பி. செங்குட்டுவன்
பி. செங்குட்டுவன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 16 மே 2014 – 23 மே 2019 | |
முன்னையவர் | எம். அப்துல் ரஹ்மான் |
தொகுதி | வேலூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 மே 1956 குடியாத்தம், வேலூர், தமிழ் நாடு |
குடியுரிமை | இந்தியன் |
அரசியல் கட்சி | அஇஅதிமுக |
பி. செங்குட்டுவன் (B. Senguttuvan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராகப் போட்டியிட்டு வேலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் [1]. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்தை 59,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 30 ஆண்டுகளுக்குப் பின்னர் வேலூரில் அ.தி.மு.க. சார்பில் வெற்றிபெற்ற இரண்டாவது வேட்பாளராக இவர் கருதப்படுகிறார் [2]. 1983 ஆம் ஆண்டில் ஒரு வழக்கறிஞராக பணிபுரியத் தொடங்கினார். [3]. 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை வேலூர் மாவட்ட அரசாங்க வழக்கறிஞராகவும், 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை பொது வழக்கறிஞராகவும் பதவி வகித்தார். இவ்விரு காலகட்டத்திலும் தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது.
1980 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் தனது மாணவ நாட்களில் அ.தி.மு.க. உறுப்பினராக இருந்தார். மேலும் 2014 ஆம் ஆண்டில் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. வழக்கறிஞர்களின் இணைச் செயலாளர் ஆனார். குடிமை செயல்முறை குறியீடு, காசோலைகளை மறுத்தல், தொழில் முரண்பாடுகள் சட்டம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றிய புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.[4] குடியாத்தத்தை சேர்ந்த செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பத்தில் பிறந்தார்.[5]
மறைவு
[தொகு]உடல்நலக்குறைவு காரணமாக வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி, ஆகத்து 19, 2021 அன்று அதிகாலையில் காலமானார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 22 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 22 May 2014.
- ↑ "After 30 years, AIADMK wrests Vellore". The Hindu. 17 May 2014. பார்க்கப்பட்ட நாள் 29 May 2014.
- ↑ "AIADMK announces two advocates as candidates for Vellore, Arakkonam". The Hindu. 25 February 2014. பார்க்கப்பட்ட நாள் 29 May 2014.
- ↑ "Speed up probe into sexual offence cases, says HC judge". The Times Of India. 8 November 2009. http://timesofindia.indiatimes.com/city/chennai/Speed-up-probe-into-sexual-offence-cases-says-HC-judge/articleshow/5207902.cms. பார்த்த நாள்: 29 May 2014.
- ↑ "வேலூரில் கோட்டை விட்ட பா.ஜ.,-தி.மு.க.,:உள்ளடி வேலை காரணம் என தகவல்" (in தமிழ்). தினமலர். 2014. https://m.dinamalar.com/detail.php?id=978052.
- ↑ வேலூர் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் காலமானார். தினகரன். 19 ஆகத்து 2021.