செங்குந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செங்குந்தர் அல்லது கைக்கோளர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
Om.svg சைவ சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தமிழர்

செங்குந்தர் (Sengunthar) (கைக்கோளர் மற்றும் செங்குந்தர் முதலியார் எனவும் அழைக்கப்படுகின்றனர்) எனப்படுவோர் இந்திய மாநிலமான, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாழுகின்ற ஒரு தமிழ் சாதியினர் ஆவர்.

இவர்கள் கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளிலும் அண்மை நாடான இலங்கையின் வட மாகாணத்திலும் வாழ்கின்றனர். இச்சமூக மக்கள் கைக்கோள முதலியார் என்கிற பெயராலும் அழைக்கப்படுவர். செங்குந்தர் முதலியார் எனும் பட்டத்தைத் தம் பெயருக்குப் பின்னால் போடுவர்.[சான்று தேவை]

பெயர்க்காரணம்[தொகு]

 1. செங்குந்தம் என்றால் இரத்தத்தால் சிவந்த ஈட்டி, செங்குந்தர் என்றால் செந்நிறமான ஈட்டியை உடையவர். போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை வைத்து சுழற்றுபவர் என்பதால் கைக்கோளர் என்றும் அழைக்கப்பட்டனர்.[1]
 2. கைக்கோளர் என்றால் வலிமை பொருந்திய கைகளை உடையவர் என்று பொருள்.[2][3][Full citation needed]

கற்பிதம்[தொகு]

செங்குந்தர் முருகனின் தாயான பார்வதியின் சிலம்பில் இருந்த ஒன்பது இரத்தினங்களிலிருந்து பிறந்தவர் என்பதால், திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தின் பொழுது ஒன்பது செங்குந்த வீரர்களாய் உடையணிந்து வீரவாகுவின் தளபதிகளுடன் குமரன் சூரனை வதம் செய்வது இன்றும் நடைமுறையில் உண்டு. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் மாசித்திருவிழாவில் பன்னிரண்டாம் நாள் திருவிழா செங்குந்தர் குலத்தவரின் மண்டகப்படியாக இன்றும் நடைபெறுகிறது.

வரலாற்றுச் சான்றுகள்[தொகு]

தெரிஞ்ச கைக்கோளப்படை என்பது சோழர்களின் படைப்பிரிவில் ஒன்று என்று கல்வெட்டாய்வுகள் தெரிவிக்கின்றன.

செங்குந்தர்களை பற்றி பல்வேறு புலவர்கள் பல காலகட்டங்களில் பாடியதை தொகுத்து செங்குந்தர் பிரபந்தத் திரட்டு என்று நூலாக பதிக்கப்பெற்றுள்ளது. இடைக்காலச் சோழர்களுக்கு முன்னரே கைக்கோளர்களை பற்றிய செய்திகள் பல சமணர் கல்வெட்டுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.

பிற்காலச் சோழர் காலத்திற்கு பிறகு (13ஆம் நூற்றாண்டுக்குப்) பின்னர் முழுமையாக நெசவுத் தொழிலுக்கு மாறினர். நெசவுத் தொழிலோடு, நிலக்கிழார்களாகவும், விவாசாயிகளாகவும், வணிகர்களாகவும் கூட உருவெடுத்தனர்.[சான்று தேவை]

திருப்பதி, திருவரங்கம் போன்ற ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பிலும் திருவண்ணாமலையில் பல்வேறு சடங்குகளை நடத்தவும் உரிமைபெற்றிருந்தனர். மேலும் பல ஆலயங்களுக்கு நிலம், நடை உள்ளிட்ட பல்வேறு நிவந்தங்களை இவர்கள் அளித்திருக்கின்றனர்.[4][5]

செங்குந்தர் பற்றிய இலக்கிய சான்றுகள்[தொகு]

திவாரக நிகண்டு,

 • செங்குந்தப் படையர்சேனைத் தலைவர் தந்துவாயர் காருகர் கைக்கோளர்

என்ற சூத்திரத்தின் மூலம் அகம்படிகளான கைக்கோளர் சேனாதிபதி பதவியை அடையலாம் என்பதை அறிய முடிகின்றது. மேலும் கைக்கோளர் குறிஞ்சி நாட்டார் எனக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவதால் இவர்கள் குறிஞ்சி நில அகம்படிகளாகலாம். செங்குந்தர்கள் சிறந்த வீரர்கள் என்பது


"சண்முகன்றன் சேனாபதிகளும் சேனையும் ஆனவர் செங்குந்தரே"

"சிங்களமாதிய பல்தேயம் வென்றவர் செங்குந்தரே" என்ற, பழைய நூல்களில் வரும் அடிகளால் விளங்கும்.

