் உதவியுடன் யாதவ சமூக மக்களால் யாதவர் கல்லூரி தொடங்கப்பட்டது. யாதவ சமுதாயம் மட்டுமின்றி பல பின்தங்கிய சமுதாய மாணவர்களின் மேல்படிப்புக் கனவை நனவாக்கிவருகிறது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டுவந்த கல்லூரி 2008ம் ஆண்டுமுதல் தன்னாட்சி அதிகாரம் பெற்று பல துறைகளில் பட்டப் படிப்புகளை வழங்கிவருகிறது

அமைவிடம்[தொகு]

இந்தியாவின் தமிழகத்தில் மதுரை, மேற்குப்புறநகர் பகுதியைச் சேர்ந்த திருப்பாலை கிராமத்தில் நத்தம் சாலையில் ஊமச்சிகுளம் அருகே அமைந்துள்ளது.

முன்னாள் மாணவர்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாதவர்_கல்லூரி&oldid=1835029" இருந்து மீள்விக்கப்பட்டது