செங்குந்த இந்துக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செங்குந்த இந்துக் கல்லூரி
Logo-Senguntha Hindu College.png
அமைவிடம்
யாழ்ப்பாணம், இலங்கை
தகவல்
வகைஅரசுப் பள்ளி
குறிக்கோள்உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல்
தொடக்கம்1934
நிறுவனர்கள்ச. இளையதம்பி, இந்துபோர்ட் இராசரத்தினம்
தரங்கள்1–13
மொழிதமிழ், ஆங்கிலம்
இணையம்

செங்குந்த இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் திருநெல்வேலி என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும். நல்லூர் செங்குந்த சந்தைக்கு முன்புறமாக அமையப் பெற்ற வீதியில் சுமார் 100 யார் தொலைவில் கொன்றையடிவைரவர் ஆலயத்திற்கு சொந்தமான பண்டாரி வளவில் இக்கல்லூரி அமைந்துள்ளது.[1]

வரலாறு[தொகு]

செங்குந்த இந்துக் கல்லூரி

நல்லூர் இராஜதானி சூழவுள்ள பகுதிகளில் பெருமளவு வசித்த செங்குந்த மக்களும் சைவப் பெரும்குடிமக்களும் தமது மக்களுக்கு சைவ சூழலில் கல்வி புகட்ட முடியாத நிலையை எண்ணி மனம் நொந்து இருந்த வேளை இரு பெரியார்கள் முன்வந்து உதவினர். ஒருவர் பிரபல சோதிட நிபுணரரும் செங்குந்த குல திலகமுமான கொண்டலடி வைரவ சுவாமிகள் கோவில் தர்மகர்தாவுமாகிய உயர்திரு ஷண்முகம் இளயதம்பி ஆவர். இவர் பராமரிப்பில் இருந்த கோவிலுக்கு சொந்தமான பண்டாரிவளவு என்றழைக்கப்பட்ட காணியில் 1932 காலப்பகுதில் கந்தவாசமண்டபம் (சங்கமடம்) அமைக்கப்பட்டது. இதுவே செங்குந்த இந்துக் கல்லூரியின் ஆரம்பம் ஆகும். செங்குந்த மகாசபை நிகழ்ச்சிகள் நடாத்த பயன்படுத்தப்பட்டது.

இவருடன் எங்கெல்லாம் சைவ பிள்ளைகள் சைவ பின்னணியில் கல்விபெற முடியாமல் அல்லல் படுகிறார்கள் அங்கு சைவ பாடசாலைகள் நிறுவும் சேவை புரிந்த சைவ வித்தியா விருத்தி சபையின் முகாமையாளரும் வழக்கறிஞர் உயர்திரு இந்துபோர்ட் இராசரத்தினம் ஆவர். இவ்விரு பெரியார்களின் கூட்டுமுயற்சியில் 1934 அக்டோபர் 1 விஜயதசமி அன்று அன்று இளயதம்பி சாஸ்திரிகள் வாழ்த்து உரைக்க வழக்கறிஞர் இந்துபோர்ட் இராசரத்தினம் பெரியாரினால் செங்குந்த இந்து கல்லூரி இரு மொழிப்பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது.

1949 இல் செங்குந்த இந்து ஆங்கிலப் பாடசாலையாக பெயர் மாற்றம் கண்டது. 1959 இல் உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

-S . பேரா (நல்லூர்)

பாடசாலை அதிபர்கள்[தொகு]

 • முத்துக்குமாரசுவாமி
 • கணபதிப்பிள்ளை (1944-1967)
 • எஸ். பி. நடராசா (1986-1970)
 • இலங்கை நாயகம் (1971-1972)
 • வரணி சிவப்பிரகாசம்
 • நாகராஜா (1973)
 • இ. பொன்னம்பலம் (1974)
 • வி. மகாதேவா (1975-1977)
 • எஸ். சிவப்பிரகாசம் (1978)
 • ப. சுவாமிநாதசர்மா (1979-1985)
 • ம. சண்முகலிங்கம் (1986)
 • வி. அரியநாயகம் (1987)
 • எம். பரமேஸ்வரன் (1988-1995)
 • ஏ. ராஜகோபால் (1995-1999)
 • திருமதி சி. விஸ்வலிங்கம் (1999-2007)
 • இரத்தினம் பாலகுமார் (2008 முதல்)

கல்லூரிக் கீதம்[தொகு]

வாழ்த்திடுவோம் எங்கள் கல்லூரித் தாயை
வளமுடன் மாணவர் நாமே.
செங்குந்த இந்துக் கல்லூரியை என்றும்
எங்களுக்குக் கல்வி அளித்து
பொங்கும் புகழுடன் வாழ்ந்திட நாமே
திங்கள் முடியோனைத் துதிப்போம்
கன்னல் சுவை தரும் தமிழ்மொழியுடனே
அன்னிய ஆங்கிலம் சேர்த்து
இன்னிசை யோடுயர் இலக்கியம் பலவும்
என்றுமே அளித்திடும் அன்னாய்
இத்தல மீதினில் மாணவர் எல்லாம்
உத்தமாராய் வாழ வேண்டி
சத்தியம் ஒழுக்கம் எனுமுயர் பண்பை
எத்தினமும் ஊட்டும் தாயே
வறுமையாய் வாடினும் வளமுற்று வாழினும்
மறந்திட மாட்டோம் உன் நலனை
குறைகளின்;றி உனைக் குவலயம் போற்றிட
இறைவனை வேண்டுவோம் நாமே
எந்தை போல் வந்தெமக் கறிவுரை கூறும்
இராசரெத்தினம் என்றும் வாழ்க
சிந்தையில் இந்துக்கள் கல்வியை நிறைத்த
'இந்துபோட்' ஸ்தாபனம் வாழ்க
வாழிய வாழிய எங்கள் கல்லூரி வாழிய வாழிய என்றும்
வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
வளம் பல் பெருக்கி என்றும் வாழிய எங்கள் கல்லூரி!

இயற்றியவர் சிற்பி. எஸ். சரவணபவன்

உசாத்துணை[தொகு]

 1. "செங்குந்த இந்துக் கல்லூரி". J/SENGUNTHA HINDU COLLEGE. பார்த்த நாள் 10 August 2014.