காங்கேயன் 12 ஆம் நூற்றாண்டில் வாழந்தவன். புலவர் ஒட்டக்கூத்தரைப் பேணியவன். இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சிக்கு உட்பட்டு ஆண்டுவந்த சிற்றரசன். இவனது தலைநகர் காஞ்சிபுரம். போர் மறவர்களாக விளங்கிய செங்குந்தர் மரபினன். புலவர் ஒட்டக்கூத்தர் இவனைப் போற்றிய நூல் காங்கேயன் நாலாயிரக் கோவை. [6]

செங்குந்தர் குலங்களின் வரிசை[தொகு]

செங்குந்தர் குலங்களின் வரிசை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

 • 1. 24 நாட்டு பட்டக்காரர்
 • 2. கருமாண வாத்தியார்
 • 3. வையாபுரி நாட்டு பட்டம்
 • 4. வாரக்கநாடு பட்டம்(வெள்ளையம்மன்)
 • 5. 6 நாட்டு பட்டம்
 • 6. கணேசர் பட்டம்(சேவூரார்)
 • 7. சமயம் பட்டம்(அன்னதான சோழர்)
 • 8. நல்லதம்பிரான்
 • 9. பூசன் குலம்
 • 10. பூசாரி குலம்
 • 11. குன்னத்தூர் குலம்
 • 12. கீரனூர் குலம்
 • 13. பட்டி குலம்
 • 14. ஒகாயனூரார் குலம்
 • 15. வேட்டிகாரர் குலம்
 • 16. அனந்த குலம்
 • 17. சிவியூரார் குலம்
 • 18. ராக்கி குலம்
 • 19. கருவலூரார் குலம்
 • 20. காசி வேலன் குலம்
 • 21. பீமன் குலம்
 • 22. பட்டாளியர் குலம்
 • 23. பாசியூரார் குலம்
 • 24. பொஞ்சி குலம்
 • 25. ஊமத்தூரார் குலம்
 • 26. கணக்கன் குலம்
 • 27. சென்னி குலம்
 • 28. செம்மாரர் குலம்
 • 29. செந்தேவன் குலம்
 • 30. புலி குத்தி குலம்
 • 31. சிறு வேங்கை குலம்
 • 32. சம்பங்கருங்காலி குலம்
 • 33. சாமக்குளத்தார் குலம்
 • 34. குள்ளன் குலம்
 • 35. மாகாளி குலம்
 • 36. பெரிய குலம்
 • 37. அன்னூரான் குலம்
 • 38. அல்லாம்பழனி குலம்(அன்னம்)
 • 39. பழனியூரார் குலம்
 • 40. செல்லங்குலம்
 • 41. உடையாங்குலம்
 • 42. புகழுரார் குலம்
 • 43. பெரிய குளத்தூ் குலம்
 • 44. சின்ன குளத்தூ் குலம்
 • 45. ஆனந்தம் குலம்
 • 46. முருக கூட்டம்
 • 47. கருது காளியம்மன் குலம்
 • 48. அறுபதாங்குடி குலம்
 • 49. வீரக்குமாரார் குலம்
 • 50. கட்ராயன் குலம்
 • 51. அம்பலவாணர் குலம்
 • 52. அந்தியூரார் குலம்
 • 53. பொன்தேவி குலம்
 • 54. புலவனார் பட்டம் (ராஜ குலம்)
 • 55. நெய்காரங்கூட்டம்(சிவா கூட்டம்)
 • 56. காரியூரார் கூட்டம்
 • 57. பரமகாளி கூட்டம்
 • 58. பூந்துரையான்
 • 59. காஞ்சாங் கூட்டம்
 • 60. கஞ்சிவேலாங்கூட்டம்
 • 61. பச்சையன் கூட்டம்
 • 62. ஆராங்குலம்
 • 63. மணிகட்டிசடையன் கூட்டம்
 • 64. அண்ணமார் குலம்
 • 65. அலங்கரான் குலம்
 • 66. ஆண்டி குலம்
 • 67. ஆனூரார் குலம்
 • 68. இராசி குலம்
 • 69. ஸ்ரீலஸ்ரீபரஞ்சோதிகுருக்கள் குலம்
 • 70. எருமைக்காரார் குலம்
 • 71. கன்னிமார் குலம்
 • 72. காளமேகப்புலவர் குலம்
 • 73. காடை குலம்
 • 74. காஞ்சியளன் குலம்
 • 75. குழந்தை செட்டி குலம்
 • 76. குமுட்டிகாளி குலம்
 • 77. கொம்மக்கோயில் குலம்
