ஈட்டியெழுபது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈட்டியெழுபது, ஒட்டக்கூத்தரால், செங்குந்தர் இனத்தைச் சார்ந்த மக்களைப் பற்றிய 70 பாடல்களின் தொகுப்பாகும். செங்குந்தர்கள் தம்முடைய பெருமையைப் பாடுமாறு ஒட்டக்கூத்தரைக் கேட்டதாகவும், அவர் அதற்கு மறுத்துவிட்டதால், செங்குந்தர்கள் தங்களுடைய தலைகளை அரிந்து சிரச்சிங்காதனம் செய்ததாகவும், அதன்பிறகே, அவர் ஈட்டியெழுபது இயற்றியதாகவும் அறிய வருகிறது. இப்பாடல்களில் செங்குந்தர் மரபினரின் பெருமையைப் பறைசாற்றுகிறது.

சைவ சமயத்தில் சிறந்து விளங்கிய புகழையும், முருகப் பெருமானுக்கும், செங்குந்தர்களுக்கும் இருந்த தொடர்பையும், வங்காள தேசம், யாழ்ப்பாணம் முதலியவற்றை வென்ற கதைகளையும், சோழ அரசர்களுக்கும், செங்குந்தர்களுக்கும் புலிக்கொடி சின்னமாக விளங்கியதினையும், செங்குந்தர் மரபில் சிறந்து விளங்கிய முக்கிய நபர்களைப் பற்றியும் புகழ்ந்து பாடப்பெற்ற நூலாகும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈட்டியெழுபது&oldid=1689880" இருந்து மீள்விக்கப்பட்டது