சிறீ சபாரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுந்தரம் சிறீ சபாரத்தினம் (Sri Sabaratnam, 28 ஆகத்து 1952 - 6 மே 1986) என்பவர் தமிழீழ விடுதலைப் போராளியும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.[1][2]

பிறப்பு[தொகு]

இலங்கை வடக்கு மாகாணம், யாழ்ப்பாணத்தில் கல்வியங்காடு எனும் ஊரில் 1952 ஆகஸ்ட் 28 இல் சுந்தரம்பிள்ளை முதலியார் - ராஜலட்சுமி தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். இவருக்கு கந்தசாமி, பாக்கியம், செல்வரத்தினம், ஜெயராணி எனும் நான்கு சகோதரர்கள் உள்ளனர்.[3][4]

கல்வி[தொகு]

இவர் யாழ்ப்பாணம் செங்குந்த இந்துக் கல்லூரியில்[சான்று தேவை] தனது கல்விச் செயற்பாடுகளை முடித்தார். மேலும் உயர்தர பரீட்சையில் சிறந்த சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான அவர் பல்கலைக்கழக படிப்பை புறம்தள்ளிவிட்டு தமிழீழ விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

தொண்டுகள்[தொகு]

இவர் சிறுவயதிலேயே தமிழ் சார்ந்த உணர்வை தன்னிடையே வளர்த்துக்கொண்டது மட்டுமல்லாமல் பிறரிற்கும் புகட்டினார். பல்கலைக்கழக மாணவர்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டினார். இளைஞர்களை விடுதலை பற்றி சிந்திக்க வைத்தார். அவர் விடுதலை கிடைக்கும்வரை திருமணம் செய்வதில்லை என்று சபதம் செய்தவர். ஆரம்ப காலத்தில் இயங்கிவந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கம் இவரின் தலைமையில் உருவாக்கப்பட்டது ஆகும்.[5][6]

இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காலங்களில் ஈழ தமிழ் மக்களுக்காக சிறைச்சாலைகளிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை உயரமான சிறீ (Tall Sri) என்று அடையாளப்படுத்தினர்.[6][7][7][7][8][9][10][11]

இறப்பு[தொகு]

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இரண்டும் காலப்போக்கில் ஒன்றாக இணைந்து தமிழீழத்தை மீட்டெடுக்க போராடும் என்ற கனவுடன் சிறீ சபாரத்தினம் இருந்த நிலையில் மாறாக பிரபாகரன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் இருந்தபோது அவரால் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்குள் கொண்டு வரப்பட்ட ஒருசில நபர்களை வைத்து சிறீ சபாரத்தினத்தைக் கொலைசெய்ய பிரபாகரனால் திட்டமிடப்பட்டது.[12] இந்தியாவில் வைத்தும் சிறீ சபாரத்தினத்தைக் கொல்ல தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் திட்டம் தீட்டினர். இறுதியில் 6 மே 1986 அன்று விடுதலைப் புலிகளின் தளபதி கிட்டுவின் தலைமையில் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கக் குழு ஒன்றினால் யாழ்ப்பாணத்தில் கோண்டாவில் பகுதியில் ஓர் புகையிலைத் தோட்டத்தில் வைத்து சிறீ சபாரத்தினத்தை கொன்றனர்.[3][4][11][12][12][12][13][13][13][13][14][14][15][16]

குறிப்புகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-10-30. பார்க்கப்பட்ட நாள் 2020-11-19.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-18. பார்க்கப்பட்ட நாள் 2020-11-19.
  3. 3.0 3.1 "தன்னிகரற்ற தலைவர் சிறீசபாரத்தினத்துக்கு வீர வணக்கம் !". Sri-TELO. 5 May 2012.
  4. 4.0 4.1 Marks, Thomas A. (1996). Maoist Insurgency Since Vietnam. Frank Cass. பக். 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7146-4123-5. https://books.google.com/books?id=_E6p-Z9UJ98C. 
  5. Jeyaraj, D. B. S. (7 August 2009). ""Operation KP": Extraordinary rendition of New Tiger Chief". dbsjeyaraj.com. Archived from the original on 13 பிப்ரவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 19 நவம்பர் 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. 6.0 6.1 Sri Kantha, Sachi (5 June 2013). "Kuttimani Files". Ilankai Tamil Sangam.
  7. 7.0 7.1 7.2 "The Martyrdom of Thangathurai & Kuttimuni". Tamil Nation.
  8. "Life Sentence for Neerveli Six". Tamil Times II (5): 4. March 1983. http://noolaham.net/project/32/3114/3114.pdf. 
  9. அ. ஜெ. வில்சன் (2000). Sri Lankan Tamil Nationalism: Its Origins and Development in the Nineteenth and Twentieth Centuries. C. Hurst & Co.. பக். 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85065-519-7. https://books.google.com/books?id=5AQcVvbHzdcC. 
  10. டி. பி. எஸ். ஜெயராஜ் (5 April 1985). "How strong are the "boys"?". பிரண்ட்லைன் 2. http://www.frontline.in/static/html/fl2701/stories/19850405080.htm. 
  11. 11.0 11.1 Rajasingham, K. T. (7 May 2012). "Sri Sabaratnam - The former TELO Leader, remembered on his 26th Death Anniversary". ஏசியன் டிரிபியூன். http://www.asiantribune.com/news/2012/05/06/sri-sabaratnam-former-telo-leader-remembered-his-26th-death-anniversary. 
  12. 12.0 12.1 12.2 12.3 "Remembering Sri Sabaratnam, the TELO leader". ஏசியன் டிரிபியூன். 6 May 2005. http://www.asiantribune.com/news/2005/05/06/remembering-sri-sabaratnam-telo-leader. 
  13. 13.0 13.1 13.2 13.3 Rajasingham, K. T.. "Chapter 57: Kittu, the LTTE legend". Sri Lanka: The Untold Story இம் மூலத்தில் இருந்து 2012-09-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120930061153/http://www.atimes.com/atimes/South_Asia/DI14Df01.html. பார்த்த நாள்: 2020-11-19. 
  14. 14.0 14.1 "Diary of Incidents". Tamil Times V (10): 14. August 1986. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://noolaham.net/project/33/3290/3290.pdf. 
  15. A. Jeyaratnam Wilson (2000). Sri Lankan Tamil Nationalism: Its Origins and Development in the Nineteenth and Twentieth Centuries. C. Hurst & Co.. பக். 128. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85065-519-7. https://books.google.com/books?id=5AQcVvbHzdcC. 
  16. Wickramasinghe, Nira (2006). Sri Lanka in the Modern Age: A History of Contested Indentities. University of Hawaii Press. பக். 289. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8248-3016-4. https://books.google.com/books?id=Y-xQ8qk9mgYC. 

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீ_சபாரத்தினம்&oldid=3929908" இலிருந்து மீள்விக்கப்பட்டது