 • 78. கொக்காணி குலம்
 • 79. கொசப்பச்சையார் குலம்
 • 80. கோட்டைமாரி குலம்
 • 81. சமய முதலி குலம்
 • 82. சிலம்பு முதலி குலம்
 • 83. சின்னாஞ்செட்டி குலம்
 • 84. சூரிய முதலி குலம்
 • 85. செஞ்சி குலம்
 • 86. தடிவீரர்
 • 87. தாச முதலி குலம்
 • 88. தாடிக்கொம்பர் குலம்
 • 89. தீர்த்தமுதலி குலம்
 • 90. தீர்த்தகிரி குலம்
 • 91. தூங்கணார் குலம்
 • 92. பச்சையர் குலம்
 • 93. புள்ளிக்காரர் குலம்
 • 94. போக்கர் குலம்
 • 95. மணல் கொடியார் குலம்
 • 96. தொண்டைமண்டல குலம்
 • 97. மகிழி குலம்
 • 98. மண்ணையர்குலம்
 • 99. மாயன் குலம்
 • 100. வாழ்த்துமுதலி குலம்
 • 101. வெள்ளைசித்தர் குலம்
 • 102. வெள்ளைமணியக்காரர் குலம்
 • 103. வெள்ளியம்பர் குலம்
 • 104. செம்பூத்தர் குலம்
 • 105. ரங்கஜாலதண்டர் குலம்
 • 106. காவா முதலி குலம்
 • 107. கோட்டையண்ணன் குலம்
 • 108. சொக்கநாதர் குலம்
 • 109. கொத்துக்காரார் குலம்
 • 110. கொத்துக்காட்டான் குலம்
 • 111. கேரள கும்ப குலம்
 • 112. பூண்டிபெரியதனக்காரர் குலம்
 • 113. ஆயி குலம்
 • 114. தரகன் குலம்
 • 115. கொண்டைக்கட்டி தேவன் குலம்
 • 116. பூ முதலி குலம்
 • 117. கருப்பூரார் குலம்
 • 118. ஆராங்குலம்
 • 119. வடகுத்தியார் குலம்
 • 120. சோத்து கட்டி குலம்
 • 121. நவகற்கள் அணிந்தற் குலம்
 • 122. சமுத்திரபாளையத்தார் குலம்
 • 123. அருள்முருகன் கோத்திரம்
 • 124. ஆறுமுகம் கோத்திரம்
 • 125. கந்தசாமி கோத்திரம்
 • 126. கதிர்வேல் கோத்திரம்
 • 127. கார்த்திகேயன் கோத்திரம்
 • 128. குருநாதன் கோத்திரம்
 • 129. குமாரசாமி கோத்திரம்
 • 130. குழந்தைவேல் கோத்திரம்
 • 131. சக்திவேல் கோத்திரம்
 • 132. சரவணபவா கோத்திரம்
 • 133. சண்முகம் கோத்திரம்
 • 134. சிங்காரவேல் கோத்திரம்
 • 135. சுப்பிரமணியம் கோத்திரம்
 • 136. சுவாமிநாதன் கோத்திரம்
 • 137. செங்கோட்டுவேல் கோத்திரம்
 • 138. சேவற்கொடியோன் கோத்திரம்
 • 139. ஞானபண்டிதன் கோத்திரம்
 • 140. ஞானவேல் கோத்திரம்
 • 141. தங்கவேல் கோத்திரம்
 • 142. தண்டாயுதபாணி கோத்திரம்
 • 143. தணிகாசலம் கோத்திரம்
 • 144. பழனியப்பன் கோத்திரம்
 • 145. பாலமுருகன் கோத்திரம்
 • 146. மயில்வாகனன் கோத்திரம்
 • 147. மயூரப்ப்ரியன் கோத்திரம்
 • 148. மாணிக்கவேல் கோத்திரம்
 • 149. முத்துக்குமாரசாமி கோத்திரம்
 • 150. முருகன் கோத்திரம்
 • 151. வடிவேல் கோத்திரம்
 • 152. வஜ்ரவேல் கோத்திரம்
 • 153. வீரபத்திரன் கோத்திரம்
 • 154. வீரவேல் கோத்திரம்
 • 155. வெற்றிவேல் கோத்திரம்
 • 156. வேலவர் கோத்திரம்
 • 157. வைரவேல் கோத்திரம்
 • 158. ஜெயவேல் கோத்திரம்
 • 159. ஜெயமுருகன் கோத்திரம்
 • 160. கண்டி கோத்திரம்
 • 161. தங்க கம்பி கொடியான் கூட்டம்(புரவி ஆண்டவர் காக்கும் குளம்)[7]

மக்கள் பரப்பு[தொகு]

இவர்கள் தமிழகத்தில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில் நெசவாக இருந்தாலும், ஏராளமானோர் நூல் மற்றும் ஆடை சார்ந்த வணிகத்திலும் பிற தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பிடத்தகுந்த செங்குந்த முதலியார்கள்[தொகு]

கி.பி 18ம் நூற்றாண்டுக்கு முன்

அரசர்கள்[தொகு]

 • அனகன்
 • புழுவூர் வீரன்/நாராயணன்
 • கச்சிதலையான்
 • தஞ்சை வேம்பன்
 • காங்கேயன்

புலவர்கள்[தொகு]

கி.பி 19ம் நூற்றாண்டுக்குப் பின்

அரசியல்[தொகு]

விடுதலைப் போராட்டம்[தொகு]

இலக்கியம்[தொகு]

ஆன்மீகம்[தொகு]

அறிவியல்[தொகு]

கலைத்துறை[தொகு]

மக்கள் சேவை[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

 1. Studies in Indian history: with special reference to Tamil Nādu by Kolappa Pillay Kanakasabhapathi Pillay
 2. Ancient Indian History and Civilization – Sailendra Nath Sen. Google Books. http://books.google.co.in/books?id=Wk4_ICH_g1EC&pg=PA491&dq=kaikkolar+stronger+arms&lr=&cd=1#v=onepage&q=&f=false. பார்த்த நாள்: 4 December 2011. 
 3. Religion and society in South India: a volume in honour of Prof. N. Subba Reddy, V. Sudarsen, G. Prakash Reddy, M. Suryanarayana
 4. India before Europe by Catherine Ella Blanshard Asher, The Political Economy of Commerce: Southern India, 1500–1650, BySanjay Subrahmanyam
 5. Textiles in Indian Ocean Societies, By Ruth Barnes
 6. Senguntha Prabandha Thiratu, Archive.org, https://archive.org/details/SenguntharPrabanthaThiratu, பார்த்த நாள்: 4 December 2011 
 7. "Senguntha Prabandha Thiratu". Archive.org. பார்த்த நாள் 4 December 2011.
 8. Irschick, Eugene F. (1994). Dialogue and History: Constructing South India, 1795-1895. University of California Press. பக். 203. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-52091-432-2. https://books.google.com/books?id=gwEOfHfUFTkC&pg=PA203. 
 9. "புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு". தினமணி. பார்த்த நாள் 13 சூன் 2016.
 10. "தேர்தல் களம் காணும் செங்குந்த முதலியார்கள்!" (in தமிழ்). சரவணவேல் (தமிழ் நாடு: மின்னம்பலம்). 03.03.2019. https://minnambalam.com/k/2019/03/03/21. பார்த்த நாள்: 15.08.2019. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்குந்தர்&oldid=2795063" இருந்து மீள்விக்கப்பட்டது